வியாழன், 17 ஜூன், 2010

திருமாவளவனின் தாயார் புகார் மனு சொத்தை அபகரிக்க முயற்சி-போலீஸ் கமிஷனரிடம்

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் தனது சொத்தை அபகரிக்க முயற்சி நடப்பதாகவும், அவர்கள் நடவடிக்கை [^] எடுக்க வேண்டும் என்றும் கோரி விடுதலை சிறுத்தைகள் [^]கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின தாயார் பெரியம்மாள் போலீஸ் [^] கமிஷ்னரிடம் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நான் கடந்த 2006ம் ஆண்டு அசோக்நகர் 100 அடி ரோட்டில் முதலாவது அவென்யூவில் உள்ள 3 கிரவுண்ட் நிலத்தை, பாலகிருஷ்ணன் என்பவரது வாரிசுகளான மீனாட்சி, லட்சுமி, கற்பகம், சுந்தர மூர்த்தி ஆகியோரிடமிருந்து விலைக்கு வாங்கினேன். கோடம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இது பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சொத்து தொடர்பாக கே.வி.எஸ். பிரசாத் என்பவர், போலி ஆவணங்கள் மூலமாக வில்லங்கங்களை ஏற்படுத்தி வருகிறார்.

இது தொடர்பாக வட்டாட்சியர் நடத்திய விசாரணையில், எதிர் தரப்பினர் போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற்றது தெரியவந்துள்ளது.

இந்த சொத்தை வேதா அருண் நாகராஜன் என்பவருக்கு ரூ.5 லட்சம் வாங்கி கொண்டு நான் அடமானமாக கொடுத்துள்ளேன். இந்த சொத்து தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று, நாங்கள் காலி செய்தோம்.

சொத்து வாங்கிய பின்னர் மாநகராட்சிக்கு தவறாமல் சொத்து வரியும் செலுத்தி வந்துள்ளேன். எனது மகன் விடுதலை சிறுத்தை கட்சி தலைவராகவும், எம்.பியாகவும் இருந்து கொண்டு சமுதாய நலனுக்காக போராடி வருகிறார்.

எனது மகன் கேட்டுக் கொண்ட தன் பேரில் நான் சொத்தை அனுபவிப்பதில் இருந்து விலகியுள்ளேன். இருப்பினும் சட்டப்படியான ஆவணங்கள் மூலம் மறைமுகமாக நானே சொத்தை அனுபவித்து வருகிறேன்.

எனவே எனது சொத்தை அபகரிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
பதிவு செய்தவர்: Nagaraj
பதிவு செய்தது: 17 Jun 2010 5:20 pm
இந்த ரவுடிகளை வைத்துப் பிழைக்கும் பிரமுகர்களைச் சுற்றி பெருங்கூட்டமா இருக்கும் தொண்டர்கள் எலும்புகளைக் கவ்வியவாறு சுற்றி வருகின்றனர். இப்படி வசூலிப்பதற்கென்றே ஒரு கட்சியும், கூட்டமும் உருவாகிவிட்டது. பல இடங்களில் வர்த்தகர்களும், முதலாளிகளும் எதற்கு வம்பு என்று பணம் தருவதோடு, சிலர் கட்சியிலும் சேர்ந்து வருகின்றன

கருத்துகள் இல்லை: