திங்கள், 14 ஜூன், 2010

ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு ஸ்லம்டாக் குழந்தை நட்சத்திரங்களான ரூபினா அலிக்கும் அசாரூதீன் முகமதுக்கும்

ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தில் நடித்த குழந்தைகள் இருவருக்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பட வாய்ப்பு வந்துள்ளது.

இந்தியாவில் தயாரான ஸ்லம்டாக் மில்லினர் படம் 2008-ல் ரிலீசாகி உலக அளவிலான விருதுகளை அள்ளி குவித்தது. இப்படத்தில் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார், கிராமி விருதுகளைப் பெற்றார்.

குறிப்பாக இதில் நடித்த ரூபினா அலி என்ற சிறுமியும், அசாரூதீன் முகமது அலி என்ற சிறுவனும் நடிப்புத் திறனுக்காக பெரிதும் பேசப்பட்டார்கள். இவர்கள் மும்பை குடிசை பகுதியில் வசித்தவர்கள். இவர்களின் வறுமை நிலையை கண்டு தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வந்தன. வீடுகளும் ஒதுக்கப்பட்டன. ஆனால் புதுப்பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.

இரு வருடங்களுக்கு பிறகு தற்போது ஸ்லம்டாக் குழந்தை நட்சத்திரங்களான ரூபினா அலிக்கும் அசாரூதீன் முகமதுக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தப் புதிய படத்தின் பெயர் 'லார்ட் ஒன்ஸ் லேடி'. படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்குகிறது. இரு குழந்தைகளும் 25 நாட்கள் நடிக்க உள்ளனர். ஒரு நாள் சம்பளமாக தலா ரூ.66 ஆயிரம் பேசப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் ரூ. 33 லட்சம் இவர்களுக்கு சம்பளமாகக் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை: