ஞாயிறு, 13 ஜூன், 2010

அந்தமானில் பூகம்பம்- சென்னையிலும் நில அதிர்ச்சி

அந்தமான் நிக்கோபார் தீவுகளில், நிக்கோபார் பகுதியில் நேற்று நள்ளிரவு சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சி சென்னையிலும் பல இடங்களில் உணரப்பட்டது.

நிக்கோபார் தீவுகளில் நேற்று நள்ளிரவு 12.56 மணியளவில் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் பின்னர் இது வாபஸ் பெறப்பட்டது.

இந்த கடும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்போ, பொருள் இழப்போ ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை.

பூகம்பம் காரணமாக தலைநகர் போர்ட்பிளேரில் மின்சாரம் தடைபட்டது. மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டுவெளியே வந்தனர். இருப்பினும் சில மணி நேரங்களில் நிலமை சகஜமடைந்தது.

சென்னையில் நில அதிர்ச்சி

அந்தமான் பூகம்பத்தின் எதிரொலி சென்னையிலும் உணரப்பட்டது. சென்னை நகரின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. சில விநாடிகள்
இவை நீடித்தன. இருப்பினும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கோபாலபுரம், கோடம்பாக்கம், திருவான்மியூர், போரூர், அண்ணாநகர் மற்றும் பல்வேறு புறநகர்ப் பகுதிகளில் நில அதிர்வை மக்கள் உணர்ந்தனர்.

கருத்துகள் இல்லை: