ஞாயிறு, 13 ஜூன், 2010

பா.சிதம்பரம,புலம் பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்கள் அந்நாடுகளுக்கு விசுவாசமாக நடக்கின்றனர்

புலம் பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்கள் அந்நாடுகளுக்கு விசுவாசமாக நடக்கின்றனர் எனவும் அந்நாடுகளின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கின்றார்கள் எனவும் இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் கூறியுள்ளார். காரைக்குடியில் உள்ள  குன்றக்குடி அடிகளார் பெண்கள் கல்வியல் கல்லூரியில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு ஈழத் தமிழ்ர் பிரச்சினை குறித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசிடமிருந்து இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சாதகமான சமிக்ஞைகள் கிடைக்கின்றன. இலங்கையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்திருக்கும் தமிழ் அகதிகளை சம உரிமைகளுடன் சொந்த இடங்களில் ஆறு மாதங்களுக்குள் தமிழ் அகதிகள் அனைவரும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விடுவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு உறுதிமொழி தந்துள்ளார்.
இலங்கையின் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளவும் தமது இடங்களில் குடியேறியிருக்கும் வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காக 50,000 வீடுகளை அமைப்பதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.
இலங்கையில் 1984 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட இனப்பிரச்சினைக்கு அன்று முதல் இன்று வரை இலங்கையின் ஐக்கியத்துக்கும்இ இறைமைக்கும் குந்தகம் நேராத வகையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்திய அரசுகள் வலியுறுத்தி வந்துள்ளன.
இலங்கை அரசு அரசமைப்பில் மாற்றம் செய்தும் சம அதிகாரங்களை தமிழ் பிரதேசங்களுக்கு வழங்க முடியும். இந்த யோசனையின் அடிப்படையில் தமிழர் பிரச்சினைக்கு தற்போது நிரந்தர தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: