சனி, 19 ஜூன், 2010

ஜெயலலிதா, இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக 18 அம்சத் திட்டம


சென்னை: இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக 18 அம்சத் திட்டம் ஒன்றை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பரிந்துரைத்துள்ளார்.

இந்த 18 அம்சத் திட்டத்தை நிறைவேற்றிய பிறகுதான் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
1. இலங்கை வடபகுதி முகாம்களில் இன்னும் 1 லட்சம் பேர் ஆதரவற்றவர்களாய் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

2. மறு குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செய்து தரப்பட வேண்டும்.

3. அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கப்பட வேண்டும்.

4. அழிக்கப்பட்ட நீர் ஆதாரங்கள் சரிசெய்யப்பட வேண்டும்.

5. மக்களுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும்.

6. கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.

7. புதிய பள்ளிகள் கட்டப்பட வேண்டும்.

8. பழைய பள்ளிகள் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.

9. போரினால் கணவனை இழந்த விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

10. போரினால் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் கவுன்சிலிங் தரப்பட வேண்டும்.

11. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் புனர் நிர்மாணம் செய்து தரப்பட வேண்டும்.

12. கோயில்கள், தேவாலயங்கள், புத்த மடாலயங்களாக மாற்றப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

13. போரில் ஊனமுற்றவர்களுக்கு சிகிச்சையும், மறுவாழ்வும் தர வேண்டும்.

14. ஆண்கள் குறைந்துவிட்டதால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மனரீதியான அழுத்தம் போக்கப்பட வேண்டும்.

15. பெண்களே நடத்தும் தொழிற்கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

16. வருகின்ற அனைத்து நிவாரண உதவிகளும் தமிழ் மக்களுக்கு சரியான முறையில் சென்றடைய வேண்டும்.

17. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.

18. பத்திரிகையாளர்கள் தமிழர்களை சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் நிறைவேற்றிய பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் உலகமே எதிர்பார்க்கிறது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமையும், சுய மரியாதையும் கொண்ட சமூகம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார் ஜெயலலிதா.

இனி ஈழத்தமிழர்களின் சகல துன்பங்களும் பறந்து போய்விடும்.ஜெயலலிதா தனது கோடை நாடு ஓய்வு எடுத்து முடித்துவிட்டார். தி மு கஅவை இனி கதிகலங்க அடிக்கப்போகிறார்  , யார் எங்கே கொண்டுவாருங்கள் ஈழத்து மாட்டரை எடு பாயிண்டுகளை ஈழம் மாட்டேர்தான் எப்பவும் நமக்கு கைகொடுக்கும் சமாச்சாரம். சபாஷ் சரியான ஜதீஸ்வரம் தான் போங்கள்.

கருத்துகள் இல்லை: