ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

கஜினி முகம்மதுவுக்கு சோம்நாத் கோயிலும் உண்மையில் என்னதான் நடந்தது? தயானந்த சரஸ்வதியின் "சத்தியர்த்தப் பிரகாரம் நூலிலிருந்து

May be an illustration of 1 person, beard and text
கஜினி முகம்மது
May be an image of temple and outdoors
சோம்நாத் கோவில்
Sundar P : கஜினி முகம்மதும் சோம்நாத் கோவிலும்: கஜினி முகம்மது சுமார் 20,000போர் வீரர்களுடன் சோமநாத் கோவிலக் கொள்ளையடிக்க வந்து கொண்டிருந்த சமயம்..... ஒற்றர்கள் முலம் உண்மையை அறிந்த குஜராத் அரசர்கள் தங்களுடைய குருவான சோமநாதபுர தலைமை அர்ச்சக‌னிடம் '"எங்களிடம் நாலரை லட்சம் சைன்னியங்கள் இருப்பதால், அவனை வழியிலேயே சென்று அடித்துத் துரத்திவிடலாம் சுவாமி! உத்தரவு கொடுங்கள்"என்று விண்ணப்பித்தனர். அதற்கு அந்த குருவோ, "நீங்கள் சொல்லுவதற்கு முன்னரே கணேசனும், காளியும், பைரவரும் என் கனவில தோன்றி,"மிலேச்சன் வருகிறான்;அவனால் அரசர்களுக்கு யாதும் கேடு விளையாமல் காப்பாற்றுவோம். ஆனால் அதற்கு விசேஷமான ஹோமங்களும், பிராமணர்களுக்கு அன்னதானம், கன்னிகாதானம் முதலியவை நடைபெற வேண்டும்," என்று சொல்லி மறைந்தார்கள் ஆதலால், யுத்தத்திற்குப்‌போக வேண்டாம். புராணங்களிலும், பிராமண வாக்கிலும்
உங்களுக்கு வரவர நம்பிக்கை குறைந்து வருவதால், இவ்வித இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே யுத்தத்திற்கு செலவழியும் பொருளை
பிராமணர்களுக்கும் தானம் கொடுத்து விடுங்கள்"என்று கூறினார்...
அரசர்களும் போர்செய்யும் எண்ணத்தைக் கைவிட்டு, குருவின் ஆணைப்படி 1,008 யாகசாலைகள் உண்டு செய்து, அநேக பார்ப்பனர்களை வைத்து ஹோமங்களும், வருண ஜபமும் நடத்திக் கொண்டு வந்தனர்.
முகம்மது கஜினியும், சைன்னியங்களும் எட்டு மைல்களுக்கு அப்பால் வந்துவிட்டார்கள்.
கஜினி தன்னை எதிர்க்க யாரும் வராததைக் கண்டு உண்மையை உணர்ந்து வர ஓர் ஒற்றனை அனுப்பினான்.
அப்பொழுது அங்கு வந்த கஜினியின் ஒற்றன்,
நெப்பெறிந்து கொண்டிருக்கும் தீக்குழிகளையும், நெய், கோதுமை முதலிய
தின்பண்டங்களை அக்குழியினுள் பலர்‌சொரிந்து கொண்டிருப்பதையும்,
பலர் கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு ஜபம் செய்வதையும் பார்த்து வியப்படைந்தவனாய் கஜினியை அணுகி, 'அரசே,பெரிய தீக்குழிகளில் பலர் கோதுமை முதலிய தானியங்களையும்,நெய்யையும்,
சந்தனக் கட்டை மற்றும் விலையுயர்ந்த பொருள்களையும் போட்டு எரிக்கிறார்கள்.
மனிதர்களின் தலைகள் பல தண்ணீரில் அசையாமல் மிதந்து கொண்டிருக்கின்றன.
ஊரெல்லாம் புகையால் மூடிக்கொண்டிருக்கின்றது..." எனத் தெரிவித்தான்!
எதிரி வருவதை அறிந்த 11,000 கோயில் பார்பனர்களும் (அக்கோவிலில் எப்போதுமே இவ்வெண்ணிக்கையில் பார்பனர்கள் இருப்பார்கள்) வெளியிலிருந்து அன்னதானத்துக்கு அழைத்துவரப்பட்ட பிராமணர்களும் கலந்து யோசித்து 800பேர் தவிர,மற்றவர்கள் அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தார்கள். சூறையாடல் நிறைவு பெற்ற பின், கோவிலின் குருக்கள் ஏனைய இந்து அரசர்களைப் போல் முசல்மான் கஜினியையும் வசப்படுத்த எண்ணி தான் ஊர்ந்து வருகின்ற‌ முத்துப் பல்லக்கை அலங்கரித்து, சீடர்களும், தாசிகளும் புடைசூழ எதிர் கொண்டழைத்து வரும்படி அனுப்ப,
கஜினியும் அப்பல்லக்கை தனது ஒட்டகத்தின் மீது போடச்செய்து ஆலயத்திற்குள் வந்து சேர்ந்தான்.
கோவில் மூலஸ்தானத்தில் சுவாமிக்கு எதிரிலேயே கஜினிக்காக பெரிய சிம்மாசனம் போடப்பட்டிருந்தது. அவ்வாசனம் ஐம்பது இலட்ச‌ ரூபாய்கள் மதிப்புள்ள, "வியாசபீடம்" எனப் பெயர் கொண்டதாகும்.
கஜினி ஆசனத்தில் உட்கார்ந்தபின்,
குருவானவர் கஜினியைப்‌பார்த்து,
'ஓ! இராஜாதிராஜனே! தங்களின் நேர்மையான ஆட்சியன்றோ பிராமாணர்களாகிய எங்களைக் காப்பாபாற்றுவது?' "நாவிஷ்ணு;ப்ருதிபதீ" (விஷ்ணு வல்லான் அரசனன்று)....விஷ்ணுவின் அவதாரமாகிய தங்களைக் குறித்து இங்குள்ள போலி ராஜாக்கள் என்னென்னவோ உளறினார்கள்.
என்‌ சொல்லம்புதான் அவர்களை அடக்கின.
ஆதலால், தாங்கள் பார்ப்பனராகிய எங்களுக்கு எவ்வித இடையூறும் செய்யலாகாது. மூன்று கோடி ரூபாய் காணிக்கையாகச் தங்கள் தாளிணையில் சமர்ப்பிக்கிறேன்,"என்று சொன்னான்.
ஆடம்பரமான கோவில், அலங்கரிக்கப்பட்ட மூர்த்தி, அழகிய சிம்மாசனம்,
கையிலகப்பட்டதைக் கவர்ந்து கொண்டு கம்பி‌ நீட்டியவர்கள்‌போக எஞ்சியிருப்பவர்களும், ஆபிசார(சூனிய) மந்திரம் ஜெபித்துக்கொண்டிருப்பவர்களுமான பார்ப்பனர்கள், எரிந்து கொண்டிருக்கிற ஆயிரக்கணக்கான அக்னிக்குழிகள்,
அவைகளில் சொரியும்படிக் கொட்டி வைக்கப்பட்ட விலையுயர்ந்த‌ பண்டங்கள்,
அக்கிரமமே உருவெடுத்து வந்த அர்ச்சக குருவின் அலங்கார வேஷம் இவைகளில் கவனம் செலுத்தியிருந்த கஜினி, 'காணிக்கையைப்‌பெற்றுக் கொண்டு எங்களை விடுவித்து விட வேண்டு'மென்ற சொல்லைக் கேட்டவுடன், சிம்மாசனத்திலிருந்து சீறி எழுந்து, "அட காபிர் பன்றியே!என்னைப் பிச்சைக்காரனென்றா நினைத்தாய்?
கல்லைக் கடவுளாக வணங்கும் கயவரைக் கருவறுக்கவன்றோ இங்கு வந்துள்ளேன்" என்று கூற,
கல்நெஞ்சக் குருவானவன் கண்கள் கலங்க கஜினியின் காலில் விழுந்து, "ஐயனே!
இதெல்லாம் எங்கள் வயிற்றுப் பிழைப்புக்கான ஏற்பாடுகள்; எங்களைக் காக்க வந்த கடவுளே,
உயிர்ப்பிச்சை தந்தருள்க"
என்று பலதரம் அழுது வேண்டிக் கொண்டான்.
உடனே கஜினி, ''இல்லை, இல்லை, உங்களுக்கு நான் இரக்கங்காட்டேன். பாமரர்களை ஏய்த்து பசிப்பிணியைப் போக்கத்தக்க பற்பல அரிய பண்டங்களை,
அநியாயமாக அக்கினியிலிட்டு அவைகளைச் சாம்பலாக்குகிற, அத்தீயையும்,
கல்லையும் கடவுளாக வணங்கும் நீங்கள்,
கடவுளுக்கும் துரோகிகளாதலால்,
உங்களுக்கு இரங்குவது தர்மமன்று"என்று கூறி, பொக்கிஷத்தைக் காட்ட சொல்லச் சிலவற்றைக் காட்டி, இவ்வளவுதான் உள்ளது' எனக் கூறினான் குரு.
கஜினி இக்கோவிலைக் குறித்த‌ விபரமனைத்தும் ஒற்றர்களின் மூலமாக முன்னரே அறிந்தவனாகையால், குருவின் கைவிரலில் எண்ணெய்த் துணியைப் சுற்றித் தீ வைக்கச் சொல்ல, அனைத்தையும் காட்டி விட்டான் குரு.
கஜினி பொருட்களை எல்லாம் வாரியெடுத்தவுடன், தன் படைகளைக் கொண்டு அக்கோவிலை இடிக்கப் செய்தான்.
ஆலயமானது தரையோடு தரையாக அமர,
அதுவரை அந்தரத்தில் நின்றிருந்த அற்புத லிங்க மூர்த்தியும் காந்தக் கல்லின் கவர்ச்சியிலிருந்து விடுபட்டுப் தரையில் விழுந்து புரண்டது.
இதைப்பார்த்த கஜினிக்கு இன்னும் கோபம் அதிகரித்துக் தன் கையிலிருந்த தண்டாயுதத்தால் அந்த விக்ரகத்தை ஓங்கி அடிக்க, அது சின்னபின்னமாகச் சிதறி உடைந்து, அதிலிருந்து முத்து முதலிய மணிகள் கொட்டியது.
பார்த்தான் கஜினி. அருகிலிருந்த பார்ப்பனக் குருவை ஓங்கி அறைந்து,
"அட‌ப்பதரே! கல்லை வணங்குவது கடவுளுக்குச் சம்மதம் இல்லையென்று சொன்னேன்.
அவ்வுண்மையைக் கண்கூடாகப் பார்!
கல்லை உடைத்தெறிந்த எனக்குக் களிப்பைதரும் நவமணிகளையும்,
கல்லை வணங்கும் உங்களுக்குக் கடும் துயரத்தையும் அளித்து விட்டார்".
இவ்வாறு இழி‌மொழிகளை கூறி,எல்லாப பொருள்களையும் ஒட்டகத்தின்‌ மீது ஏற்றச்‌செய்து, அத்தோடு ஆறாயிரம்‌ பெண்களையும், ஐயாயிரம் ஆண்களையும் பிடித்துக் கொண்டு தன் நாடு திரும்பினான்.
இந்த 11,000 கைதிகளில் 800பேர் மட்டுமே பார்ப்பனர்கள்; ஏனையோர் பாமரர்கள்,
ஏன் அவர்களுக்கு இந்தக் கதி வந்தது?
பார்ப்பன குருவை நம்பியதால்!
இவர்களில் ஆண்களுக்கு குதிரைகளுக்கு புல் வெட்டும் வேலையையும்,
பெண்களுக்கு துலுக்கச் சிப்பாய்களின் வைப்பாட்டியாயிருத்தலையும் செய்யக் கட்டளையிட்டான் கஜினி.
இவ்விதமாக‌பாரதநாட்டின் எல்லையைக் கடந்து ஆப்கானிஸ்தான் சென்றவுடன்,
அங்குள்ள பெரிய மவுல்லி பார்த்து, "ஐயோ அரசரே! இக்காஃபிர்களுக்கு ஏன் தீனி போட்டு வைத்திருக்கிறீர்கள்?
இது நமது நபிநாயகத்தின் திருவானைக்கு ஏற்றதல்லவே.
ஆகையால்,கொன்று விடுங்கள்"என்று சொல்லச் கஜினி,ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டுப்‌ பெண்களைப் பிடித்துக் கொண்டு போய்விட்டான்.
இச்சரித்திரம் விரிவான புத்தக வடிவில் உருது மொழியிலும், குஜராத்தி மொழியிலும் எழுதி அச்சிடப்பட்டிருக்கிறது.
இந்த குறிப்பை "தயானந்த சரஸ்வதியால்" எழுதப்பட்ட "சத்தியர்த்தப் பிரகாரம்"
11வது அத்தியாயத்தில் காணலாம்!
பதிவுக்கு உதவிய நூல் : "ஞான சூரியன்"
சுவாமி தயானந்த சரசுவதி.
நன்றி
மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம்
(மீள்பதிவு)

கருத்துகள் இல்லை: