ராதா மனோகர் : 1868 இல் ராமநாதபுரம் ஜாமீன் அரசு வாரிசுரிமை வழக்கு லண்டன் பிரிவி கவுன்சிலில் நடந்தது பற்றி தோழர் அருள்மொழி தெளிவாக கூறியதை பார்த்தேன்.
ஆரிய மனுவாதமும் திராவிட கோட்பாடும் நேரெதிராக மோதிக்கொண்ட வழக்கு அது!
திராவிட கோட்பாட்டின் மனித உரிமை விழுமியம் வெற்றி பெற்ற வரலாறு அது.
ஏறக்குறைய இதே போன்றொதொரு வழக்கு 1971 ஆக்டொபர் மாதம் யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் நுழைவு பற்றியும் நடந்தது.
ஒடுக்க பட்ட மக்களின் கோயில் நுழைவுக்கு எதிராக ஆதிக்க ஜாதியினர் ஆரிய மனுவாதிகளின் ஏவல் பேய்களாக அடக்குமுறையை அவிழ்த்து விட்டிருந்தார்கள்!
நீதிமன்றங்களிலும் இது எதிரொலித்தது.
இவ்வழக்கின் உச்ச நிகழ்ச்சியாக கோயில் நுழைவிக்கு எதிராக லண்டன் பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்தார் முன்னாள் அமைச்சர் சி சுந்தரலிங்கம்!
லண்டன் லார்ட் வில்பர் போர்ஸ் Lord Wilber Forse. லார்ட் சைமன்டெல் Lord Simon dale. லார்ட் குரோஸ் செல்சீ Lord grose chalse . சேர் கோர்டன் வில்மேர் sir gorden wilmer
ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
சி சுந்தரலிங்கத்தின் மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது
அதன்பின்பு இலங்கை குடியரசாகி விட்டது
பிரிவி கவுன்சிலுக்குக் மேன்முறையீடு செய்யும் வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது
இலங்கையில் இருந்து லண்டன் பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யப்பட்ட கோயில் நுழைவுக்கு எதிரான வழக்கே இறுதி பிரிவியூ கவுன்சில் வழக்காகியது
இந்த இரண்டு வழக்குகளும் ஆரிய மனுவாதத்திற்கு ஒரு சட்ட அங்கீகாரம் வேண்டி தொடுக்கப்பட்டவையாகும்
இரண்டலுமே ஆரிய மனுவாதம் தோற்கடிக்கப்பட்டது
இந்தியாவில் நிலை கொண்டிருக்கும் ஆரிய மனுவாதத்தின் ஒரு நீட்சியாகத்தான் யாழ் சைவ அரசியல் உள்ளது என்பதை இந்த வழக்கும் கூட அழுத்தம் திருத்தமாக எடுத்து காட்டுகிறது
தோழர் அருள்மொழியின் Annamalai Arulmozhi இந்த காணொளியை கண்டிப்பாக பாருங்கள்.
கடந்து போய்விடாதீர்கள். இதில் முக்கிய வரலாற்று செய்தி இருக்கிறது.
1868 இல் ராமநாதபுரம் ஜாமீன் அரண்மனையில் நடந்த ஒரு வழக்கு!
1850 களில் ஜமீன்தார் இறந்துவிட்டார்
அப்போது ஜாமீன் இளவரசராக திரு முத்துராமலிங்கம் என்பவர் தத்து எடுக்கப்படுகிறார்.
அப்போது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி ஒரு சட்டம் போடுகிறது!
அது டாக்ட்ரின் ஆப் லாஷ் என் குளோஸஸ் (The doctrine of laches)
அதாவது ஒரு மன்னரோ ஒரு ஜமீனோ வாரிசு இல்லாமல் காலமாகி விட்டால் அந்த பகுதியின் மீது அவர்களின் உரிமை போய்விடும்
அது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனிக்கு முற்று முழுதாக சொந்தமாகி விடும்.
அவர் மனைவி உயிரோடு இருக்கும் காலம் வரைக்கும் அவர் இருக்கலாம்.
அதன் பின்பு அந்த பகுதி பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியோடு இணைக்கப்படும்.
இதை எதிர்த்து லட்சுமி பாய் போராடினாங்க ..
இதை எதிர்த்து வீரமங்கை வேலு நாச்சியார் போராடினாங்க
ராமநாதபுரம் ஜாமீன் கிழக்கிந்திய கம்பனியோடு இணைக்கப்பட போகிறது என்று ஆணையும் பிறப்பித்து விட்டார்கள்,
இதற்கு எதிராக ராமநாதபுரம் இளவரசர் முத்துராமலிங்கம் வழக்கு போட்டார்.
நான் இளவரசர் இருக்கும்போது நீங்கள் எப்படி ஜமீனை எடுக்க முடியும் என்று கேட்டார்,
அப்போது சாஸ்திரங்களை எல்லாம் உதாரணமாக காட்டி,
உங்களை தத்து எடுத்ததே செல்லாது என்று அவர்கள் வாதிட்டார்கள்
ஆனால் நீதிமன்றம் முத்துராமலிங்கத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது
ஆனால் அவர்களின் அந்த வழக்கை லண்டன் பிரிவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்கிறார்கள்.
ஏன் தத்து எடுத்தது செல்லாது என்று பிரிவி கவுன்சில் கேட்கிறது
கணவர் இறந்து விட்டார் . எனவே மனைவி தத்து எடுத்தது ஏன் செல்லாது என்பது கேள்வி.
அதற்கு அவர்கள், இந்து சாஸ்திரத்தின் படி கணவர் உயிரோடு இருக்கும்போது தத்து எடுக்கும் உத்தரவை கொடுத்தாரா?
அப்படி அவர் உத்தரவு Mandate கொடுத்ததாக நீங்கள் கூறவில்லை
எனவே நீங்கள் தத்து எடுத்தது செல்லாது என்று மதுரை கலெக்டர் சார்பாக பேசிய வழக்கறிஞர்கள் வாதித்தார்கள்.
இந்த வாதத்திற்கு பதிலடியாக ,
ராமநாதபுரம் இளவரசர் முத்துராமலிங்கம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் ,
அந்த சாஸ்திரம் ஆரிய மனுவாத சிந்தனை மரபில் வந்தவர்கள் belonging to Ariyan school of law பி லோங்கிங் டு ஆரியன் ஸ்கூல் ஆப் லா
நாங்கள் திராவிட கோட்பாட்டை பின் பற்றுபவர்கள் Dravidian School of law திராவிடியன் ஸ்கூல் ஆப் லாவை பின்பற்றுகிறர்வர்கள்
ராமநததபுரம் ஜாமீன் அன்று காப்பாற்றப்பட்டதற்கு காரணம்
நாங்கள் திராவிட சித்தாந்த மரபினர் டிராவிடியன் ஸ்கூல் என்று அவர்கள் எடுத்து வைத்த அந்த வாதம்
நாங்கள் கணவர் இறந்து விட்டாலும் மனைவி தத்து எடுத்து கொள்ளலாம்
எங்களுக்கு பெண் உரிமை உண்டு
ஆரிய ஆரிய சித்தாந்தத்தில் Arian school of law ஸ்கூல் அப் லாவில் அது கிடையாது
இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட பிரிடிஷ் அரசின் பிரிவி கவுன்சில் நீதிமன்றம்
திராவிட கோட்பாட்டு வாதங்களை ஏற்று கொண்டு சாதகமான தீர்ப்பை வழங்கியது
அன்று ராமநாதபுரம் ஜாமீனை காப்பாற்றியது திராவிட கோட்பாடுதான்
(The doctrine of laches is an equitable defense that prevents a party from asserting a right or claim if they have unreasonably delayed in pursuing it, causing prejudice to the opposing party)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக