புதன், 9 ஏப்ரல், 2025

இலங்கை வடபகுதிக்கு மகாவலி நீர் - 27 கிலோமீட்டர் நீளமான நீர் சுரங்க பாதை!

May be an image of train and railroad


Mohamed Ali Yaseer Arafath  : இலங்கை வடபகுதிக்கு மகாவலி நீர் செல்வதற்காக  நிர்மாணிக்கப்பட்டு வரும் 27 கிலோமீட்டர் நீளமான நீர் சுரங்க பாதை!
தெற்காசியவிலேயே மிக நீளமான Northcentral Canal நீர்ச்சுரங்கம் இது!.
இதுதான் உண்மையான வடக்கின் வசந்தம்!
நூறு ஆண்டுகளுக்கு முதல் யாழ்ப்பாண புத்திசாலி சமூகம் ( மகாதேவா அறிக்கை) பரிந்துரை செய்த வடக்கு திசையில் மஹாவலி திசைதிருப்பம் படிப்படியாக நிறைவேறுகிறது.
மொரகஹகந்த நீர் மஹாகனதராவை அடைந்து,
 பின்னர் கனகராயன் ஆறு வழியாக,
 யாழ்ப்பாணம் நீரேரி தொண்டமானாறு வரை சென்று,
 பருத்தித்துறை முனைக்கு அண்மையில் மஹாவலி நீர் வெளியேறும்,
 யாழ்ப்பாணம் சுண்ணாம்பு பாறை நிலத்தடி நீர் உப்பாதலை தடுக்கும்

நீண்ட கால திட்டத்தின் ஆரம்ப அங்கம். இதனூடாக உருவாகும்
புதிய குடியிருப்புகள் அந்தந்த பகுதிகளில் இனவிகிதாசாரத்தை மாற்றாத வகையில் அமைந்தால் ஒரு பிரச்சனையும் இன்றிய மிகப்பெரிய வரப்பிரசாதம் இந்த திட்டம் இதன் மூலமாக இலங்கை 100 சதவீதம் நீர்ப்பாசனம் கொண்ட Aerable Land மாறும்.May be an image of 4 people

 May be an image of oil refinery

கருத்துகள் இல்லை: