![]() |
டெல்லியில் உட்கார்ந்து கொண்டு CBI, ED, IT, EC, Supreme Court, ராணுவத்தை வைத்து, மாநில கட்சிகளை மிரட்டி, கட்சியை உடைத்து, பணம் பறிக்கிற வேலை என்று நினைத்தாயா...!!!
![]() |
பணக்காரரான நடேசன் முதலியார், மருத்துவம் படித்துவிட்டு, Practice பண்ணலாம் என்று வந்தால்......
கல்லூரி, மருத்துவமனை, நீதிமன்றம், அரசியல் என்று எல்லா இடங்களிலும் ஒரு குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே உட்கார்ந்து கொண்டு ஆதிக்கம் செய்ததை சகிக்க முடியாமல்..,
நம்ம பசங்களையும் படிக்க வைப்போம் என்று, எல்லோரும் வாங்க, படிங்கன்னு விடுதியை கட்டி...
பிறகு பார்ப்பனர்கள் இல்லாதவர்கள் சங்கம் என்று உருவாக்கி, அதை தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று மாற்றி...
டாக்டர் மாதவன் நாயரையும், கபாலீசுவரர் கோவிலில் அவமானப்பட்ட பணக்காரர் திரு. தியாகராயரையும் சேர்த்துக்கொண்டு Justice partyஐ தொடங்கி அதை நீதிக்கட்சியாக மாற்றி, சாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேண்டும் என்று கேட்டு,
உடல்நிலை சரியில்லாமல் இருந்த பொழுதும் நம்ம மக்களோட எதிர்காலம் முக்கியம் என்று இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கே சென்று சாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேண்டும் என்று கேட்டு, அங்கேயே டாக்டர் மாதவன் நாயர் தன் உயிரை விட்டு...
மான்டேக் - செம்ஸ்ஃபோர்ட் கொடுத்த Quashi Federalஐ பயன்படுத்தி தேர்தலில் நின்று ஆட்சியை பிடித்து...
19,000 ஆரம்ப பள்ளிகளை திறந்து, மதிய உணவு வழங்கி, எல்லா தரப்பு மக்களையும் படிக்க வைத்து, அரசு வேலை வழங்கி...
கல்லூரிகளில் தமிழை பாடமாக வைத்து, சமஸ்கிருதத்தை நீக்கி, நிறைய மாணவர்களை மருத்துவம் படிக்க வைத்து...
அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கி நமது பிள்ளைகளை படிக்க வைத்து...
கோவில்களில் நடந்த அக்கிரமங்களயும், கோவில் சொத்துகளை திருடியதையும் தடுக்க இந்து அறநிலையத் துறையை ஆரம்பித்து...
மக்களை திருத்த சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்து, ஊர் ஊராக சென்று செருப்பு, சாணி, மலத்தால் அடி வாங்கி....
தேவதாசி முறையை ஒழித்து....
பறையர்களையும், நாடார்களையும் வைக்கம் சிவன் கோவில் வீதிக்குள்ள விடமாட்டோம் என்று சொன்ன, தன் குடும்ப நண்பர் திருவிதாங்கூர் மஹாராஜாவை எதிர்த்து சிறைக்கு சென்று....
பறையர்களையும், நாடார்களையும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள்ள கூட்டிக் கொண்டு சென்றதால் சிறை சென்று...
தனித் தமிழ்நாடு கேட்டு லாகூர்லேர்ந்து இங்கிலாந்து செல்லும் பொழுது, விமான விபத்தில் தளபதி பன்னீர்செல்வத்தை இழந்து....
நீதிக்கட்சி காலத்தில் ஆரம்பித்த பள்ளிகளில் 3,000 பள்ளிகளை மூடி, இந்தியை திணித்த தனது நண்பரான ராஜகோபால் என்ற ராஜாஜியை எதிர்த்து 2 வருடம் சிறையில் இருந்து...
நீதிக்கட்சியை திராவிட கழகமாக மாற்றி,
1949ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்து...
குலக்கல்வி என்ற பெயரில் 6,000 பள்ளிகளை மூடிய தனது நண்பரான ராஜகோபால் என்ற ராஜாஜிய பதவியை விட்டு நீக்கி...
காமராஜரை முதலமைச்சராக்கி... பெரியாரிஸ்ட்டான நெ.து. சுந்தரவடிவேலுவை வைத்து ராஜாஜி மூடிய பள்ளிகளை திறக்க வைத்து, மேலும் சிவந்தான்பட்டி உட்பட பல கிராமங்களில் பள்ளிகளை திறக்க வைத்து... எல்லா பள்ளிகளிலும் மதிய உணவு வழங்கி... எல்லா தரப்பு பிள்ளைகளையும் படிக்க வைத்து, அரசு வேலைக்கு அனுப்பி...
1957ல் தேர்தலில் போட்டியிட்டு, 15 MLAக்களை பெற்று, 1959ல் சென்னை மாநகராட்சி தேர்தலில் 49 MCக்களை வெற்றிபெற செய்து, சென்னை மாநகராட்சியை கைப்பற்றி, 1962ல் 50 MLAக்களை பெற்று, 1965ல் இந்தியை எதிர்த்த 1,000 இளைஞர்களை அமைச்சர் கக்கனின் துப்பாக்கிகளுக்கு பலிகொடுத்து...
1967ல் ஆட்சியை பிடித்து,
தமிழ்நாடு பெயர், இருமொழிக் கொள்கை, சுயமரியாதை திருமண சட்டம், பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் உட்பட, திராவிட கொள்கைளை சட்டமாக உருவாக்கி...
1971ல் 183 MLAக்களை வெற்றிபெறச் செய்து...
நிலச் சீர்திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தியது உட்பட பல மக்கள் நலத்திட்டங்களை வழங்கி...
ஒன்றியத்தின் எமர்ஜென்சியை எதிர்த்து, ஆட்சியை பறிகொடுத்து...
RSS, ராமச்சந்திரனை வைத்து கட்சியை உடைத்த பொழுதும் கட்சியை காப்பாற்றி, 1989ல் மீண்டும் ஆட்சியை பிடித்து...
LTTE உதவியுடன் ஜெயலலிதா, சுப்பிரமணியம்சாமி சதியால் மீண்டும் ஆட்சியை பறிகொடுத்து...
வைகோ கட்சியை உடைத்த பொழுதும், கட்சியை காப்பாற்றி 1996ல் மீண்டும் ஆட்சியை பிடித்து பல மக்கள் நலத்திட்டங்களை வழங்கி...
2006ல் இதனை தடுக்க RSS, விஜயகாந்தை வைத்து 10% வாக்குகளை பிரித்த பொழுதும் மீண்டும் ஆட்சியை பிடித்து...
காங்கிரஸுக்கு பங்கு கொடுக்காமல், 5 ஆண்டுகளும் ஆட்சி செய்து பல தொழில் வளர்ச்சிகளை உருவாக்கி...
எந்த ஈழத்துக்காக உழைத்தோமோ, அந்த இயக்கத்தாலேயே கொலைப்பழி சுமந்து ஆட்சியை இழந்து...
மக்கள் நலக் கூட்டணி சதியால் 2016ல் ஆட்சியில் அமரும் வாய்ப்பை இழந்து...
2018ல் தலைவரை இழந்த பொழுதும் கட்சியை கட்டுக் கோப்பாக வைத்து, கூட்டணி கட்சிகளை அரவணைத்து 39/40 MP தொகுதிகளில் வென்று, 2021ல் ஆட்சியை பிடித்து...
சனாதன பேயாக ஆட்டம் போட்ட பாஜகவை எதிர்க்க INDIA கூட்டணியை உருவாக்கி...
இந்திய ஒன்றியத்துக்கே சவால் விடும் அளவுக்கு வளர்ந்து, திமுக நினைப்பிலேயே புலம்ப வைத்தோமே...
இதுதான் அரசியல்.!
திராவிட சித்தாந்தத்தை வடக்கிலும் பரவ விட்டு ஒன்றிய அலுவலகத்தின் உள்ளேயே குச்சியை விட்டு ஆட்டுறோமே...
இதுதான் அரசியல்.!
2 IPS அதிகாரிகளை வைத்து பூச்சாண்டி காட்டிய போதும், அவை இரண்டையும் காமெடி பொம்மைகளாக்கி, மாநில உரிமைகளை மீட்டெடுத்தோமே, இதுதான் அரசியல்.!
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.!
பெயரை கேட்டாலே வேர்க்குதே...
இதுதான் அரசியல்.!
M. K. Stalin
![]() |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக