செவ்வாய், 8 ஏப்ரல், 2025

அமைச்சர் நேரு வீட்டில் ED ரெய்டு... 12 ஆண்டுகளுக்கு பிறகு சோதனை ஏன்? - என்.ஆர்.இளங்கோ கேள்வி! -

nnambalam.co - Selvam : அரசியலமைப்பின் படி தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பும் போதெல்லாம் அதனை எதிர் கொள்ள முடியாமல் காலங்கடந்து சட்டத்தை மீறி திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெறுகின்றன என்று திமுக சட்டத்துறை செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ எம்.பி தெரிவித்துள்ளார். ED Raids in Minister KN Nehru House
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகனும் பெரம்பலூர் எம்பியுமான அருண் நேரு, அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை நேற்று (ஏப்ரல் 7) சோதனை நடத்தியது.

இந்த சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர். இளங்கோ,

“அமலாக்கத் துறையினுடைய அதிகாரிகள் சோதனையின் போது அளித்த விவரங்களின்படி, 2013 ஆம் ஆண்டு வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகை சம்பந்தமாக சிபிஐ 2021-இல் ஒரு வழக்கு பதிந்து அதன் பிறகு ஒரு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ED Raids in Minister KN Nehru House
ED Raids in Minister KN Nehru House

ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, குற்றம் நடந்ததாக சொல்லப்படும் நாளில் இருந்து ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப் பிறகு அமலாக்கத்துறை இந்த சோதனை நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

தமிழகத்தின் அரசு அலுவலகங்களிலும், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மீதும் தொடங்கப்படும் இந்த நடவடிக்கைகள் எல்லாம் எப்போது எடுக்கப்படுகிறது என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.

நீட் தேர்வு சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும், தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வரின் ஒருங்கிணைப்பில் தென் மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் சேர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய பொழுதும், நியாயமான கோரிக்கைகளை எதிர் கொள்ள இயலாமல் திமுக மீதும் அதன் அமைச்சர்கள் மீதும் காலம் கடந்த சட்டத்தை மீறிய சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இதனை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள். ஊடகங்களில் அமைச்சர் பெயரையும் அவருடைய மகன், குடும்பத்தினுடைய பெயரையும் சொல்லி ஏதோ ஒரு ஊழல் குற்றம் போல சித்தரிக்க முயல்கிறார்கள்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையின் போது குறைந்தப் பட்சமாக தெரிவித்த தகவல்களின்படி அந்த வழக்கு 2013 இல் நடைபெற்ற நிகழ்வுக்காக 2021 ஆம் ஆண்டு சிபிஐயினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒரு வங்கி பரிவர்த்தனை சம்பந்தப்பட்டது மட்டுமேயன்றி, எந்த ஒரு ஊழல் வழக்கையும் சார்ந்தது அல்ல.

எப்பொழுதெல்லாம் தமிழகத்திற்காக, தமிழக மக்களுக்காக, சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கிறோமோ அப்பொழுதெல்லாம் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முயற்சிக்கிறார்கள். மக்கள் நிச்சயம் இதனை நிராகரிப்பார்கள்.

அமலாக்கத்துறையின் இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் திமுக எப்போதும் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறது. இந்த வழக்கிலும் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார். ED Raids in Minister KN Nehru House

கருத்துகள் இல்லை: