'தி.மு.க., தலைவர் கலைஞர் இரு தினங்களில், வீடு திரும்புவார்,'' என, அக்கட்சி பொருளாளர், ஸ்டாலின் கூறினார்.
மூச்சு திணறல் காரணமாக, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, காவேரி மருத்துவமனையில், கருணாநிதி சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு, சுவாச கோளாறு, தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்புகளுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கையாக சுவாசிக்க, தொண்டையில் துளையிட்டு,
'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை தரப்படுகிறது.
ஞாபக மறதி நோய் இருப்பதால், அதற்கான நரம்பியல் சிகிச்சையும் தொடர்கிறது. மருத்துவமனையில் உள்ள கருணாநிதியை, நேற்று காலையில், ஸ்டாலின் பார்த்தார்; டாக்டர்களிடம், சிகிச்சை தொடர்பாக கேட்டார்.பின், ஸ்டாலின் கூறுகையில், ''அப்பாவின் உடல் நலம் தேறி
வருகிறது. இன்னும் இரு தினங்களில், அவர் வீடு திரும்புவார்,'' என்றார்.
வைகோவுக்கு பதில் ''வைகோ குற்றச்சாட்டுகளுக்கு, பதிலளிக்க விரும்பவில்லை,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.ஸ்டாலின் அளித்த பேட்டி: * கருணாநிதியை சந்திக்க வந்த போது, தி.மு.க.,வினர் தன் மீது திட்டமிட்டு தாக்குதல் t நடத்தினர் என, வைகோ கூறியிருக்கிறாரே? வைகோவின் கற்பனையான குற்றச்சாட்டுகளுக்கு, பதிலளிக்க விரும்பவில்லை. * முதல்வர் பன்னீர்செல்வத்தின் டில்லி பயணம் பற்றி? 'வர்தா' புயல் பாதிப்புக்கான நிவாரணத்தை, அவர் மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும். முதல்வர், டில்லி சென்றதை வரவேற்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக