நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கறுப்பு பண ஒழிப்பு : கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்காக, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு கடந்த நவ.,8ம் தேதி அறிவித்தது. மேலும் புதிய ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை வெளியிட்டது. இந்த திடீர் அறிவிப்பால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இது குறுகிய கால சிரமம் எனவும், 50 நாட்கள் அவகாசம் வழங்கும்படியும் பொதுமக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இதற்கிடையே ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதிய 50, 20 ரூபாய்
நோட்டுகள் வெளியிடுவது தொடர்பான அறிக்கை விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகின. புதிய 50 ரூபாய் : இந்நிலையில் விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்து உள்ளது. இப்புதிய 50 ரூபாய் நோட்டுகள் ‛L' வரிசையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்துடன் வெளியாகும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக