புதன், 13 ஜூலை, 2016

சாதியை காரணம் காட்டி ஆசிரியையை தள்ளி வைக்கும் தலைமை ஆசிரியன்

தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ரோஜா என்ற ஆசிரியை, கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்.
நியூஸ் 7 செய்திப்படி,  ஆசிரியை ரோஜாவின் சாதியை காரணம் காட்டி, அவரது வகுப்பிற்கு மாணவர்களை அனுப்பாமல் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகக் கூறப்படுகிறது.  இதெல்லாம் இந்தியா ஒரு  வல்லரசு ஆகிவருவதன் அடையாளமப்பா...

இந்நிலையில், ஆசிரியை ரோஜாவின் வகுப்பறைக்கு மாணவ – மாணவியர் செல்ல வேண்டாம் என தலைமை ஆசிரியர் தெரிவித்திருக்கிறார்.
இதனால், அதிருப்தி அடைந்த ஆசிரியை ரோஜா, மாணவர்கள் இல்லாத வகுப்பறையில் தனியாக அமர்ந்து நீதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்த தகவல் அறிந்த பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், அப்பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.  thetimestamil.com

கருத்துகள் இல்லை: