துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு
முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடு முழுக்க
நடந்த மோதல்களில் சுமார் 200 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். அதில், பெரும்பான்மையானவர்கள் பொதுமக்கள்.
துருக்கியின்
இரு பெரு நகரங்களான இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் ஒரே இரவில் நிகழ்ந்த
துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்புகளை தொடர்ந்து, 1500க்கும்
மேற்பட்ட ஆயுத படையினர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக துருக்கி அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
துருக்கி அதிபர் ரீஸெப் தாயிப் எர்துவான் தொலைக்காட்சி உரையில், இந்த முயற்சியைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.
தன்னுடைய அரசை கவிழ்க்க செய்யப்பட்ட முயற்சிகள் தேசத்துரோக செயல் என்றும், ராணுவம் சுத்தபடுத்தப்பட வேண்டும் என்பதை இது காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
29 கர்ணல் மற்றும் 5 தளபதிகள் இதுவரை துருக்கி ராணுவத்தில் தங்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பாோஸ்போரஸ் நீரிணை மீதுள்ள பாலத்தில் நிலை கொண்டிருக்கும் கவச டாங்கிகளை விட்டு, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட படையினர் கையை மேலே தூக்கியபடி சரணடைய வருவதை துருக்கி தொலைக்காட்சி ஒன்று காட்டியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக