12 மாநிலங்களில் 700 ஏக்கர் நிலம், 23 ஹோட்டல், 150 கார்கள், 900 நிறுவன கிளைகள் மற்றும் 3,078 வங்கிக் கணக்குகள்
இந்தியாவை உலுக்கிய சாரதா நிறுவன மோசடிகளில் இருந்து இன்னமும் மீளாத மக்களுக்கு ரோஸ் வேலி குரூப் நிறுவனத்தின் மோசடி மக்கள் மனத்தில் நீங்கா வடுவாய் அமைந்துள்ளது. ரோஸ் வேலி குரூப் நிறுவனம் இந்தியாவில் ஹோட்டல், ரியல் எஸ்டேட் மற்றும் எண்டர்டெயின்மென்ட் துறையில் போலி முதலீட்டுத் திட்டங்களின் மூலம் மக்களிடம் சுமார் 15,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டியுள்ளது. இது சாரதா நிறுவனத்தை விடவும் 6 மடங்கு அதிகமாகும்.
இந்தியாவை உலுக்கிய சாரதா நிறுவன மோசடிகளில் இருந்து இன்னமும் மீளாத மக்களுக்கு ரோஸ் வேலி குரூப் நிறுவனத்தின் மோசடி மக்கள் மனத்தில் நீங்கா வடுவாய் அமைந்துள்ளது. ரோஸ் வேலி குரூப் நிறுவனம் இந்தியாவில் ஹோட்டல், ரியல் எஸ்டேட் மற்றும் எண்டர்டெயின்மென்ட் துறையில் போலி முதலீட்டுத் திட்டங்களின் மூலம் மக்களிடம் சுமார் 15,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டியுள்ளது. இது சாரதா நிறுவனத்தை விடவும் 6 மடங்கு அதிகமாகும்.
ரோஸ் வேலி குரூப்
சாரதா நிறுவன மோசடிகள் வெளியான அடுத்தச் சில நாட்களிலேயே இந்நிறுவனத்தின்
சாயம் வெளுக்கத் துவங்கியது. இதனைச் சுதாரித்த அமலாக்க இயக்குநரகம்
இந்நிறுவனத் தலைவர் கெளதம் குந்து-ஐ கடந்த மார்ச் 25ஆம் தேதி கைது
செய்யதனர்.
அமலாக்க பிரிவு அதிகாரிகள் கெளதம் குந்து அவர்களிடம் நடத்திய
விசாரணையில், அவரின் சொத்து மதிப்புக் குறித்துத் பல திடுக்கிடும் தகவல்கள்
வெளியாகியானது.
அமலாக்க பிரிவு அதிகாரிகளின் விசாரணையில் தனக்கு 12 மாநிலங்களில் 700
ஏக்கர் நிலம், 23 ஹோட்டல், 150 கார்கள், 900 நிறுவன கிளைகள் மற்றும் 3,078
வங்கிக் கணக்குகள் உள்ளதாக குந்து தெரிவித்தார். இதனை கேட்ட அமலாக்க
இயக்குநரக அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.
மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், அசாம், பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான்,
மத்திய பிரதேசம், திரிபுரா, ராஜஸ்தான், ஜார்கண்ட், ஆந்திரப் பிரதேசம் ஆகிய
12 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இவருக்கும் 1,000 ஏக்கருக்கு அதிகமான
நிலம் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
நிறுவன கணக்குகள் மற்றும் தகவல்கள் படி 15,400 கோடி ரூபாய் மட்டுமே
கெளதம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யாகியுள்ளது. இவர்
சுமார் 40,000 கோடி ரூபாய் வரையிலான மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளதாக ஆய்வில்
தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அமலாக்க பிரிவு உறுதியான தகவல் ஏதும் அளிக்கவில்லை.
900 கோடி
திரட்டிய நிதியில் ரோஸ் வேலி குரூப் வெறும் 900 கோடி ரூபாய் மட்டுமே
முதிர்வு காலம் முடிந்த உடன் திரும்ப அளித்துள்ளதாக நிறுவன கணக்குகள்
தெரிவிக்கிறது.
ரோஸ் வேலி குரூப் நிறுவன மோசடிகளை ஆய்வு செய்யும்போது திரிணாமுல்
காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் பிஜேடி ஆகிய கட்சி தலைவர்கள் மற்றும்
அமைச்சர்களுடன் கெளதம் நேரடி தொடர்பில் உள்ளது தெரிய வந்துள்ளது.
இதனால் அசாம் மற்றும் ஓடிசா மாநிலங்களில் ஆட்சி செய்யும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குப் பிரச்சனை துவங்கியுள்ளது.
இந்நிறுவனத்துடன் பல பாலிவுட் மற்றும் டோலிவுட் உலகின் முன்னணி நடிகர்கள் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இம்மோசடி குறித்த விசாரணையில் கெளதம் குந்து, கடந்த மார்ச் 2012ஆம்
ஆண்டில் தனிப்பட்ட முறையில் மேற்கு வங்கள முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களைச்
சந்தித்ததாகத் தெரிவித்தார்.
சாரதா நிறுவன மற்றும் ரோஸ் வேலி குரூப் ஆகிய இரண்டுமே கொல்கத்தாவை
தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இவை இரண்டும் நாட்டு
மக்கள் சிறு சேமிப்பில் மோசடி செய்துள்ளது
Read more at://tamil.goodreturns.in
Read more at://tamil.goodreturns.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக