ஞாயிறு, 10 ஜூலை, 2016

ஜாகிர் நாயக்கின் வெறுப்பு பிரசார Peace tv யை வங்காளதேசம் தடை செய்தது..

டாக்கா, ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும் ’பீஸ் டிவி’ சேனலுக்கு வங்காளதேசம் தடை விதித்தது. 22 பேர் கொல்லப்பட்ட டாக்கா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார். இதனால் அவர் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது. சமூகவலைதளத்தில் தாங்கள் மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சால் ஈர்க்கப்பட்டதாக பயங்கரவாதிகள் கூறியிருந்தனர். உடனடியாக பேச்சுக்களை ஆய்வுசெய்யுமாறு இந்தியாவிற்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்தது. இந்தியாவிலும் குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து இதுதொடர்பாக மத்திய உள்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே
ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும் ’பீஸ் டிவி’ சட்டவிரோதமாக செயல்படுகிறது என்ற தகவலும் வெளியாகியது.

சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் ஜாகிர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவில் தடை விதிக்கப்பட்ட 16 இஸ்லாமிய அறிஞர்களில் நாயக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வங்காளதேச உள்துறை அமைச்சகமும் ஜாகிர் நாயக்கின் போதனை வீடியோக்களை ஆய்வு செய்தது. வங்காளதேச பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை இதனை ஆய்வு செய்வதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இப்போது ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும் ’பீஸ் டிவி’ சேனலுக்கு வங்காளதேசம் தடை விதித்து உள்ளது. வங்காளதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் ’பீஸ் டிவி’ க்கு தடை விதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். மசூதிகளில் வெள்ளிக்கிழமை அன்று தொழுகை நடைபெறும் போது நடத்தப்படும் சொற்பொழிவுகளை கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே வங்காளதேசத்தில் ஜாகிர் நாயக்கின் பண பரிவர்த்தனையையும் வங்காளதேச அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  dailythanthi.com

கருத்துகள் இல்லை: