வெள்ளி, 15 ஜூலை, 2016

பிரான்ஸ்: கூட்டத்தில் டிரக்கை மோதச் செய்து தாக்குதல்; 75 பேர் பலி


பிரான்சில் நைஸ் நகரில் பயங்கரவாதி ஒருவன் மக்கள் குழுமியிருந்த கூட்டத்தில் கண்டய்னர் லாரியை ஏற்றியதில், 75 பேர் பலியாயினர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். >பிரான்ஸ் நாட்டின் தேசிய விடுமுறை நாளான பாஸ்டில் தின கொண்டாட்டத்தையொட்டி, நைஸ் நகரில் நடந்த வாண வேடிக்கையை காண மக்கள் பலர் குழுமியிருந்தனர். இந்நிலையில் திடீரென வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, மக்கள் குழுமியிருந்த கூட்டத்தை நோக்கி பாய்ந்தது. இத்தாக்குதலில் 75 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதிக வேகத்தில் வந்து கூட்டத்தில் 2 கி.மீ., வரை லாரியை செலுத்தியதாகவும், பின் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரைவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. >இது ஒரு பயங்கரவாத தாக்குதல் எனவும், கண்டய்னர் லாரியில் கையெறி குண்டுகளும், ஆயுதங்களும் இருந்ததாகம் நைஸ் மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.  dinamalar.com

கருத்துகள் இல்லை: