ஞாயிறு, 10 ஜூலை, 2016

BBC:காஷ்மீர் வன்முறை: 15 பேர் மரணம், பல கட்டுப்பாடுகள் விதிப்பு

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரின் பல பகுதிகளில் பலத்த பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதித்துள்ளனர். அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற பரவலான மோதல்கள் நடந்து ஒரு நாள் கழித்து இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்த மோதலில், குறைந்தது 15 பேர் பலியானர்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

போலிஸ் மற்றும் ராணுவ நிலைகள் மீது கூட்டத்தினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.கடந்த வெள்ளிக்கிழமை அன்று, நன்கு அறியப்பட்ட இளம் தீவிரவாத தலைவர் புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீரில் இந்த அமைதியின்மை தூண்டப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அன்று புர்ஹான் வானியின் இறுதி சடங்குகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கட்டுப்பாடுகளை மீறி கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை: