
வரும் ஜூலை 14இல் இது ஒளிபரப்பைத் தொடங்குகிறது. அதிமுக-வின் ஜெயா டிவி, திமுக-வின் கலைஞர் டிவி, தேமுதிக-வின் கேப்டன் டிவி, பாமக-வின் மக்கள் டிவி, இந்திய ஜனநாயகக் கட்சியின் புதிய தலைமுறை டிவி, விசிக-வின் வெளிச்சம் டிவி, நாம் தமிழர் கட்சியின் தமிழன் டிவி என பல டிவி சேனல்களை தொடர்ந்து மதிமுக-வின் மதிமுகம் ஒளிபரப்பைத் தொடங்க உள்ளது. ‘மதிமுக’ உடன் ‘ம்’ என்ற எழுத்தை மட்டும் இணைத்து ‘மதிமுகம்’ ஆக்கிவிட்டனர். ‘இது செய்திகளை மட்டும் வழங்காமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் வழங்கும். அரசியல் விவாதங்கள், சினிமா, செய்திகள் ஆகியவை மதிமுகம் டிவி சேனலில் ஒளிபரப்பாகும்’ என்று கூறிய வைகோ, ‘இது கட்சி சேனல் அல்ல’ என்றும் கூறியுள்ளார். இனி மதிமுக-வின் அறிக்கைகள், கூட்டங்கள், கொள்கைகள் போன்றவை முழுமையாக காணமுடியும் என்றும் இந்த டிவி சேனலை மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம் கையில்தான் உள்ளது என்றும் வைகோ கூறியுள்ளார். minnambalam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக