சனி, 22 டிசம்பர், 2012

Delhi மாணவி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

 ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசம் நேற்று முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது. அவரது குடல் முழுவதும் வெட்டி எடுக்கப்பட்டு விட்டதால் குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது குறித்து டாக்டர்கள் ஆலோசனை செய்து வருகிறார்கள். மாணவிக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து தர கங்காராம் மருத்துவமனை முன்வந்துள்ளது. முதன்முதலில் குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அந்த மருத்துவமனையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 உத்தரகாண்ட் அரசு மாணவியின் மருத்துவ செலவுகளுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அறிவித்தது. மாணவியை வெளிநாட்டுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கவும் தயாராக இருப்பதாக டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார். மாணவி உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்நிலையில் மாணவிக்கு அரசு பணியும், ரூ.5 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என உ.பி. அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு விட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

கருத்துகள் இல்லை: