வியாழன், 20 டிசம்பர், 2012

இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது


Congress will get a "more decisive" victory in Himachal Pradesh than that shown in the exit polls, state PCC Chief Virbhadra Singh claimed on Tuesday. "Exit polls had yesterday shown Congress as no 1. All three or four channels, who did exit polls, have put Congress party as no 1. And I think the results are going to be more decisive than what was shown in the exit polls," he told reporters outside Parliament House.
The election results in Assembly polls in Himachal Pradesh and Gujarat will be out on December 20.
இமாச்சலில் ஆட்சியை பறிகொடுத்தது BJP
இமாச்சல பிரதேசத்தில் தற்போது பாஜ ஆட்சி நடைபெறுகிறது. பாஜவை சேர்ந்த பிரேம்குமார் துமால் முதல்வராக இருக்கிறார். காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் வீர்பத்ரசிங், இமாச்சல் சட்டமன்ற தேர்தல் நெருங்கியவுடன் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநில அரசியலுக்கு திரும்பினார். இதற்கிடையில் வீர்பத்ரசிங் மீதான பழைய ஊழல் புகாரை விசாரிக்க மாநில ஐகோர்ட் உத்தரவிட்டது. இது அவருக்கு பெருத்த பின்னடைவாக கருதப்பட்டது. வாக்குப்பதிவுக்கு பின்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என ஆருடம் கூறியிருந்தன. இவற்றை பொய்யாக்கும் வகையில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் முன்னணி பெற்று பாஜவிடமிருந்து ஆட்சியை தட்டிப் பறித்துள்ளது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜ இரண்டும் மாறி மாறி ஆட்சியை பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: