மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா தன் கட்சி எம்.பி.க்களை சனிக்கிழமை கொல்கத்தாவில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்ற விதி 184 அல்லது 193 ஆகியவற்றின் கீழ் நோட்டீஸ் அளிப்பதற்குப் பதிலாக, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய, குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இத்தீர்மானத்தைக் கொண்டுவருவார். இதை ஆதரிக்கும்படி மற்ற அரசியல் கட்சிகளைக் கேட்டுக் கொள்கிறேன். http://dinamani.com
எங்களின் முன்னாள் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வின் ஆதரவைக் கோருவோமா? என்று கேட்கிறீர்கள். எங்களுடன் யார் பேச விரும்பினாலும் அவர்களுடன் பேச நாங்கள் தயார். அரசியல் கட்சிகள் எந்தக் கட்சியுடனும் பேசலாம். இதில் எந்த மத விவகாரமும் சம்பந்தப்படவில்லை. இது மதப் பிரச்னையோ, கூட்டணிப் பிரச்னையோ இல்லை. இது ஊழல் சம்பந்தப்பட்ட விஷயம். நாங்கள் அனைவரும் பிரச்னையைக் கூட்டாகச் சமாளிக்க ஒன்றிணைந்துள்ளோம்.
காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க.வுடன் பேசும்போது அது தீண்டத்தக்கதாக உள்ளது. அதுவே, மற்ற கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க.வுடன் பேச விரும்பும்போது அது தீண்டத்தகாததாகக் கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழலில் சிக்கியுள்ள, நாட்டை விற்றுள்ள, சில்லறை வர்த்தகத்திலும், ஓய்வூதியத் துறையிலும் அன்னிய நேரடி முதலீட்டை (எப்.டி.ஐ.) அனுமதிப்பது போன்ற மக்கள் விரோத முடிவுகளை எடுத்துள்ள இந்த அரசு வெளியேற வேண்டும்.
இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் எங்களுடன் பேச விரும்பினால் நாங்களும் பேசத் தயார். தேவைப்பட்டால் சுதீப் பந்தோபாத்யாய அவர்களுடன் பேசுவார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இப்போது இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள தி.மு.க., அமைச்சரவை மாற்றத்தின்போது அதில் இருந்து விலகியிருக்க முடிவு செய்தது. அக்கட்சிக்கு எப்.டி.ஐ. முடிவில் ஆட்சேபங்கள் உள்ளன.
பிரதமர் அளித்த விருந்தில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கலந்து கொண்டது தவறல்ல. அது ஒரு மரியாதைதான். ஆனால், நாங்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கும்படி அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் கட்சிகளாக இருக்கலாம். ஆனால், அதற்காக அரசின் மக்கள் விரோத முடிவுகளால் சாமானிய மனிதனின் நலன்கள் பாதிக்கப்படுவதை அவர்கள் ஏற்பார்கள் என்று அர்த்தமல்ல. எங்களை சி.பி.ஐ. அமைப்பை வைத்து மத்திய அரசு மிரட்டினால் எந்தப் பயனும் கிடைக்காது.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு மாநிலக் கட்சிகளும் ஆதரவு தரவேண்டும் என்றார் மம்தா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக