;திருச்சியைச்
சேர்ந்த மினரல் வாட்டர் தொழில் அதிபர் சரவணன் 20.11.2012 அன்று தற்கொலை
செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனில் அவர்,
தற்கொலைக்கான காரணத்தையும், தற்கொலைக்கு காரணமானவர்களையும் பற்றி
கூறியுள்ளார்.இந்த
வாக்குமூலம் அடிப்படையிலும், சரவணன் மனைவி செல்வி போலீசிடம் கொடுத்த
புகாரின் பேரிலும் அதிமுக கவுன்சிலர் ஜெரால்டு, உதவியாளர் அலெக்ஸ் மற்றும்
வழக்கறிஞர் ராஜேஷ் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாகவும், கொலை மிரட்டல்
விடுத்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த
வழக்குப் பதிவு செய்யப்படவுடன் இவர்கள் மூன்று பேரும் தலைமறைவானார்கள்.
இதையடுத்து திருவரம்பூர் டி.எஸ்.பி. பழனிச்சாமி மேற்பார்வையில்
இன்ஸ்பெக்டர் மணிமாறன், இன்ஸ்பெக்டர் காவேரி, இன்ஸ்பெக்டர் மதன் ஆகியோர்
தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தற்கொலை சம்பவமும், போலீசாரின் தேடுதல் வேட்டையும் திருச்சியில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.http://www.nakkheeran.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக