வியாழன், 22 நவம்பர், 2012

26 ATM Cards பல லட்சம் ரூபாய் பணம் எடுத்தார்

ஈரோட்டில் 26 ஏ.டி.எம் கார்டுகளை வைத்து லட்சக்கணக்கில் பணம் எடுத்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் விஜய். இவர், ஈரோடு பெரியார் நகரில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையத்துக்குள் சென்று தன்னிடம் இருந்த 26 ஏ.டி.எம் கார்டுகளை ஒவ்வொன்றாக பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் பணம் எடுத்தார். இதனால் ஏ.டி.எம் மையத்தின் முன்பு காத்திருந்த மற்ற வாடிக்கையாளர்கள் சந்தேகமடைந்தனர்.
இதுபற்றி அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசாரிடம் அவர்கள் கூறினார்கள். உடனே விஜயை பிடித்து ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தனக்கு தெரிந்தவர்கள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி அவர்களின் ஏ.டி.எம் கார்டுகளை வைத்திருப்பதாகவும் கூறினார். s   http://tamil.oneindia.in/

இந்த கணக்குகளில் பல இடங்களில் இருந்து பணம் போடப்படுதாகவும், இந்த பணத்தை மதுரையை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் எடுத்து கொடுத்தால் தனக்கு கமிஷன் கிடைக்கும் என்றும் போலீசாரிடம் விஜய் தெரிவித்தார்.
கார்டு உரிமையாளர்களிடம் விசாரணை
இதனையடுத்து அவர் வைத்திருந்த 26 ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் ரூ. 3 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். 26 ஏ.டி.எம் கார்டுகளின் உரிமையாளர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ள போலீசார் மதுரையை சேர்ந்த கண்ணனிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.
பணம் போடுவது யார்?
பலரின் கணக்குகளில் லட்சக்கணக்கான பணத்தை டெபாசிட் செய்வது யார்? எங்கிருந்து அவர்கள் பணம் செலுத்துகின்றனர். அவர்களுக்கும் கண்ணனுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது தெரியவந்தால் மட்டுமே இதில் உள்ள ரகசியங்கள் அம்பலமாகும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: