அந்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தண்டையார்பேட்டை ஐஓசி பரமேஸ்வரன் நகரில் இளம்பெண் ஒருவர் குழந்தையை மறைத்து வைத்து வளர்க்கிறார் என்று ஆர்கே நகர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் அருள்முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது ராயபுரம் ஆஸ்பத்திரியில் கேமராவில் பதிவாகியிருந்த பெண்தான் என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்த குழந்தை மீட்கப்பட்டது. பிடிபட்ட பெண் பெயர் யோகேஸ்வரி (22). இவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனது கணவர் பெயர் ஜெகந்நாதன்.
எங்களுக்கு திருமணமாகி 4 ஆண்டாகிறது. 3 முறை கருவுற்றும் அபார்ஷன் ஆகிவிட்டது. இனிமேல் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று டாக்டர் கூறிவிட்டார். குழந்தை மீது ஆசை அதிகம். தத்தெடுத்து வளர்க்க பணம் இல்லை. அதனால், கலையரசியின் உறவினர் என்று கூறி ராயபுரம் ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தையை தூக்கி வந்தேன். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வரும்போது சந்தேகம் வராமல் இருக்க டாக்டர் டிஸ்சார்ஜ் செய்தது போல் ரிப்போர்ட் போலியாக தயார் செய்து வைத்திருந்தேன். குழந்தையை வெளியே காட்டாமல் வளர்த்து வந்தேன். அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு போலீசில் கூறிவிட்டனர். குழந்தை மீது உள்ள ஆசையால் இவ்வாறு செய்துவிட்டேன். இவ்வாறு யோகேஸ்வரி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட குழந்தை ஆர்எஸ்ஆர்எம் ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதி திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ற மின்சார ரயிலில் 5வது பெட்டியில் கிடந்த பெண் குழந்தையை ஆவடி போலீசார் மீட்டனர். ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட குழந்தையா என்பதை அறிய அந்த குழந்தைக்கும், கலையரசி தம்பதிக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டது. தற்போது குழந்தையை கடத்திய யோகேஸ்வரியிடம் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை கலையரசியின் குழந்தைதானா என்பதை அறிய மீண்டும் மரபணு சோதனை நடக்கிறது. அதன் பிறகு தம்பதியிடம் குழந்தை ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக