சேலம்: திமுகவின் சின்னம் உதயசூரியன். இந்த சூரியன் மேற்கே உதித்தாலும்
திமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம். திமுகவை அழிக்கவே அவதாரம் எடுத்துள்ளோம்
என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் பஸ் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ''புதிய பாதை, புதிய நம்பிக்கை, புதிய அரசியல்'' விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் ராமதாஸ் பேசுகையில்,
இங்கு கூடியிருக்கும் கூட்டம் மிக பிரமாண்டமாக உள்ளது. இந்தக் கூட்டத்தை பார்த்தால் நாளை வருகிற தேர்தலில் படுத்துக் கொண்டே வெற்றி பெறலாம். வருகிற எல்லா தேர்தலிலும் வன்னியர்கள் ஆட்சியை பிடிக்க தயார் ஆகிவிட்டார்கள். http://tamil.oneindia.in/
ஊழலில் கொள்ளை அடித்து மாறி மாறி ஆட்சியை பிடித்தார்கள். ஊழலில் கொள்ளை அடித்த பணத்தை கொண்டு ஓட்டை விலை பேசுவார்கள். எச்சரிக்கையாக இருக்கவும். இவற்றை தடுக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து திரண்டு ஊரின் முக்கிய இடங்களில் உங்கள் போட்டோவுடன் டிஜிட்டல் போர்டு வைக்கவும்.
அதை ''தேர்தல் சட்டப்படியும், அரசியல் சட்டப்படியும் ஓட்டை விலைக்கு வாங்க கூடாது'' என்ற வாசகத்துடன் வைக்கவும். 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் பாமகவில் சேர்ந்து வருகிறார்கள்.
திமுகவின் சின்னம் உதயசூரியன். இந்த சூரியன் மேற்கே உதித்தாலும் திமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம். திமுகவை அழிக்கவே அவதாரம் எடுத்துள்ளோம்.
அதிமுக, திமுக கதை எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது எங்கு பார்த்தாலும் வன்னியர் அலைகள், வன்னியர் மந்திரம் முழங்கி கொண்டு உள்ளது. வீரம், விவேகம் மிக்க இளைஞர்கள் கட்சியில் உள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து வருடத்திற்கு 200 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த நீரை சேலம் மாவட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தினால் விவசாயம் செழிக்கும் என்று கூறி அதற்காக முதன் முதலாக திட்டம் தயார் செய்து கொடுத்தோம்.
ஆனால் நிறைவேற்றவில்லை. ஏனென்றால் சேலம் மாவட்டத்தில் உள்ள வன்னியர் விவசாயிகள் வாழ்ந்து விடுவார்கள் என்பதால். 2016-ல் பாமக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் புதிய வேலை வாய்ப்பில் வன்னியர் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். வன்னியர் ஆள வேண்டும் என்ற மந்திரம் ஒவ்வொரு நாளும் உச்சரிக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக