சென்னை: டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா. சபைக்கு ஃபேக்ஸ் அனுப்பினாலே
போதுமே, நேரில் சென்றுதான் கொக்க வேண்டுமா என்ற பண்ருட்டி ராமச்சந்திரன்
கேள்விக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து
அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கை:
கேள்வி: டெசோ தீர்மானங்களை ஐ.நா. சபைக்கு பேக்ஸ் மூலம் அனுப்பினாலே போதும், நேரில் சென்று தான் கொடுக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கேலியாக சொல்லியிருக்கிறாரே? http://tamil.oneindia.in/
கருணாநிதி: எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, பண்ருட்டியார் ஐ.நா. சபைக்கு சென்று அங்கே பேசியதாக அப்போது செய்தி வந்ததை அறிவீர்கள். அப்போது அவருடைய அந்த பேச்சை அவர் நேரிலே சென்று பேசாமல், பேக்ஸ் மூலம் அனுப்பியிருக்கலாம் அல்லவா? இவர் எதற்காக நேரிலே சென்றார்? அவரை ஐ.நாவிற்கு அனுப்பிய கட்சியிலேயே இவர் நிலைக்கவில்லை. இப்போதாவது தேவை இல்லாதவற்றில் மூக்கை நுழைக்காமல், இருக்கிற இடத்திற்கு விசுவாசமாக இருக்கட்டும் என்று அமரர் ஏ.ஜி. யின் "ஆத்மா" என ஒன்றிருந்தால், அது சொல்லக் கூடும்.
கேள்வி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பழுது என்றும், மின் வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் செய்தி வந்திருக்கிறதே?
கருணாநிதி: திமுக ஆட்சி தொடங்கிய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து விரைந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து மக்களின் பயன்பாட்டிற்கு இந்த ஆட்சியிலே கொண்டு வருகிறார்களோ இல்லையோ, பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களில் அடிக்கடி பழுது மட்டும் தொடர்ந்து ஏற்பட்டு வருவதில் குறைச்சல் இல்லை.
இந்த ஒன்றரை ஆண்டு அதிமுக ஆட்சியில் மின் நிலையங்களில் பழுது ஏற்பட்ட சம்பவங்கள் பல நடந்து விட்டன. அதற்கு பிறகும் இந்த ஆட்சியினர் அதிலே கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. அந்த வகையில்தான் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மூன்றாவது யூனிட்டில் மின் உற்பத்திக்கான பாய்லர் பழுதுபட்டு, ஓட்டை விழுந்து, அதன் இயக்கம் நிறுத்தப்பட்டு விட்டதாம்.
இதை நாம் சுட்டிக்காட்டினால், இந்த பழுதுக்கும் காரணம் ஏற்கனவே இருந்த மைனாரிட்டி திமுக ஆட்சி என்றோ அல்லது மத்திய ஆட்சிதான் பொறுப்பு என்றோ சொல்லக்கூடும்.
கேள்வி: அ.திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை அரசின் தலைமைச் செயலகத்தில் நடத்தலாமா?
கருணாநிதி: அ.திமுக ஆட்சி நடைபெறு கிறது. அதுவும் "மெஜாரிட்டி" அதிமுக ஆட்சி நடக்கிறது. அவர்கள் நினைத்தால் எங்கே வேண்டுமானாலும் அவர்களின் கட்சிக் கூட்டத்தை நடத்துவார்கள்! கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்? எந்தப் பத்திரிகைக்கு தைரியம் இருக்கிறது? அதைப்பற்றி எழுதினால் "அவதூறு வழக்கை" அல்லவா சந்திக்க வேண்டும்.
எம்ஜிஆரின் மனதை மாற்றி, அதைக் கெடுத்தது பண்ருட்டி தான் என்று பல காலமாகவே கருணாநிதி குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது தேமுதிகவில் கூட அரைகுறை மனதுடன் இருக்கும் பண்ருட்டி அதிமுக அரசைத் தாக்கிப் பேசாமல் அமைதி காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தான் இப்போதாவது இருக்கிற இடத்திற்கு விசுவாசமாக இருக்கட்டும் என்று தாக்கியுள்ளார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக