புதன், 12 செப்டம்பர், 2012

மீண்டும் ஒழித்து ஓடிய உதயகுமார்:போலீசாரிடம் சரணடைய மாட்டேன்

கூடங்குளம்: இடிந்தகரைக்கு நேற்று மாலை 4.45 மணிக்கு உதயகுமார் வந்தார். அங்கிருந்த தனது ஆதரவாளர்களிடம் பேசினார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் என்னை ஒசாமா போலவும், எனது ஆதரவாளர்களை பயங்கரவாதிகள் போலவும் பார்க்கிறது. கூடங்குளம் அணு மின் உற்பத்தி வரக்கூடாது, என மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. முதல்வர் ஜெயலலிதாவிற்கு கிடைத்த தோல்வி. எங்களிடம் ஜெயலலிதா தோற்று விட்டார். மாயவலையில் மக்கள் வீழ்ந்து விடாதீர்கள் என ஜெ., கூறியுள்ளார். ரஷ்ய கப்பல் தமிழகம் வந்தபோது வரக்கூடாது என தடுத்தவர் ஜெ., என்பதை மறந்து விடக்கூடாது
அரசை எதிர்த்து ஓரளவுக்கு தான் போராட முடியும். நான், குற்றவாளி அல்ல. எனவே, நான் போலீசாரிடம் சரணடைய மாட்டேன். போலீசாரிடம் கைது ஆவேன். ஜனநாயகத்தை மதித்து, ஒரு தேசிய தலைவர் முன்னிலையில் இன்று (நேற்று) இரவு 9 மணிக்கு கைது ஆகிறேன். கடைசி நேரத்தில், போராட்டம் பின் வாங்கியதாக அர்த்தம் அல்ல. போராட்டம் தொடரும். ஆஸ்திரியாவில் அணு உலை திறக்கும் முதல் நாளில் மக்கள் போராட்டத்தால் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது, என்றார்.

கருத்துகள் இல்லை: