வெள்ளி, 14 செப்டம்பர், 2012

நடுக்கடலில் 17 நாளாக தத்தளித்த 67 இலங்கையர்கள் மீட்பு!


நாகை::பிழைப்பு தேடி 67 இலங்கையர்கள்  ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்றனர். அவர்கள் சென்ற படகு பழுதானதால் 17 நாட்களாக கடலில் தத்தளித்த அவர்களை நாகை மீனவர்கள் மீட்டு கொண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இலங்கையர்கள் பிழைப்புதேடி வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லும் அவலம் தொடர்கிறது. கடந்த மாதம் 24ம் தேதி இரவு யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து தமிழர்கள் 63 பேர் ஒரு தனியார் விசைப்படகில் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி சென்றனர்.
இவர்கள் 3 நாள் கடலில் பயணம் செய்தனர். அதன்பின் எதிர்பாராதவிதமாக அந்த படகில் இருந்த ரேடியோ கட்டுப்பாட்டு கருவி, மற்றும் திசை காட்டும் கருவி(ஜிபிஎஸ்) ஆகியவை பழுதடைந்து விட்டது.

இதனால் ஆஸ்திரேலியா செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் தமிழகத்துக்குள் சென்று விடலாம் என கருதி படகை திருப்பி உள்ளனர். நாகைக்கு கிழக்கே 120 கடல் மைலில் சர்வதேச கடல் எல்லையில் வந்தபோது படகின் இன்ஜினும் பழுதடைந்து விட்டது. இதனால் பாய்மரத்தை இறக்கிவிட்டு நடுக்கடலிலேயே படகு நிறுத்தப்பட்டது.
படகில் இருந்த உணவு வகைகளை சில நாட்கள் சமைத்து சாப்பிட்டனர். உணவு வகைகள் தீர்ந்து விட்டது. குடிநீர் மட்டும் சிறிதளவு இருந்தது. அதை மட்டும் அனைவரும் ஆளுக்கு 50மில்லி என்ற அளவுக்கு குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி நாகை கீச்சாங்குப்பம் மீனவர்கள் தர்மராஜ் என்பவரது படகில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது இலங்கை தமிழர்கள் தத்தளித்துக் கொண்டிருந்த படகில் இருந்து கொடிகளை அசைத்து அபயகுரல் எழுப்பினர்.
அங்கு சென்ற நாகை மீனவர்கள் அந்த படகையும், படகில் இருந்த இலங்கை தமிழர்களையும் மீட்டனர். நாகை மீனவர்களின் படகு இன்று அதிகாலை 1 மணிக்கு நாகை துறைமுகம் வந்து சேர்ந்தது.
தகவல் அறிந்து துறைமுகத்தில் நாகை போலீசார், மற்றும் கடலோர காவல்படை போலீசார் தயாராக இருந்தனர்.
3 பெண்கள், 3 சிறுவர்கள், 4 சிங்களர்கள் உள்பட 67 பேர் வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதா, அல்லது முகாம்களுக்கு

கருத்துகள் இல்லை: