சனி, 15 செப்டம்பர், 2012

இஸ்லாம் எதிர்ப்பு சினிமா டைரக்டர் வீட்டுக்கு முன் குவிந்த மீடியா!

Viruvirupu
தற்போது மத்திய கிழக்கு நாடுகள் எங்கும் அமெரிக்காவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற தொடக்க காரணமாக இருந்த, இஸ்லாம் எதிர்ப்பு திரைப்பட டைரக்டர், எந்த நிமிடத்திலும் சிறைக்கு அனுப்பப்படலாம் என்று தெரிகிறது.
இவரது திரைப்படத்தால் ஏற்படுத்தப்பட்ட பதட்டம், லிபியாவில் இருந்த அமெரிக்க தூதர் உட்பட சில உயிர்களை பலிவாங்கியுள்ளது. வேறு சில நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டதுடன், அமெரிக்காவுக்கு எதிரான கிளர்ச்சிகளும் இடம்  பெற்றுள்ளன.
Innocence Of Muslims என்ற இந்த திரைப்படம், நிஜமாகவே மிகவும் கீழ்த்தரமானது. இஸ்லாமியர்களை மட்டுமன்றி, நாகரீக மனோபாவமுடைய அனைவரையும் திகைக்க வைக்கக்கூடியது. இதன் டைரக்டர் நகோலா பஸிலி, அமெரிக்கா கலிபோர்னியாவில் வசிக்கிறார். இவர் எந்த நிமிடமும் சிறைக்கு அனுப்பப்படலாம் என்று US federal probation office அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கலிபோர்னியா மாநிலம் செரியொட் நகரில் உள்ள அவரது வீட்டுக்குமுன், மீடியா செய்தியாளர்கள் கூடியுள்ளனர்.
இங்குள்ள முக்கிய விஷயம், இவர் எந்த நிமிடமும் ஜெயிலுக்கு போகலாம் எனக் கூறப்படுவது, இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படம் எடுத்ததற்காக அல்ல! இது வேறு கேஸ்!
பேங்க் மோசடி வழக்கு ஒன்றில் இவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருந்தார். கலிபோர்னியாவில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற அந்த வழக்கில், அவருக்கு 21 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை முடிந்த பின்னரும், 5 வருடங்களுக்கு கம்ப்யூட்டரையோ, இன்டர்-நெட்டையோ பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடனேயே அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். (பேங்க் மோசடி செய்தது, இன்டர்-நெட் மூலமாக என்பதால்)
“தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள திரைப்படத்தை கம்ப்யூட்டரை உபயோகிக்காமல் எடுத்திருக்க முடியாது” என்ற கோணத்திலேயே அவரை ஜெயிலுக்கு அனுப்ப யோசிக்கிறார்கள் அமெரிக்க அதிகாரிகள்.
இது எந்தளவுக்கு ஒர்க்-அவுட் ஆகும் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால், இவர் கைது செய்யப்படாவிட்டால், அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மோசமான நிலைக்குச் செல்லும் என்பது தெரியும்

கருத்துகள் இல்லை: