திங்கள், 10 செப்டம்பர், 2012

கனிமொழி:திமுகவினரை அச்சுறுத்துவதையே சிந்தனையாகக் கொண்டு ஜெயலலிதா

ஜெயலலிதா ஆட்சியில் தி.மு.க.வினரை அல்லல் படுத்தி,  அசிங்கப்படுத்தி, வீண் பழி சுமத்தி கைது செய்யப்படுகின்றனர். முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அவரது தம்பி சங்கர் வீட்டில் நள்ளிரவில் வீட்டு சுற்றுச் சுவரைத் தாண்டிய போலீசார்  வீட்டில் இருந்த பெண்கள் மீது சோதனை நடத்தினர்.

சேலம் வீரபாண்டி ஆறுமுகத்தைக் கைது செய்த போலீ சார் அவரது வயதினையும் பொருட்படுத்தாமல் திருச்சி, சேலம், வேலூர் என ஒவ்வொரு சிறைச் சாலையாகக் கொண்டு சென்று அலைக்களித்தனர்.

  தி.மு.க.வினரை அச்சுறுத்துவதையே சிந்தனையாகக் கொண்டு ஜெயலலிதா செயல்படுகிறார்.
இது போன்று எத்தனை தாக்குதலைத் தொடுத்தாலும் தி.மு.கவினர் துவண்டுவிடமாட்டார்கள். மாறாக எதிர்த்து போராடும் ஆற்றல் தி.மு.க.வினருக்கு அதிகரித்துள்ளது. கலைஞரின் 89 வயதிலும் அவரது வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
 திருவொற்றியூரில் டைம்ஸ் பவுண்டேசன் சார்பில் கட்டித் தரப்பட்ட சிறப்பு மருத்துமனையை சரிவர பராமரிக்காமல் தற்போது ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார்.
ஆனால் புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றவும், அண்ணா நூலகக் கட்டடத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாகவும் மாற்றம் செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிடுகிறார்.  முதலில்  இருக்கிற மருத்துவமனைகளைப் பராமரிக்கும் பணியில் இந்த அரசு ஈடுபடவேண்டும். அதன்பிறகு புதிய கட்டடங்களைப் பயன்படுத்துவதைப் பற்றிய யோசிக்கட்டும்.

தமிழக தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ரூ.1,500 கோடி மதிப்பீட்டிலான  மதுரவாயல்-சென்னைத் துறைமுக பறக்கும் பாலத் திட்டத்தை ஏதோ ஒரு காரணம் கூறி கிடப்பில் போட்டுள்ளனர்.

ஜெயலலிதாவிடம் தொலை நோக்குத் திட்டங்களுக்குப் பதிலாக தொல்லைநோக்குத் திட்டங்கள்தான் உள்ளன.      ஜெயலலிதாவின் அடக்குமுறைகளை தி.மு.க.வினர் தைரியமுடன் எதிர்நோக்க வேண்டும்.  தொண்டர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி நாற்பது இடங்களையும் கைப்பற்ற வேண்டும்’’ என்றார்.

கருத்துகள் இல்லை: