
ஒத்துழைத்தால் மட்டுமே...: இதுகுறித்து, கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்ட கலெக்டர், போலீஸ் கண்காணிப்பாளர் உள்ளிட்ட, மாநில அரசின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, உதவி கேட்டோம். ஆனால், மாநில அரசு, உரிய உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே பாதுகாப்பு தர முடியும் என, ஒதுங்கி விட்டனர். தற்போது, அணு உலையின் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மட்டும், தினமும் பராமரித்து வருகிறோம்.மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுடன், மும்பையிலுள்ள அணு மின் கழக தலைமை விஞ்ஞானிகள் பேச்சு நடத்த உள்ளனர். இதன்பின், தமிழக அரசுடன் நிபுணர் குழு, பேச்சு நடத்த ஏற்பாடுசெய்வோம். நிலைய பணிகள் துவங்கும் வரை, மத்திய தொழில்பாதுகாப்பு படை பாதுகாப்பு தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
நிபுணர் குழு பணிகள் தாமதம்: நிபுணர் குழுவில், தமிழகம் சார்பில் இடம்பெறுவோர் பட்டியலை தமிழக அரசு தராததால், மத்திய அரசு மட்டும் நிபுணர் குழுவை அறிவித்து உள்ளது. இக்குழுவினருடன் இணைந்து செயல்பட, தமிழக அரசும் தனியாக குழு அமைக்க வேண்டும். ஆனால், மாநிலக்குழு அமைப்பதிலும், மத்திய குழுவுடன் இணைந்து செயல்படுவதிலும், தமிழக அரசு மவுனமாக இருப்பதால், மத்திய நிபுணர் குழுவின் பணிகளில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர், தென்மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், மின்துறை அமைச்சருடன் பேச்சு நடத்த, அணுமின் கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக