புதன், 8 ஜூன், 2011

பிலிம்' காட்டிய சினிமா தொழிலாளர்கள்-முதல்வர் கண்டிப்பு

புதிதாக ஆட்சி மாறியுள்ளது. இப்போது போராட்டத்தைத் துவங்கினால் எளிதில் கவன ஈர்ப்பு கிடைத்து, தீர்வும் பிறக்கும் என எண்ணத்தில் ஃபெப்ஸி சினிமா தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்கை அறிவித்தனர்.

ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் ரியாக்ஷன் வேறு மாதிரி இருந்தது. திரையுலகின் முக்கிய தயாரிப்பாளர்கள் சிலரை சமீபத்தில் அழைத்துப் பேசிய ஜெயலலிதா, "யார் சொல்லிக் கொடுத்து இந்த மாதிரி போராட்டங்களை சினிமா தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ளனர்? இது புதிதாக அமைந்துள்ள எனது ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்குவதற்காகவே செய்யப்படுவதுபோல தெரிகிறது.

இத்தனை நாள் ரூ 500 வாங்கிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று ரூ 2000 கேட்டால் என்ன அர்த்தம். இதே சினிமாக்காரர்களுக்கு சென்னையின் மையப் பகுதியில் பிலிம் சிட்டி கட்டிக் கொடுத்தேன். அது பின்னாளில் வந்த ஆட்சியாளர்களால் சிதைக்கப்பட்ட போது ஒரு சிறு எதிர்ப்பை கூட காட்டவில்லை நீங்கள் யாரும். இப்போது எதற்கு அரசின் தலையீட்டைக் கோருகிறீர்கள்?.

நீங்களே முன் நின்று உங்கள் பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். அதைவிட்டு விட்டு வீண் பரபரப்பு கிளப்புவது நல்லதல்ல," என எச்சரித்து அனுப்பியுள்ளார்.

விளைவு, ஆர்ப்பாட்டம் என அறிவித்தவர்கள் அமைதி காக்கிறார்கள்!

English summary
Chief Minister Jayalalitha warned Fefsi workers and producers to settle their issues amicably.

கருத்துகள் இல்லை: