வியாழன், 9 ஜூன், 2011

காந்தி சமாதியில் BJP சுஷ்மா சுவராஜின் ‘தெருக்கூத்து

பாஜகவின் முன்னணி தலைவியாக வலம்வரும்   சுஷ்மா சுவவராஜ்,      தனது கட்சியினர் காந்தி சமாதியில் நடத்திய சத்தியாகிரக நிகழ்வில் பொதுமக்கள் முன்னிலையில்  நள்ளிரவில்  ஆடிய நடனம்  பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாபா ராம்தேவிற்கு எதிராக நடுவன் அரசின் அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து  பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து, டெல்லி காந்தி சமாதி முன்பு 24 மணி நேர சத்தியா கிரகம் ஒன்றை நடத்தியது.      யோகா குரு பாபா ராம்தேவ் கைது செய்யப்பட்டதை எதிர்க்கிறோம் என்று கூறி,    ராஜ்காட்டில் ஒன்றிணைந்த     பாஜகவினர் நள்ளிரவு முழுவதும் நடத்திய    சத்தியாகிரக போராட்டம் கடைசியில், பா.ஜ.க. தலைவி சுஷ்மா சுவராஜின் ‘தெருக்கூத்தாக’ முடிந்தது கண்டு பா.ஜ.க வின் தொண்டர்களே மனம் நொந்தனர்.
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த  யோகா குரு ராம்தேவின் போராட்டம்  டெல்லியில் அரசின் அதிரடி நடவடிக்கையாலும், ஊழலை எதிர்த்த யோகா குரு மற்றும் அவரது ‘பதஞ்சிலி டிரஸ்ட்’ யாவற்றிலும் உள்ள பெரும் ‘பொருளாதார குற்றங்கள்’ பற்றி விசாராணை ஆரம்பித்த்டுள்ள நிலையில், ராம்தேவின் போராட்டம் பிசுபிசுத்து போனது.
ஆயிரம்   -கோடிக்கணக்கான ருபாய் வருமானம் உள்ள யோகா குரு ராம்தேவ்  மற்றும் அவரது ‘பதஞ்சலி’ யோகா மையம் செய்துள்ள ‘குற்றச்செயல்களை’ பல்வேறு பொருளாதார் குற்றங்களை, மத்திய நேரடி வரிவிதிப்பு துறைனரான CBDT (Central Board of Direct Taxes) மற்றும் ED (Enforcement Directorate) எனப்படும் பொருளாதார செயல்பாட்டு மற்றும் குற்ற எதிர்ப்பு அமைப்பின் அதிகாரிகளும் கூட்டாக வந்து பட்டியலிடவே, தளர்ந்து போன ‘ராம்தேவ்’ அடி பணிந்ததாக கூறப்படுகிறது.

சுஷ்மா சுவராஜ்: அப்படி போடு.. போடு.. போடு.
பா.ஜ.க. போராட்டத்துக்காக காந்தி சமாதி உள்ள    ராஜ்கோட்டில் பந்தல் அமைக்கப்பட்டது. அங்கு நேற்று காலை முதல் பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தலைவர் நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் காங்கிரஸ் அரசை கண்டித்து பேசினார்கள். பா.ஜ.க. தலைவர்கள் போராட்டம் இன்று அதிகாலை வரை, விடிய, விடிய நீதித்த இதில் சுஷ்மா சுவராஜ் தீடீரென்று நடனமாட தொடங்கினார். சுஷ்மா சுவாராஜ் நடத்தை பார்த்து, பா.ஜ.க வின் ஒரு சில இளம் தலைவர்களும் அவரோடு சேர்ந்து நடனமாட தலைப்பட்டனர்.
சுஷ்மா சுவாராஜும், அந்த கட்சிக்காரருக்கு இணையாக உடலை வளைத்தும், நெளித்தும், தன்னிலை மறந்தவராக சினிமா நடனம் போன்று விடாமல் ஆடினார். வழக்கமாக, பொதுமக்கள் மத்தியில் மிகவும் அடக்கமாக நடந்து கொள்ளும் சுஷ்மா சுவராஜின் இந்த தெருக்கூத்தை ஒத்த நடனம், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடையே கடும் வாத பிரதி வாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில பா.ஜ.க சார்புள்ள ஊடகங்கள், சுஷ்மா சுவராஜின் இந்த தெருக்கூத்தை, தொண்டர்களை ஊக்கிவிக்கும் செயலாக கூறினாலும், கட்சியினரடையே இந்த செயல் பலத்த கண்டனத்திற்கு ஆளாக்கியுள்ளது. தேசிய அளவில் சுஷ்மா ஊடகங்களால் ‘தலைப்பு செய்தியாக’ ஒளிபரப்பட்ட “சுவராஜின் இந்த தெருக்கூத்து’, பா.ஜ.க விற்கு, தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, காந்தி சமாதியில் சதியா கிரகம் நடத்த போகிறோம் என்று கூறிவிட்டு, நள்ளிரவு நேரத்தில் எல்லா ஊடகங்கள் முன்னிலையிலும் களியாட்டம் போட்ட சுஷ்மா சுவராஜின் செயல், பலரை முகம் சுழிக்க வைத்தது. பாஜகவினர் நடத்தும் சத்தியகிரஹ போராட்டம் எப்படிப்பட்டது என்பதை கண்டு பல பா.ஜ.க தொண்டர்களே மனம் நொந்தவாறு உள்ளனர்.
பாரதீய ஜனதா தலைவியாகவும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவியாகவும் இருக்கும் சுஷ்மா சுவராஜ் , தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் முன்னிலையில் நடத்திய இந்த ‘தெருக்கூத்திற்கு’ காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர், ஜனார்த்தன் திவேதி கூறியதாவது:-
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருக்கும் சுஷ்மாசுவராஜ் காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் நடனம் ஆடியது கண்டிக்கத்தக்கது. சத்யாகிரக போராட்டத்துக்கு அவர் அளித்துள்ள முக்கியத்துவம் இதுதானா? இப்படித்தான் சத்தியாகிரகத்தை வெளிப் படுத்துவதா? அதில் என்ன சந்தோஷப்பட இருக்கிறது.
அப்படி அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக இருந்தால் அன்னாஹசாரே அல்லது பாபாராம்தேவ் ஆகியோர் முன்னிலையில் நடனம் ஆடட்டும். காந்தி சமாதியின் புனிதத்தை கெடுக்க வேண்டாம் என்றார்.
சுஷ்மா சுவராஜின் இந்த தெருக்கூத்தை விமர்சனம் செய்த பெயர் கூற விரும்பாத ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர், “பா.ஜ.வை அழிப்பதற்கு, காங்கிரஸ் ஒன்றும் செய்ய வேண்டாம், சுஷ்மா சுவராஜ் ஒருவரே போதும்”, என்றார்

கருத்துகள் இல்லை: