செவ்வாய், 7 ஜூன், 2011

புதைக்கப்பட்டுள்ள 16 இலட்சம் கண்ணிகளில் 3 இலட்சத்து 66 ஆயிரம் மாத்திரமே மீட்பு

- பிரிகேடியர் விஜேரட்ண
landmineயுத்தம் காரணமாக வடக்கில் புதைக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தினால் மதிப்பிட ப்பட்டுள்ள 16 இலட்சம் கண்ணிவெடிகளில் இதுவரை 3 இலட்சத்து 66 ஆயிரத்து 870 கண்ணிவெடிகள் மாத்திரமே அகற்றப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவின் பிரதம கள பொறியிய லாளர் பிரிகேடியர் கே. எம். யு. விஜேர ட்ண தெரிவித்தார்.

வடக்கில் நடத்தப்பட்ட தொழில்நுட்ப அளவீடு ஒன்றின் அடிப்படையில் இன்னும் 400 சதுரகிலோ மீற்றர் பரப்பளவி லிருந்து 12 இலட்சத்து 30 ஆயிரம் கண்ணி வெடிகள் அகற்றப்பட வேண்டி யுள்ளதாக அவர் மேலும் தெரி வித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீளக்குடியமர்த்தவும் அந்த மக்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் கண்ணிவெடி அகழ்வு மிக முக்கியமானதாகும்.

அந்த அடிப் படையில், மீள்குடியேற்றத்துக்கென இனங்காணப்பட்ட கிராமங்களில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அரசாங்கமும் இராணுவத்தின் மனிதாபிமான கண்ணி வெடி அகற்றும் பிரிவும் முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கண்ணிவெடிகள் அற்ற இலங்கையை உருவாக்கும் நோக்கில் இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவு 1500 கண்ணிவெடி அகழ்வாளர்களை யும், 29 இயந்திரங்களையும், கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கும் 6 மோப்ப நாய்களையும் ஈடுபடுத்தி துரித மீட்பு பணிகளை மேற் கொண்டு வருகின்றன என்றார்.

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் ஒரே ஒரு அரச அமைப்பு இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவாகும். சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று முறைகளில் இந்தப் பிரிவு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சுமார் 200 மீற்றர் தூரத்திலிருந்து ரிமோர்ட் மூலம் இயங்கும் இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு 8000 முதல் 9000 சதுர மீற்றர் பரப்பில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதுடன் மோப்ப நாய்களின் உதவியுடன் நாளொன்றுக்கு 700 சதுர மீற்றர் பரப் பிலிருந்தும், மனிதர்களை பயன்படுத்தி (இராணுவத்தின் அகழ்வாளர்கள்) நாளொன்றுக்கு 10 சதுர மீற்றர் நிலப்பரப் பிலிருந்தும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இராணுவம் தமது உயிரை பணயம் வைத்து இந்த நடவடிக்கையை மிகவும் அக்கறை செலுத்தி சிரமத்துடன் மேற்கொண்டு வருவதாக பிரிகேடியர் குறிப்பிட்டார்.

இலங்கையில் அதிநெல் விளைச்சல் பிரதேசங்களில் ஒன்றான மன்னார் மாவட்டத்தில் இலங்கை இராணுவம் முதலில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக் கையை ஆரம்பித்தது. இந்த மாவட்டத்தில் பெருமளவு கண்ணிவெடிகள் புதைக்கப் பட்டுள்ளன. எந்த ஒரு வரிசைக் கிரமமும் இல்லாமல் அங்கும் இங்குமாக புதைக் கப்பட்டுள்ளன. எனினும் குறுகிய காலத் திற்குள் 39 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. இந்த நடவடிக்கையின் போது புலிகளால் புதைக்கப்பட்டிருந்த 7000 மிதிவெடிகளும் 1500 அமுக்கவெடிகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அதிக மக்கள் வாழும் பகுதி என்பதனால் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் இரண்டாவது கிளிநொச்சி மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. துரித மீள்குடியேற்றத்தை இலக்காகக் கொண்டு இங்கு துரித மீட்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. அதேபோன்று, முல்லைத்தீவு மாவட்டத்திலும் துரித மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அங்கு 1556 சதுர கிலோ மீற்றர் பரப்பிலிருந்து 1285 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணி வெடி அகற்றப்பட்டுள்ளன. இது அந்தப் பிரதேசத்திலுள்ள 83% சதவீதமான காணிப் பகுதியாகும் என்றும் பிரிகேடியர் விஜே ரட்ன குறிப்பிட்டார். இராணுவ வெற்றிக்கு பின்னர் இலங்கை அரசாங்கம் பாதுகாப்பான முறையில் மீள்குடியேற்றத்தை மேற்கொண்டு வருவ தாகக் அவர் சுட்டிக்காட்டினார்
.

கருத்துகள் இல்லை: