சனி, 11 ஜூன், 2011

மதவாதம் தலைதூக்கவிடக்கூடாது: திராவிடர் கழகம்

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக வழக்கறிஞர்கள் அணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

லஞ்சம், ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில், மதவாத சக்திகள் காவிகள் ஆர்.எஸ்.எஸ்., அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க. போன்ற அமைப்புகள் பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே ஆகியோரை முகமூடிகளாகப் பயன்படுத்தி, மத்தியில் மதச்சார்பின்மை அடிப்படையில் நடைபெறும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தி.மு.க. ஆதரவினால் நடைபெறும்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசினை ஒழிப்பதற்காக, ஜனநாயகத் தேர்தல் முறைக்காகக் காத்திராமல், குறுக்கு வழியில் ‘உண்ணாவிரதம்’, கலவரம், ஆயுதப் பயிற்சி கொடுக்கும் தனிப்படை உள்பட அறிவிக்கும் அளவுக்கு வந்துவிட்டதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இவர்களது ஜனநாயகப் போர்வைக்குள் இருப்பது இந்துத்துவா மதவாதம் என்பதை நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் நடத்தி அம்பலப்படுத்துவது நமது கடமையென்றும், அதேநேரத்தில், மத்திய அரசு சட்டப்படி எடுக்கவேண்டிய எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயங்கக்கூடாது என்றும் இக்கூட்டம் வற்புறுத்துகிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: