வியாழன், 18 நவம்பர், 2010
அருண் விஜய் மீது போலீஸில் புகார்,என்னை அடிச்சார், வயிற்றில் உதைச்சார். சினிமாவிற்காக கத்துகிட்ட
சினிமா பிரபலங்களின் பணம், புகழ், கலர்ஃபுல்லான வாழ்க்கை மட்டும்தான் நம் கண்களுக்குத் தெரிகிறது.ஆனால் அந்த வீட்டுப் பிள்ளைகள் சின்ன வயசிலிருந்தே எவ்வளவு மனஅழுத்தத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது வனிதா விஜயகுமாரிடம் பேசியபோது புரிந்தது.
பெரிய இடம்! விஜயகுமாரின் குடும்பம் முக்கியமான சினிமா குடும்பம்! ஆனால் வாழ்க்கை முழுவதும் போராட்டம். சமீபத்தில் அண்ணன் அருண் விஜய் மீது போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார் வனிதா.முதல் கல்யாணம், போராட்டம், மறுமணம், குடும்பப் பிரச்னைகளைப் பற்றி மனம் திறக்கிறார் வனிதா. பேட்டி முழுக்க கண்களினோரம் கண்ணீர்.
‘‘சினிமா நட்சத்திரங்களின் பிள்ளைகளுக்கு வாழ்க்கை முழுக்க எவ்வளவு பிரஷர் இருக்கும்ங்கிறதுக்கு என் வாழ்க்கைதான் சரியான உதாரணம். எந்தப் பிரச்னை வந்தாலும் வெளில என்ன நினைப்பாங்க, மீடியாவுல எழுதிடுவாங்களே, மற்ற பிரபலங்கள் எப்படி எடுத்துப்பாங்க? என்பதுதான் அப்பா மனசுல ஏற்படுகிற முதல் கவலை. வீட்டுல அத்தனை பேர் இருந்தும் என் முதல் கல்யாணத்துல ஏற்பட்ட எல்லா பிரச்னைகளையும் நான் தனி ஆளாக நின்னுதான் சமாளிச்சிருக்கேன்.முதல் கணவர் ஆகாஷுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் எங்க வீட்டில் ஒரு வருஷம் இருந்தேன். சாப்பாடு கொடுக்கறோம் தூங்கிக்கன்னு சொல்லிட்டாங்க. மத்தபடி உணர்வுரீதியான சப்போர்ட் கொடுக்கலை. அண்ணனுக்கு கல்யாணம் நிச்சயமாகியிருந்த நேரம்,தாங்கமுடியாத குடும்பப் பிரச்னைகளால் விவாகரத்துக்கு அப்ளை பண்ணப்போறேன்னு சொன்னதும் வீட்டுப் பெயர் கெட்டுப்போயிடும்னு என்னை மூட்டை கட்டி வெளியே அனுப்பிட்டாங்க. 1977லேயே ரொம்ப மாடர்னாக ரெண்டு கல்யாணம் செய்துகிட்டு வெற்றிகரமாக நடத்தியும் காட்டியவர் அப்பா.ஆனால் என்னுடைய விவாகரத்துக்கும், மறுமணத்திற்கும் கடும் எதிர்ப்பு. ஃப்ரெண்ட் வீட்ல தங்கறதுக்கு இடம் கொடுத்தாங்க. அண்ணன் கல்யாணம் முடியும் வரை என் பக்கம் யாருமே வரலை. என்னை ஒதுக்கிட்டாங்க. யார் தயவுமின்றி என் வாழ்க்கையை நானே பார்த்துக்க முடிவு செய்தேன்.படிச்சேன், வேலை பார்த்தேன்,அதிர்ஷ்டவசமாக ராஜனை சந்தித்து மறுமணம் செய்துகிட்டேன்.இப்போது எங்களுக்கு ஜெயினிதாங்கிற ஒன்றரை வயது மகளும் இருக்கிறார்... நாங்க சென்னைடெயின்மெண்ட் என்கிற மீடியா கம்பெனியை வெற்றிகரமாக நடத்திட்டிருக்கோம். ஆனால் ஒவ்வொரு நாளும் மனசுக்குள்ள அழுகை.அப்போதெல்லாம் அம்மாவாக, அப்பாவாக, இருந்து தைரியம் சொன்னவன் என் குட்டி பையன் விஜய்ஸ்ரீஹரி...அவ்வளவு தெளிவாகப் பேசுவான்.என் மகன் இல்லைன்னா தற்கொலை செய்துகிட்ட முன்னாள் நடிகையாகத்தான் என் வாழ்க்கை முடிஞ்சிருக்கும்.ஆகாஷிடமிருந்துகூட கோர்ட்டில் கேஸ் போட்டு ஜெயித்து மகனை மீட்டேன்.அவனை நல்லா படிக்க வைக்கணும்ங்கிறது என்னுடைய விருப்பம். ஆனால் என் அப்பாவுடன் சினிமா ஃபங்ஷன்களுக்கெல்லாம் போய் படிப்பிலிருந்து திசை திரும்பறான்.அவனை அவங்க வீட்டிலிருந்து கூட்டிகிட்டு வரப் போயிருந்தேன். பேச்சு தகராறில் சண்டையாகிவிட்டது. அங்கே இருந்த அண்ணன் அருண் வில்லன் மாதிரி என்னை அடிச்சார், வயிற்றில் உதைச்சார். சினிமாவிற்காக கத்துகிட்ட சண்டைப் பயிற்சிகளையெல்லாம் என்கிட்ட காட்டினார். அருண் அடிச்சதுக்குத்தான் அவர்மேல போலீஸில் புகார் கொடுத்தேன். விஜயகுமார் வீட்டுப் பிள்ளைங்கிறதால இன்னும் அவர்மேல ஆக்ஷன் எடுக்காமல் வெச்சிருக்காங்க. இந்த சண்டையில் சினிமாவில் வரா மாதிரி நாலு குண்டர்களுடன் சண்டைக்குத் தயாராகிட்டாரு இயக்குநர் ஹரி.என் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கிறவரு.அவர் சினிமாவில் பெரிய இயக்குநராக இருக்கலாம்.ஆனால் என் வாழ்க்கையை இயக்க அவருக்கு எந்த உரிமையும் கிடையாது!எல்லா சண்டைகளிலும் மௌனமாகவே இருப்பாங்க அம்மா,அவங்களால தலையிடமுடியாது. அதுதான் உண்மை... எப்பவுமே ஐ லவ் அப்பா, அவர் என்னை புரிஞ்சுப்பாருன்னு நம்புறேன்... ஆனால்...
அப்பாகிட்ட எனக்கு ஒரே ஒரு கேள்விதான்...
எத்தனையோ சினிமா குடும்பங்களின் பிரச்னையை தலையிட்டு சரி செய்திருக்கீங்க. சினிமாவில் யாருக்காவது ஏதாவதுன்னா முதல் ஆளா போய் நிற்குறீங்க. ஆனால் உங்க வீட்ல, உங்க மகளுக்கு ஏற்பட்ட பிரச்னையை ஏன் தீர்த்து வைக்காமல் கண்டுக்காமல் விட்டீங்க, ஏன் எனக்குத் துணையாக நிற்கலை?’’ என்கிறார் வனிதா விஜயகுமார், அதற்கு விஜயகுமார் பதில் சொல்வாரா!.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக