சனி, 20 நவம்பர், 2010

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியினரே'

ஐக்கிய தேசியக்கட்சியினரின் 17 வருட ஆட்சியில் நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டது.1977,1983 இனக்கலவரங்களில் அப்பாவித்தமிழ் மக்களைக் கொன்றார்கள்.தமிழ் மக்களின் சொத்துகளை அழித்தார்கள்.இனப்பிரச்சினையை ஏற்படுத்தினார்கள்.  ஆனால்,இன்று ஜனநாயகம் அழிந்துவிட்டதாக பிரசாரம் செய்துவருவது வேடிக்கையாக உள்ளது.ஐக்கிய தேசியக்கட்சியின் பொய்ப்பிரசாரங்களுக்கு மக்கள் செவிசாய்க்க மாட்டார்களென பிரதியமைச்சர் எச்.ஆர்.மித்திரபால பல்லபாக தொடவத்த மற்றும் பஸ்னாகல பகுதிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்புக்கூட்டத்தில் உரையாற்றும்போது கூறினார். அங்கு தொடர்ந்து பேசிய பிரதியமைச்சர்;ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ஜே.ஆர்.ஜயவர்தன சகல அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஏற்படுத்தினார்.ஐக்கிய தேசியக்கட்சியே தொடர்ந்தும் பதவிக்கு வரும் வகையில் அரசியலமைப்பையும் மாற்றினார்.மூன்றில் இரண்டு பலம் இனிமேல் எவருக்குமே கிடைக்காது என்று நினைத்தார்.ஆனால்,அவரின் கனவு இன்று மாறிவிட்டது.இன்று ஐக்கிய தேசியக்கட்சியினர் ஆட்சிக்கு வரமுடியாதவாறு அரசியல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்று கூறுகின்றனர்.1981 யாழ்.மாவட்ட அபிவிருத்திச் சபைத்தேர்தலில் வாக்குப்பெட்டிகளை கள்ளவாக்குகளால் நிரம்பியவர்களும் இருவர்களே. தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடவும் காரணமானவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியினரே.யுத்தத்தை முடிக்கமுடியாமல் தொடர்ந்தனர். ஆனால், எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவி ஏற்க முன்னரே யுத்தத்தை முடிப்பதாக கூறினார். அதனைச் செய்தும் காட்டிவிட்டார்.இன்று நாட்டில் சகல மக்களும் நிம்மதியாக வாழ்வதற்கு வழி வகுத்தவர்.எனவே,இந்த நாட்டை ஜனநாயக முறையில் சிறப்பாக ஆட்சி செய்யக்கூடியது சுதந்திரக்கட்சியே.சுதந்திரக்கட்சியுடன் மக்கள் இன்று இணைகின்றனர் என்றார். இக்கூட்டத்தில் தெரணியகலை பிரதேச சபைத்தலைவர் அனில் சம்பிக விஜேசிங்க உட்பட பலர் உரையாற்றினார்கள்.

கருத்துகள் இல்லை: