புதன், 17 நவம்பர், 2010

விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...



               முன்னாள் ஜானாதிபதி அப்துல் கலாமின் சிந்தனைகளால் பலரும் ஈர்க்கப்பட்டனர். அதில் ஒருவர் நடிகர் விவேக். அதோடு நின்றுவிடாமல் கலாமை சந்தித்து பல விஷயங்களை பரிமாறிக் கொள்பவர் விவேக். அப்துல் கலாமின் பிறந்தநாளை மாணவர்கள் தினமாய் கொண்டாட வேண்டும் என்பது விவேக்கின் வேண்டுகோள். அதை நிறைவேற்ற பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார் விவேக். அப்துல் கலாமின் பிறந்த நாளை சமீபமாக பள்ளி மாணவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார் விவேக். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார் அப்துல் கலாம்



அப்போது விவேக் அவரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர், விவேக்கிடம் நீங்கள் நடிக்கும் படங்களில் தாய்மை உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம். உங்கள் காமெடிக் காட்சிகளில் பல கருத்துக்களை சொல்லி வருகிறீர்கள். அதோடு சேர்த்து இதையும் வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துக் கொண்டார். “ஏற்கெனவே அதைப் பற்றிய கருத்துக்களை என் காமெடிக் காட்சிகளில் சொல்லி வருகிறேன், இருந்தாலும் அதை இன்னும் அதிகமாய் செய்வேன்,” என கலாமிடம் வாக்குக் கொடுத்தார் விவேக். 

தன் மீதும், இளைய தலைமுறை மீதும் அக்கறைக் கொண்டு, அப்படி சொன்னதற்கு தன் நன்றிகளையும் கலாமுக்கு தெரிவித்து கொண்டார் விவேக். இப்போது உள்ள இளைய தலைமுறைக்கு தாய்மை உணர்வு தான் தேவைப்படுகிறது. நீங்கள் செய்வது காமெடியாக இருந்தாலும் அது சமூக அக்கறையுடன் இருக்கிறது. அதற்காக என் வாழ்த்துகள் என்று விவேக்கைப் பாராட்டினார் கலாம்.

கருத்துகள் இல்லை: