வியாழன், 18 நவம்பர், 2010

திமுகவை ஆட்சிக்கு வர விட மாட்டேன்-விஜயகாந்த்

Vijayakanthகாஞ்சிபுரம்: நான் திமுகவை விமர்சிப்பதால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக பத்திரிகையாளர்கள் கணக்கு போடுகின்றனர். நான் கூட்டணிக்கு அவசரப்பட மாட்டேன். அதை பிறகு பார்த்துக் கொள்வோம். ஆனால், அடுத்த முறை திமுகவை ஆட்சிக்கு வர விடமாட்டேன் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

காஞ்சிபுரத்தில் தேமுதிக சார்பில் நேற்று பக்ரீத் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு முஸ்லீ்ம்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்,

திமுக ஊழலில் ஊறியுள்ளது. மத்திய அமைச்சர் ராசாவின் ஊழலால் உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் தமிழக முதல்வர் மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்துவிட்டது என்று சொல்கிறார். அவர்களுக்கு வேண்டுமானால் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கலாம், மக்கள் நிலை மோசமாக உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே குடும்ப நல நிதியாக ரூ. 500 ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்க வேண்டும் என்றும் நான் கோரிக்கைவிடுத்தேன். ஆனால் தமிழக அரசு அதைச் செய்யவில்லை. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி அதை அமல்படுத்துகிறார்.

விஜயகாந்துக்கு பதவி ஆசை வந்துவிட்டதாக கூறுகின்றனர். இவர்களுக்கு பதவி ஆசை இல்லாமலா தந்தை முதல்வர் பதவியிலும், மகன் துணை முதல்வர் பதவியிலும் இருக்கிறார்கள்? மூத்த அமைச்சர் அன்பழகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டியதுதானே; இல்லையென்றால் ஆற்காடு வீராசாமிக்கு கொடுக்க வேண்டியதுதானே?

காங்கிரஸை வளர விடமாட்டேன் என்று அண்ணா சபதம் எடுத்து பல்வேறு கூட்டங்களில் பேசி வந்தார். தமிழக முதல்வர் தனது பதவி ஆசையால்தான் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துள்ளார். மக்களை திசை திருப்ப விவசாயிகளுக்கு இலவச மோட்டார் வழங்கப்போவதாக கூறுகிறார். மின்சாரமே ஒழுங்காக வருவதில்லை, இலவச மோட்டாரை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

நான் திமுகவை விமர்சிப்பதால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக பத்திரிகையாளர்கள் கணக்கு போடுகின்றனர். நான் கூட்டணிக்கு அவசரப்பட மாட்டேன். அதை பிறகு பார்த்துக் கொள்வோம். ஆனால், அடுத்த முறை திமுகவை ஆட்சிக்கு வர விடமாட்டேன்.

மக்கள் வாக்களிக்கும்போது சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நான் பணத்துக்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன். நான் எந்தச் சாதியும், மதமும் பார்ப்பதில்லை. மக்கள் வாக்களிக்கும்போது ஊழல்வாதிகளை இனம் கண்டு அவர்களை புறந்தள்ள வேண்டும் என்றார் விஜயகாந்த்.
பாஸ்கர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-11-18 06:52:53 IST
விஜி, சொன்னா மட்டும் பத்தாது. அதுக்கு தகுந்த மாதிரி வலுவான கூட்டணி அமைக்க வேண்டும். மக்களோட கூட்டணி என்று இனியும் பஜனை பாடாமல் ஒழுங்காக ஜெ விடம் கூட்டணி வைத்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இந்த தடை வையும் ஆப்பு தாண்டி........ I...
ர.ஸ்ரீனிவாசன் - சென்னை,இந்தியா
2010-11-18 06:52:38 IST
இவர் பொட்டி வாங்கி ஓட்டுகளை பிரிப்பதாக பலரும் சொல்லுவது உண்மைதான். ஏனென்றால் இவரின் நடவடிக்கைகள் அப்படி உள்ளன....
பச்சைத்தமிழன் சுரேஷ் - பரமக்குடிமலேசியா,இந்தியா
2010-11-18 06:36:22 IST
வாழ்த்துக்கள் கேப்டன். ....... போட்டுத்தாக்குங்கள். இது தான் சரியான நேரம் ஆப்பு வைக்க. கூட்டணி விசயத்துல கொஞ்சம் சீக்கிரம் நல்ல முடிவா எடுங்கள். இது என்னோட ஆசை இல்லை மக்களோட ஆசை. மக்கள் மட்டுமே கூட்டணினு சொல்லிட்டு இப்ப கூட்டணி வச்சா என்ன நினைப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். மக்களே கூட்டணி தேவைன்னு நினைக்கும் போது நீங்க ஏன் பயப்படுறீங்க....
B.MURALI - Ernakulam,இந்தியா
2010-11-18 06:12:52 IST
இவனுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?...
பாபு - trichy,இந்தியா
2010-11-18 06:12:28 IST
இவன் தொல்லை தாங்க முடியலப்பா .....
VASIKARAN - chennai,இந்தியா
2010-11-18 05:52:00 IST
வாழ்த்துக்கள் விஜயகாந்த் அவர்களே...
Selva Periannan - Kenmare,யூ.எஸ்.ஏ
2010-11-18 05:47:20 IST
ஆசை எல்லோருக்கும் உண்டு, இருக்கணும். அப்பத்தான் வாழ்க்கையில் வளர்ச்சி இருக்கும். எல்.கே.ஜி. குழந்தை முதலமைச்சரா வர ஆசை படறது தப்பு. இங்கதான் உங்களுக்கு இடிக்குது. நானும் ஐந்து வருடமா கேள்விபடறேன், உங்க குரங்கு புத்தி கூட்டணியை. அம்மா அதிக சீட்டு கொடுத்தா போதும் டுபுக்குன்னு கால்ல விழுந்து கூட்டணி வேச்சிகிகுவ....
செந்தில் - Singapore,இந்தியா
2010-11-18 05:38:38 IST
எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எனக்கு ஆட்சியை தாருங்கள். எம்.ஜி.ஆர்., குணமாகி வந்ததும் திரும்ப அவரிடமே ஆட்சியை தருகிறேன் என கெஞ்சிய உங்களுக்கு பதவி ஆசை இல்லையா? நேரு குடும்பத்தினர் மட்டுமே ஆள, நாடு என்ன சங்கர மடமா எனக் கேட்டீர். அதே கேள்வியை நான் கேட்கிறேன். உங்கள் குடும்பம் மட்டுமே ஆள இது என்ன சங்கர மடமா? கேப்டன் ..................
SARAVANAN - SINGAPORE,இந்தியா
2010-11-18 05:31:13 IST
தலைவர் அவர்களே, நீங்கள் சொன்னது உண்மை தான். நாட்டை காப்பாத்த வேண்டிடது நம் கடமை. நீங்கள் கண்டிப்பாக எதாவது செய்ய வேண்டும். இந்த அறியாத makkalukku....
siva - orissa,இந்தியா
2010-11-18 05:15:40 IST
Your interest to give good governance to us is liked. But for this unless you have alliance with jaya and congress. it is not at all possible. So you have to compromise at least for this election....
jopet - singapore,சிங்கப்பூர்
2010-11-18 05:12:11 IST
யாருப்பா அதிமுக கொள்கை பரப்பு தொண்டர்களே! அந்த சிங்கபூர் சேகர், வேலூர் சந்தோஷ் கேட்டுகோங்கப்பா! விஜயகாந்த் அண்ணலு, அதிமுக திமுக ரெண்டுகூடேயும் கூட்டு இல்லையாம். சொல்லிட்டார். அவர் பழைய மாதிரி மக்கள் கூட்டணி தானாம். அதனால நீங்க ரொம்ப கனவு கானாதிங்க! உங்க கர்நாடகா பிறப்பு பாண்டவபுரத்து பான்டிட் குய்ன் ஜெயலலிதாவும் நம்ம விஜயகாந்த் அண்ணலுவும் கூட்டு வைப்பாங்கன்னு. இதுக்குதான் நாங்க அப்பயிருந்தே இவனுங்க யாரையும் திமுககூட கூட்டு வைக்க வாங்கடான்னு கூப்பிடல கூப்பிட போறதும் இல்லை....
டாஸ்மார்கான் - Chennai,இந்தியா
2010-11-18 05:11:56 IST
இவர் அவ்வப்போது கொஞ்சம் டாஸ்மாக் தாக்கத்தில் பேசுவது வழக்கம். போன தேர்தலில் ஓட்டை பிரித்து மஞ்சள் துண்டாரை பதவிக்கு வர துணை போன விஜயகாந்த் கட்சியில் மனைவிக்கும் மச்சானுக்கும் மட்டும் முக்கியத்துவம். தயவு செய்து இந்த ஆளுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம்....
ப.raj - chennai,இந்தியா
2010-11-18 04:54:42 IST
ஏன்டா டெல்லியில் காங்கிரஸ் உட்கார்ந்து காமன்வெல்த், மும்பையில் கார்கில் முறைகேடு பற்றி நீயும் ஜெ வும் மூச்சு விட மறுப்பது நீங்கள் கூட்டணிக்காக நாயாய் நாக்கை தொங்க போட்டு கொண்டு அலைவது தான் உங்கள் கொள்கையா ? மு க மட்டும் ஊழல் செய்து சம்பாதிது விட்டரே என்ற பொறாமை தான் தெரியுது....
யாழினி - மெல்பர்ன்,ஆஸ்திரேலியா
2010-11-18 04:23:15 IST
அப்பு, சும்மா வாய்ல வடசுடுரத வுட்டுத்து சட்டுபுட்டுனு ஒரு கூட்டணில சேரபாரு, இல்லன்னா அப்புறம் உண்மையிலயே "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடின்னு" பொலம்ப வேண்டி இருக்கும்....
ர.சித்தார்த்தன் - jedhha,இந்தியா
2010-11-18 03:44:40 IST
தேர்தல் வாக்குறுதியாக பசுமாடும் கன்றுக்குட்டியும் தருவேன் எனக்கூறி தொகுதி பக்கேமே வராதே. நீ கூட நியாயம் ‌பேசுகிறாய்....
srini - chennai,இந்தியா
2010-11-18 02:53:20 IST
தமிழன் தமிழன் என்று கூவுவது, மற்ற கட்சிகளில் இருந்து குற்ற பின்னணி உள்ளவர்களை கட்சியில் சேர்த்து கொண்டது, எந்நேரமும் .....யில் இருப்பது தனி மனித ஒழுக்கம் இல்லாது இருப்பது உழல மன்னனான பண்ருட்டி ராமுவை கூட வைத்து இருப்பது , அதிகாரம் வருவதற்கு முன்பே வாரிசு / குடும்ப அரசியலை நடத்துவது குடும்பத்திற்கு ஐநூறு ரூபாய் கொடுப்பேன் என்று இலவச அரசியலை தொடருவது, பணத்தை அளவாக வைத்தே தேர்தலில் இடம் கொடுப்பது மற்றவர்களுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் ??...
TAMILAN - NELLAI,இந்தியா
2010-11-18 02:40:23 IST
வாய்யா வா!! இவர்தான் அண்ணாவையும்,மஞ்சதுண்டய்யும்,கொடநாட்டு மகாராணிய்யும் முதல்வர்களாக தேர்ந்து எடுத்த மாதிரி தலகணம் புடிச்சி பேச ஆரம்பிச்சிட்டாரு,,இன்னும் இவருக்கு ஒரு அரசியல்வாதிக்குரிய பக்குவம் வரவில்லையா? பாவம் இவரையும் நம்ப நம்மில் சிலர் வருவது,,,இன்னும் நம் தமிழகத்தை காப்பாற்ற இன்னும் யாரும் வரவில்லை என்றுதான் தோன்றுகிறது.......
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-11-18 02:23:30 IST
விஜயகாந்த் ஒரு வேளை தினமலர் வாசகர் கருத்து பகுதிய தினமும் படிக்கிறாரா? நாம என்ன பேசுரோமோ அத எல்லாத்தையும் தொகுத்து பேசுற மாறி இருக்கு...ஹலோ நீங்க பேசுறத கேட்க என்னவோ நல்லாத்தான் இருக்கு பேசறதுல காட்டுற வேகத்த செயல்ல காட்டுனா நல்லா இருக்கும்...ஒரு பக்கம் அம்மா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு இருக்கு. பத்தாதுக்கு நீங்க வேற பெருச போட்டு தாக்குறீங்க. இவ்வளவையும் தாங்கிட்டு பெருசு எப்டி தான் வீல் சேருல வலம் வருதோ தெரில...மறுபடி மறுபடி மக்களோட கூட்டணி ன்னு சொல்லி தலையில ஆப்பாயில் போடுற வேளை எல்லாம் வேணாம். ஒழுங்கா யார் கூடயாவது கூட்டணி வச்சி பெருசுக்கு நிரந்தர ஓய்வு குடுங்க...அது சரி யார் கூடத்தான் கூட்டணி வைக்கிற மாறி ஐடியா வில இருக்கீங்க. சொல்லுங்க. அட எங்கிட்ட யாவது சொல்லுங்க. சத்தியமா நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்...விடிஞ்சதும் பாருங்க பெருசுக்கு சொம்படிக்கிற கூட்டமெல்லாம் கைல சொம்ப எடுத்திட்டு வந்து அது எப்டி இந்த மாறி பேசலாம் னு கனார் கனார் சொம்படிக்கும்...வாங்க சொம்புகளே காதுல ரத்தம் வர அளவுக்கு அடிக்கணும். அத விட்டு சும்மா மழையில நனைஞ்ச ஊசி பட்டாசு மாறி டப்பு...டுப்பு னு அடிக்க கூடாது.வர்ட்டா......
kannan - chennai,இந்தியா
2010-11-18 01:56:08 IST
தலைவரே பின்னிட்டீங்க ....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-11-18 01:35:17 IST
நீ மொதல்ல நிறுத்து உன்னோட டப்பாவ. ஆமா உனக்கெல்லாம் என்ன ம...த்துக்கு ஓட்டு போடணும்? பினாமி பயலே. டேய், சும்மா ஆ... ஊ... ன்னு மஞ்சத்துண்டையும், தி.மு.க வையும் காச்சி பேசி ஜீரோ ஆகிடலாம்ன்னு பாக்குறியா? சும்மா ரெண்டு தையல் மிசினு, ரெண்டு ஓட்டை சைக்கிள் கொடுத்துட்டா நீ முதல் அமைச்சர் ஆயடனுமா? நீ இது வரைக்கும் எவ்வளவு போராட்டங்களை நடத்தி இருக்க? எவளவு முறை மக்களுக்காக சிறை சென்று இருக்க? எவ்வளவு உரிமைகளையும், தேவைகளையும் பெற்று தந்து இருக்க. எப்போ பாத்தாலும் அவன் மோசம் இவன் மோசம்ன்னு சொல்லி உசுபேத்தி ஓட்டு வாங்கலாம்ன்னு நெனச்சுகிட்டு வயிறு எக்கிஎக்கி கத்திகிட்டு திரியாத. மூடிகிட்டு போய், மக்களுக்காக பல போராட்டங்கள நடத்து, பல பிரச்சினைகளுக்கு தீர்வு வாங்கி கொடு, மக்களோட போராட்டத்துல பங்கு பெறு, மக்களுக்காக குரல் கொடு, சிறை செல். இப்படி ஒண்ணுமே பண்ணாம, இவன் வருவானாம் ....... போட்டுட்டு, மைக்க புடிச்சு காட்டு கத்து கத்தி அடுத்தவன கேவலமா திட்டி விட்டுட்டு போயடுவானாம், உடனே நாங்கெல்லாம் கிர் ஏறி போயி ஓட்ட போட்டு இவன முதலமைச்சர் ஆக்கிடனுமாம். இவன் பேசி முடிச்சிட்டு ஜாலியா ஒரு கிழவி கூட டூயட் பாட சுவிஸ் போயிடுவானாம். போடாங்க பினாமி செங்கண்ணா. மூடிக்கிட்டு போய் மொதல்ல ஒரு பத்து பதினஞ்சு வருடம் மக்களோட மக்களா போராடுடா, நீ மக்களுக்காக போராடி சாவுறத பாத்து மக்களே உன்னைய முதலமைச்சர் ஆக்குவாங்க. அதவுட்டுட்டு எப்போ பாத்தாலும் தி.மு.க வ திட்டி திட்டி ஒரு மாயதோற்றத்த உருவாக்கி ஓட்டை பிரிக்காதே....
சுந்தர் - சென்னை,இந்தியா
2010-11-18 01:12:29 IST
விஜயகாந்தின் உண்மையான வரிகள்....!!!...
marimuthu - mangaf,குவைத்
2010-11-18 01:12:02 IST
பதினாறு மாதம் முன்பே சுப்ரீம் கோர்ட் அனுமதி கேட்டும் கொடுக்காமல் இருந்தது பிரதமரின் நல்ல முடிவு, ஒரு நாடு கேடு கெட்டு போவதில் அவருக்கு உள்ள நல்லஉள்ளம் வேறுயாருக்கும் வருவதில்லை. வாழ்க பாரதம், இவரைபோல் இரண்டு இல்லை இல்லை ஒருபிரதமர் போதும். நாடு முன்னேறும், திரு அப்துல்கலாம் அவர்கள் நமது நாடு இரண்டாயிரத்து இருபதில் வல்லரசு ஆகும் கனவு காணுங்கள் என்றார், நாமும் கனவு கண்டோம். ஆனால் இப்பொழுது ஒரு பெரிய சுனாமி வந்துள்ளது, இந்த சுனாமியால் இந்தியாவை காப்பாற்றுவது யார்? இந்த கேடுகட்ட நிகழ்வு எல்லாம் காணவேண்டாம் என்பதற்குத்தான் திரு. அப்துல்கலாம் அவர்கள் இரண்டாவது முறை ஜனாதிபதியாக இருப்பதை வேண்டாம் என மறுத்தார். எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் சுப்ரீம் கோர்ட் விரைவாக விசாரித்து உடனே தீர்ப்பு வழங்க வேண்டும். இந்த தீர்ப்பின் மூலம் மற்ற அரசியல்வாதிகளுக்கு பாடமாகஅமைய வேண்டும். உயர்ந்த தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். சட்டங்கள் திருத்தப்படாதவரை இதுபோல் திருடர்கள் இருப்பார்கள். நாட்டை காட்டி கொடுப்பவனும், நாட்டை கெடுப்பவனும் ஒன்றுதான்....
subramaniyam - chennai,இந்தியா
2010-11-18 00:53:18 IST
very clear speech....excellent .......
sonymercodin - abudhabi,இந்தியா
2010-11-18 00:51:31 IST
அருமை விஜகாந்த் அவர்களே. ராஜா மந்திரியாகலாம் நீங்கள் ஆக கூடதா ராஜா என்ன சுதந்திர போராட்ட தியாகியா. கொள்ளை அடிப்பவநெல்லாம் மந்திரி. உண்மையை சொல்லுகிற உங்களுக்கு எனது பாராட்டுகள்....
Sundar - Newyork,யூ.எஸ்.ஏ
2010-11-18 00:42:35 IST
If you really want to help people. do not come to politics. Go and help from the money what you got it from your fans ( movie). You are good actor, that is the reason, still some people are attending your party meetings. We all know how much drama you played while central govt was asking for part of your kalyanamandama for the benefit of people. You are joker, do not make us fool. You spend your money first.....
DORAI RAJ L. - COIMBATORE.,இந்தியா
2010-11-18 00:38:40 IST
தி.மு.க.,வை அடுத்த முறை ஆட்சிக்கு வர விடமாட்டேன் என்று விஜயகாந்த் சொல்வது சரிதான். ஆனால் அ.தி.மு.க. ஓட்டுக்களைப் பிரித்து தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தியதே இவர்தான் என்பதை முதலில் உணர்ந்து, அதுவும் தானும் கெட்டு, அ.தி.மு.க.வையும் கெடுத்து, இந்தியப் பொது வாழ்க்கையில் உள்ளவர்களிலேயே மிகவும் மோசமான கருணாநிதியிடம் ஆட்சியைக் கொடுத்ததை நினைத்துப்பார்க்க வேண்டும். தமிழக வரலாற்றில் கலைஞர் ஒரு கரும்புள்ளி என்பதனை நினைவில் வைத்து ஒரு நல்ல கூட்டணியை ஏற்படுத்தினால் ஒழிய கருணாநிதியை ஆட்சியிலிருந்து வெளியேற்ற முடியாது என்பதை முதலி நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் திரு விஜயகாந்த் அவர்களே! இனியும் திருந்தாவிட்டால் அடுத்த தேர்தலுக்குள் உங்கள் கட்சியிலிருந்து அவைவரும் வெறுத்து வெளியேறி விடுவர் என்பதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்....
vijay - India,இந்தியா
2010-11-18 00:32:09 IST
இதையே தான் சிங்கப்பூர் சேகர் இவ்வளவு நாள் சொல்லிட்டு இருக்கார் .இப்ப விஜயகாந்த் புட்டு புட்டு வைக்கிறார் ....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-11-18 00:24:32 IST
அடுத்த முறை மட்டுமல்ல இனிமேல் எப்போதும் தி மு க ஆட்சிக்கே வரக்கூடாது. தி மு க என்ற நோயை ஒழிக்காவிட்டால் தற்போது கோமா நிலையில் இருக்கும் தமிழ் நாடு இல்லாமலேயே போய்விடும்....

கருத்துகள் இல்லை: