வியாழன், 19 ஆகஸ்ட், 2010

இழப்பு தமிழகத்திற்கு தான்,புதிய விமான நிலையத்தை கைவிட்டால்,முதல்வர் எச்சரிக்கை

"சென்னையில் புதிய விமான நிலையத்தை கைவிட்டால், இழப்பு தமிழகத்திற்கு தான்' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: வளர்ந்து வரும் தொழில் பொரு ளாதார முன்னேற்றங்கள் காரணமாக, தற்போதைய சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்துகளில் நெரிசல் ஏற்படுவதை அனைவரும் நன்கறிவர். நாடு முழுவதும் விமானப் போக்குவரத்துகளில் ஏற்படும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு முக்கிய தலைநகரங்களில் உள்ள விமான நிலையங்களை விரிவுபடுத்தவும், புதிதாக சர்வதேச விமான நிலையங்களை அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை விமான நிலையங்களை மேம்படுத்த புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. கர்நாடகா, ஆந்திராவில் ஏற்கனவே கிரீன்பீல்டு விமான நிலையங்கள் அமைத்து, தமிழகத்தை முந்திக் கொண்டு விட்டனர். சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் இவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூரில், "கிரீன்பீல்டு' விமான நிலையம் புதிதாக அமைப்பது தொடர்பாக, 2007 மே மாதம் தலைமைச் செயலகத்தில் என் தலைமையில் சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் தி.மு.க., சார்பில் அன்பழகன், காங்கிரஸ் சார்பில் சுதர்சனம், யசோதா, அ.தி.மு.க., சார்பில் ஜெயகுமார், பா.ம.க., சார்பில் மணி, மலையப்பசாமி, மார்க்சிஸ்ட் சார்பில் கோவிந்தசாமி, நந்தகோபால், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சிவபுண்ணியம், ம.தி.மு.க., சார்பில் வீர.இளவரசன், தே.மு.தி.க., சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தான் சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடக்கும் போதே புதிய விமான நிலையம் (கிரீன்பீல்டு) அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் வட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 4,821 ஏக்கர் பகுதியில் மேற்கொள்வதென்றும், புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளையும் இந்திய வானூர்தி ஆணையமே ஏற்று நடத்த வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது.

அரசு தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை. மற்ற மாநகரங்களில் விமான நிலைய விரிவாக்கம் நடந்து, தமிழகத்தில் மட்டும் செய்யவில்லை என்றால், அப்போதும் இதே எதிர்க்கட்சிகள் ஆட்சியாளர்கள் மீது குறை கூறி போராட்டம் நடத்த முற்படுவார்கள். தற்போது நிலத்தை ஆர்ஜிதம் செய்ய எந்த இடமும் உறுதி செய்யப்படவில்லை. தற்போது மண் பரிசோதனை அளவில் தான் நடக்கிறது. மண் பரிசோதனைக்காக அதிக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் பின் தேவையான இடத்தை தான் தேர்ந்தெடுப்பர். அதற்குள்ளாகவே ஆர்ப்பாட்டம் என்று இவர்கள் ஆரம்பித்துவிட்டால், மத்திய அரசு இந்த திட்டத்தையே கைவிட முன்வந்தால் அதனால் இழப்பு நமது மாநிலத்துக்குத் தான்; மத்திய அரசுக்கு ஒன்றும் பாதகம் ஏற்பட்டு விடாது.

வேறு இடத்துக்கு மாற்றுமாறு ராமதாஸ் கூறுகிறார். பல இடங்களை பார்வையிட்டு, அங்கெல்லாம் விமான நிலையத்தை அமைத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவர் என்பதை எல்லாம் கணக்கிட்டு தான், இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. குடியிருக்கும் மக்களையோ, விளைநிலங்களையோ வேண்டுமென்றே பறிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. தவிர்க்க முடியாத நிலையில் ஒரு சிலரது இடங்களை எடுக்கும் நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்குவதில் அரசு அக்கறையோடு உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர், "கிரீன்பீல்டு' விமான நிலையத்துக்கான இடத் தை தேர்வு செய்ய, 4,200 ஏக்கர் பரப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 64 இடங்களில் மண் பரிசோதனைகள் நடந்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவள்ளூர் தாலுகாவில் இப்பணிகள் முற்றிலும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியக் கூறுகள் குறித்து பரிசீலனை நடக்கின்றன. புதிய விமான நிலையமே தேவையில்லை, விரிவாக்கம் தேவையில்லை என்று தேவையற்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் அவர்களின் உள்நோக்கத்தை தமிழக மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

கிருஷ்ணமூர்த்தி - chennai,இந்தியா
2010-08-19 12:53:13 IST
Think about the future innovation of chennai to move towards next gen. strongly condemn the opppsite party....
tamilkader - dammam,சவுதி அரேபியா
2010-08-19 12:47:00 IST
தயவு செய்து இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். நம்மை விட சிறிய மாநிலமான கேரளாவில் 3 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன . சென்ட்ரல் govt இதில் ஸ்டேட் capital கே முன்னிரிமை கொடுக்கிறது....
jopet - singapore,சிங்கப்பூர்
2010-08-19 12:44:22 IST
தயவு செய்து இந்த திட்டத்தின் பயன்களை தொலைநோக்கு பார்வையில் பாருங்கள்! நீங்கள் சொல்லும் அத்தனை மாற்று விமான நிலைய இடங்களும் சென்னை விமான நிலையத்தின் சுமையை குறைக்குமா? விமான போக்குவர்றது நெருக்கடியை குறைக்க உதவுமா. தமிழகத்தின் தலைநகரமான சென்னையை குறிவைத்து எத்தனை வெளிநாட்டு நிறுவனங்கள் வியாபாரம் தொடங்குகிறது ஆனால் அதன் ஷிப்மெண்ட் விரிவான விமான நிலையம் இல்லாததால் மிகவும் சிரமத்தை எதிர்கொள்ளுகிறது. ஒரு Product cost அதன் சுற்றுப்புற Actuality ஐ வைத்துதான் பலநேரங்களில் கணக்கிடப்படுகிறது possibility வைத்து அல்ல. சென்னை ஏற்கனவே மிக நன்றாக establish ஆன ஒரு நகரம் மேலும் ஸ்ரீபெரும்புதூர் வெளிநாட்டு நிறுவனங்களின் Product cost இந்த விமானநிலையம் விரிவான ஒரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் அந்தஸ்துடன் இயங்குமேயானால் குறையும். அது தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே நன்மை தரக்கூடியது. சும்மா இங்கேயும் அரசியல் நடத்தி வரபோகும் திட்டத்தையும் கெடுக்க நினைக்கும் இந்த அதிமுகவின் கருத்துக்கு ஒத்து போகாதிர்கள். திருச்சியில் போய் கட்டுங்கள் மதுரையில் கட்டுங்கள் என்று சொல்பவர்கள் கட்டிய பிறகு விமான நிலையத்திற்கு நம்மை சென்று காத்து வாங்க சொல்லும் யோசனையாக இருக்கிறது. கற்றறிந்த மக்கள் கண்டிப்பாக இந்த திட்டத்தை வரவேற்பார்கள். ஒன்றை கவனிக்க வேண்டும் இதே திட்டத்தை ஆந்திரா பயன்படுத்தி நம் தமிழகத்தை முந்திக்கொண்டுள்ளது....
சாம் - Bangalore,இந்தியா
2010-08-19 12:41:09 IST
Old Airport Already Expanded. That have Enough facility for Another 20 YEARS. Old Airport Opening ceremony going to happen shortly. Why we have to give NEW airport to PRIVATE Company Now and develop new Airport? New Airport is going to handled by Govt of India? NO it is Private Company? People have think about......
snatarajan - chennai,இந்தியா
2010-08-19 12:32:16 IST
chennai airport also was planned 10years before along with other major ports!but delayed due to polical parties pulling each other"s leg!both, JJ, AND M.K. are equaly responsible for delay! any- how better late than never, let us do it atleast now!at the same time, we should try to avoid taking over fertile lands!secondly chennai is top priority compared to other cities because of traffic ie. no of travelling public!next we can plan coimbatore, madurai, trichy based on demand!one more point to take care, is when communists opposed handing over to private company to develop new airports, powers that may be at center cleverly decided that both chennai, and calcutta will be done by govt,, authority and delhi,b"lore, hyd"bad, will be by private party on BOT basis!so it got delayed further!let us insist on private participation so that new swanky airport can comeup atleast in the nest 5years! natarajan...
பாவபட்டஜனம் - chennai,இந்தியா
2010-08-19 12:17:13 IST
ஜெயா அவர்களே, நீங்கள் இந்த விஷயத்தில் தவறு செய்கிறீர்கள். ஜெய் ஹிந்த்....
பாவபாடஜனம் - chennai,இந்தியா
2010-08-19 12:15:31 IST
முதல்வருக்கு தமிழகம் தாம் வாழும் பூமி என்று அக்கறை இருந்தால் இந்த வார்த்தை வராது. இருவர் நடிப்பும் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பலாம். முன்னாள் முதல்வரும் கொஞ்சம் யோசித்து பேசலாம். ஜெய் ஹிந்த்....
mano - nz,நிக்கர்குவா
2010-08-19 12:05:48 IST
எதிர் கட்சிகள் எதிர்க்கிறார்கள் என்றாலும், அதுக்காக நல்ல பணிகளை செய்யாமல் இருக்ககூடாது...... ஆனால், எதிர்க்கட்சிகள் சொல்வதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்றும் பார்க்க வேண்டும்...... மிக சமீப காலமாகத்தான், தமிழ்நாட்டில் எதிர் கட்சிகள் இருப்பதே தெரிகிறது....... ஆனால்..... தமிழ்நாட்டில் ஆரோக்கியமான, நாகரீகமான அரசியல் போக்கு குறைத்து வருகிறது...... தினமலரில் அரசியல் பக்கம் வந்தாலே ஏகப்பட்ட கமெண்ட்ஸ்...... இதுவும் நல்லது தான்..... வர இருக்கும் தேர்தல் வரைக்கும் தான் இதெல்லாம்.... அதுக்கப்பறம், அதுக்கு அடுத்த தேர்தல்வரைக்கும் இவங்களை பார்க்க முடியாது....... ஏதோ... முடிந்தவரைக்கும் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் முதல்வர் அய்யா...... அதில் குறை இருந்தால், சுட்டிக்காட்டுங்கள்.... நிறை இருந்தால் support செய்யாட்டியும் பரவாயில்லை.... தொந்தரவு செய்யாதீர்கள்.......
கே.Sankaranarayanan - Muscat,ஓமன்
2010-08-19 12:04:12 IST
Green field Airport must for Chennai. Politicians should not politise for their personal benefits insted all of them must give hand to the government to implement the Airport project for over future generation....
சேது - Chennai,இந்தியா
2010-08-19 11:59:54 IST
அறிவாளிகளே, சிந்தியுங்கள், விபத்து நடந்து விட்டால் சொப்பு கொட்டி பரிதாபப் படுவதில் அர்த்தமில்லை. தற்போதய சென்னை விமான நிலைய நெரிசல் நிலையில் பாதுகாப்புக்கும், பொருளியல் விரிவுக்கும் விரிவாக்கம் மற்றும் புது விமான நிலையம் மிக மிக அவசியம். வெண்ணை திரளும் வேளையில் தாழியை உடைக்க கூடாது. வெகு ஜனத்துக்கு உபயோகமான இடத்தில் தான் விமான நிலையம் அமைக்க முடியும். அதை விடுத்து சந்திரநிலா விமான நிலையம் அமைக்க முடியும்? மொத்த மாநிலத்துக்கும், அகில இந்தியாவுக்கும் பயன் அளிக்கும் இத்திட்டத்தை செயல் படுத்துவதை ஒரு சிலர் பாதிப்பை காரணம் காட்டி, காழ்ப்புணர்வோடு எதிர்ப்போரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்த விசயத்தில் தமிழகத்தின் தீய விஷச்செடிகளை முளையில் கிள்ளியெறிய வேண்டும்....
True Indian Abudhabi - abudhabiuae,இந்தியா
2010-08-19 11:53:29 IST
Why the airport in Chennai. Why can't they have it in Kanyakumari & Thirunelveli district where there are barren land.? Please think the proposal. Jai Hind...
ச.அதியமான் - சென்னை,இந்தியா
2010-08-19 11:46:58 IST
சென்னை முக்கிய மந்திரி அவர்கள், எந்த ஒரு மாற்று திட்டத்தை முன் வைத்து, இந்த விமான நிலையம் அமைய விவசாய நிலங்களை, விவசாயத்தை, வாழ்வாதாரத்தை பறிக்க நினைக்கிறார். இங்கு, யாரும் வளர்ச்சி வேண்டாம் என்று சொல்லவில்லை. வளர்சிக்கான விலை வாழ்வாதாரம் அழிதல் என்றால், அதற்கான விலையை சென்னை முக்கிய மந்திரி கொடுத்துதான் ஆக வேண்டும். என்று, சென்னையை மீறி முழு தமிழகமும் இந்த அரசின் பார்வையில் வளர்சிக்கான தேவை படுகிறதோ, அன்று இது போன்ற குறை பிரசவங்கள் நிகழா....
ganesh - kuwait,குவைத்
2010-08-19 11:25:43 IST
4200 ஏக்கர் விவசாய பூமியை அழித்து பெரும் பண முதலைகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க பார்கிறது தமிழக அரசு பின்பு ஏன் தமிழகத்தில் அத்தியாவசிய பண்டங்களின் விலை உயராது, விவசாய பூமிகளை அழித்து கர்பரடே கம்பனிகளுக்கு அளித்து விட்டு வெறும் ருபாய், பைசாகளையா சாப்பிட முடியும்...
kishore - Bangalore,இந்தியா
2010-08-19 11:24:43 IST
சித்தப்பு சூது என்னனு எங்களுக்கும் தெரியும்...இழப்பு யாருக்குன்னு இந்த நாட்டுக்கே தெரியும்...ரொம்ப நீலிக் கண்ணீர் வடிக்காதீங்க...தேர்தலுக்கும் கொஞ்சம் கிளிசரின் தேவைப்படும்......
ganesh - madurai,இந்தியா
2010-08-19 11:21:01 IST
அட பாவிகளா விவசாய நிலத்தை அழித்து தான் விமான நிலையம் வர வேண்டும் என்றல் அந்த விமான நிலையமே வேண்டாம். விவசாயம் என்பது இந்திய நாட்டின் ஜீவநாடி,அதை அழித்து எந்த கருமதடா பண்ண போறீங்க. உங்க இடத்துல ஒரு அடிய விட்டு கொடுபிங்கல .அடுத்தவன் இடம் ஆயிரம் ஏக்கர் போனாலும் உங்களுக்கு கவலை இல்லை. சில ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்பதுக்காக அந்த விலை நிலத்தை அழிபதற்கு உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு???...
M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-19 11:07:54 IST
யாரும் புது விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதை விளை நிலத்தை கையகபடுத்தி அதில் உருவாக்குவதர்குதான் எதிர்ப்பு. ஏன் இலவசமா ரெண்டு ஏக்கர் நிலம் தரன்னு புருடாவிட்டு 55000 ஏக்கர் அரசு நிலம் இருந்தது என்று கூறினீர்களே. அந்த நிலம் எல்லாம் எங்க போச்சு. உனக்கு நாட்டு மேலயும் மக்கள் மேலேயும் அக்கறை இருந்தால் அதிலிருந்து 7000 ஏக்கரை எடுத்து விமானநிலையம் கட்டலாமே. இதைத்தானே ஜெயாவும் கூறினார்கள். அதை விட்டு விட்டு ஏன் பேச்சை திசை திருப்புகிறாய். ஸ்ரீபெரும்புதூர் சுற்றி உள்ள எல்லா இடங்களையும் தி மு க ரியல் எஸ்டேட் காரன் முடிந்தவரை வளைச்சு போட்டுடானோ. முடிந்தால் அதை கையக படுத்தலாமே. அதையும் தாண்டி உனக்கு பல வருசமா அந்த இடத்தில் உள்ள ஏழை விவசாயிகளின் நிலம்தான் தெரிந்ததா. உனக்கு ஈவு, இறக்கம் கொஞ்சம் கூட இல்லையா. என்னதான் உன் மனசுல நினைசுகிட்டு இருக்க....
visaka - doha,கத்தார்
2010-08-19 11:03:34 IST
கர்நாடகா, ஆந்திராவில் ஏற்கனவே கிரீன்பீல்டு விமான நிலையங்கள் அமைத்து, தமிழகத்தை முந்திக் கொண்டு விட்டனர். அதான் உன் குடும்பமே கொள்ளை அடிக்குதே எங்கிருந்து கிரீன் பீல்டு விமான நிலையங்கள் வரும் . புதிய விமான நிலையமே தேவையில்லை, விரிவாக்கம் தேவையில்லை என்று தேவையற்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் அவர்களின் உள்நோக்கத்தை தமிழக மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்...
RANGARAJAN - CHENNAI,இந்தியா
2010-08-19 11:02:42 IST
இது செரியான விளக்கம் தான். இதனால் முதல்வருக்கும் அவர் கூட்டத்துக்கும் லாபம் இருக்கோ இல்லையோ அது முக்கியம் இல்லை. ஆனால் ஏர்போர்ட் அவசியம், அவசரம், முக்கியம். தேன் எடுத்தவன் புறங்கையை நக்க தான் செய்வான். ஆளுங்கட்சி அதுவும் திமுக ஊழலுக்கு பேர் போன கட்சி. அதனால் ஊழலோ அல்லது சுயநலமோ இல்லாமல் இருக்காது என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் இது சென்னையில் தான் இருக்க வேண்டுமா என்பது ஒரு கேள்வி. ஏன் மற்ற மாநகரங்களில் இருக்க கூடாதா. திருச்சி, மதுரை, கோவை ...... ALTERNATE PLACES யோசிங்க முதல்வரே. விளைநிலங்களும் முக்கியம்....
இடைக்காட்டூர் பாஸ்கர் - துபாய்,இந்தியா
2010-08-19 10:59:50 IST
சென்னைதான் விரிவாக்கத்துக்கு உரிய இடமா. உண்மையில் எனக்கு காரணம் புரியவில்லை. எங்கள் சிவகங்கைக்கு வாருங்கள் அரேபியா பாலைவனத்தை விட காலி இடங்கள் ஏராளமாக உள்ளன. உங்களுக்கும் தேவையான இடம் கிடைக்கும். சிவகங்கையும் முநேறுன்னமாதிறியும் இருக்கும்....
Vaithianathan - Muscat,ஓமன்
2010-08-19 10:41:11 IST
கருணாநிதி அடுத்தவங்க மேல பழியை போட்டு தப்பிக்க பார்க்கிறார். இதை வரும் தேர்தலுக்கு பயன்படுத்தி ஜெயிக்கலாம் என்று நாடகமாடுகிறார்.. தமிழ் நாட்டுல எவ்வளவோ பயனற்ற நிலங்கள் உள்ளன. அதை பயன்படுத்த வேண்டியதுதானே. புத்தியுள்ள எவனும் இதை நம்ப மாட்டான்....
உண்மையான தமிழன் அன்வர் பாஷா - துபைஐக்கியஅமீரகம்,இந்தியா
2010-08-19 10:36:51 IST
ஐயா முதல்வர் அவர்கள கவனத்திற்கு திருச்சி விமான நிலையம்நிலையத்தை விரிவு செய்யலாம் ...தமிழகத்தின் மையத்தில், 15 மாவட்டதில் உள்ளவர்கள் வளைகுடாவில் மட்டும் பல ஆயிரக்கணக்கனவர்கள் உள்ளனர் குவைத் பஹரின், கத்தார் , சவுதி -அராபியவில் , இருத்தும் விமானம் விட எற்பாடு செய்தால் தங்கள் சாதனை இல் இதிவும் ஒரு மைல் கல் ....சிரிய மாநில மான கேரளாவை பார்க்கவும் நான்குவிமானநிலையம் ..நமதூர் காய்கறி, பூ,மசாலா, எல்லாம் கேரளா விமானம்மூலம் துபை .....வருது ...காரணம்........யோசிய்க்கள். தமிழக மக்கள்கள் ........
சுரேஷ் - திருப்பூர்,இந்தியா
2010-08-19 10:21:37 IST
நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் ராமதாஸ் ஒரு அறிவு கெட்டவன். தன் சுய நலத்திற்காக நாட்டையும் விற்க தயங்க மாட்டன் அறிவு கெட்ட ராமதாஸ்....
Sasi - Kuwait,குவைத்
2010-08-19 10:21:00 IST
இவர்கள் கத்திக்கொண்டு இருக்கட்டும்; நம் வேலையை நாம் பார்க்கலாம். புதிய ஏர்போர்ட் கண்டிப்பான தேவை; அதற்க்கு அந்த இடம் தான் நல்லது என்றால் கையகப்படுதித்தான் ஆகவேண்டும். விரைவில் செயல்படு....
srmselva - stamford,யூ.எஸ்.ஏ
2010-08-19 10:18:02 IST
few people always attack either karunanidhi or ramadoss or jaya.... they don't care for any good things in the state... example - krishnas - NJ,நியூ சிலாந்து ... why should i travel to madurai and come to chennai? it is total stupidity... instead ask CM to move the industries to madurai and other parts of the state.... do not talk like ramadoss mr. krishna......
Edward - Chennai,இந்தியா
2010-08-19 10:06:07 IST
Think about before writing on the favor of Development. If they want the new airport what the hell they invested huge amount to expend the current airport. How for the new Airport from the City?. Will you guys give your lands for the affected people?. We don’t’ want to be US or UK.. “India is an agriculture country”. That is our value and let it be as it is. Why he started taking about all of a sudden?. They want to collect the land before they lose the power? They already collected all the land in and around the places. Chennai is not only Tamil Nadu and it is one of the City in Tamil Nadu. Did Chennai stops growing when Ramadas stops the new city plan?. Don’t encourage people to grab land from the poor one the name of development...
jalaludeen - கிழகரை.ராம்நாடு,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-19 10:03:34 IST
தலைவர் மு கருணாநிதி வாழ்க ,உங்கள் விமான நிலைய திட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அந்த ஊருக்கே நல்லது அதனால் பல வருமானங்கள் பெருகும் .ஊர் நல்ல முன்னேற்றம் அடையும் .தமிழ் நாட்டுக்கும் பெருமை சேரும் .வாழ்க வளமுடன் இறைவன்தான் அந்த ஊர் மக்களுக்கு நல்ல மனதை கொடுக்க வேண்டும்...
பிரகாஷ்.N - சென்னை,இந்தியா
2010-08-19 10:03:57 IST
விவசாய நிலத்தை யாரும் எந்த காரணத்தை கொண்டும் commercial purpose கு உபயோக படுத்த கூடாது. ஏற்கனவே உள்ள commercial place ஐ அளித்து பனுவது சரி. இதட்காக building owner களிடம் பேச வேண்டும். if we go to the new place , lots of business people may recommend to influence their money to invest around the AIRPORT land. Its my Opinion....
ராஜா - Korea,இந்தியா
2010-08-19 09:45:08 IST
Building airport to universal standars is a must thing for a grouth of country... and for its business opportunities.. In india we will construct well, but maintanance is very very worst.. public also should cooperate in this.. Considering feature needs, this project is a Must one for chennai....
ARC - Dubai,இந்தியா
2010-08-19 09:40:07 IST
கிரீன் பீல்ட் விமானநிலையம் என்பது தனியார் கம்பெனி முதலீட்டில் தனியாரால் நிர்வகிக்கும் விமானநிலையம் இந்த காங்கிரஸ் அரசு தனியாருக்கு தாரைவார்க்கும் செயல் கிரீன் பீல்ட் விமானநிலையம் வந்தஉடன் மீனம்பாக்கம் விமானநிலையதிற்கு மூடுவிழாதான் நடக்கபோகிறது...
k.viswanathan - chennai,இந்தியா
2010-08-19 09:30:26 IST
please the reviewers understand the need of airport expansion, it's very important other wise we will suffer more in future, ramadoss create problem because he is looking for alliance, so he start to give trouble and he is not quality as leader, thing about future and do any good thing for people, expansion is need of hour, chennai international terminal is one of the dustiest terminal.so need more attention on this....
சதீஸ்வரன் - Chennai,இந்தியா
2010-08-19 09:29:39 IST
ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுற்று வட்டார பகுதிகளில் நிறைய பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன. எதிர் காலத்தில் இன்னும் நிறைய நிறுவனங்கள் வர வாய்ப்புள்ளன. இத்தகைய சூழ்நிலையில் ஏர்போர்ட் நிச்சயமாக தேவை. முதல்வர் கலைஞர், இத்திட்டத்தை, எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் பொருட்படுத்தாது நிறைவேற்ற வேண்டும்....
சிவராஜ் - kuwait,குவைத்
2010-08-19 09:08:38 IST
நஷ்டம் தமிழ்நாடுக்கு மட்டும் இல்லை முதல்வர் குடும்பத்துக்கும் தான் அதான் கருணாநிதி கவல படுகிறேர்...
கூலி - saakkadai,இந்தியா
2010-08-19 09:02:35 IST
திட்டும் கூட்டம் திட்டிக்கொண்டு தான் இருக்கும்! இது நடக்க வேண்டிய ஒன்று!! தயவு செய்து அரசியல் கலக்காமல் தமிழக வளர்ச்சியை மையமாக்கி எதிர் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்! மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி போன்ற இடத்திலிருந்து எதிர்த்து எழுதும் அன்பர்கள், அந்த ஊர் நிலைமையும் நாம் அந்த அளவு வளர வேண்டிய நிர்ப்பந்தத்தையும் எண்ணி ஆதரவு அளிக்க வேண்டுமே தவிர , கட்சி போர்வையில் தமிழகத்தை புறக்கணிப்பது நன்று ஆகாது !...
தன்ராஜ் - singapore,இந்தியா
2010-08-19 08:59:47 IST
மாறிவரும் காலகட்டத்திற்கு எற்றரர்போல மாறவேண்டும் என்பது நியதி. அரசியல் காரணங்களினாலே நல்ல ஒரு திட்டம் செயலற்று போவது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. விமானநிலையம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியம் தேவை. இந்தியா முழுவதுமாக பார்ப்போமேயானால் நம்முடைய மாநிலத்திலே தான் தலைநகரில் அணைத்து போக்குவரத்தும் ஒருங்கே கிடைக்கபெற்றுள்ளது இதனால் தான் வெளிநாட்டினர் இங்கே தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகின்றனர் இப்போது உள்ள விளைநிலங்களில் எத்தனை சதவிகிதம் பேர் விவசாயம் செய்கின்றனர் மாறாக சென்னையை சுற்றி உள்ள எல்லா விளை நிலங்கள் கூட ரியல் எஸ்டேட் பெயரில் வளைக்கப்பட்டு பெரிய ஆட்களின் வசமே உள்ளது இதில் போராட்டம் என்பது வெறும் கண்தொடைப்பு தானேயொழிய தங்களுடைய மற்றும் தங்கள் பினாமிகளின் சொத்துகளை பாதுகாப்பதற்காக நல்ல பல திட்டங்களை எதிர்ப்பது நாட்டிற்கு செய்யும் அநீதியாகும் மேலும் சர்வதேச விமானநிலையம் என்பது மத்தியஅரசின் கீழ் செயல்படுகின்ற ஒரு அமைப்பு இதில் மாநில சர்காரின் பங்கு நிலங்களை ஆர்ஜிதம் செய்வதோடு முடிந்துவிடும் கட்டமைப்பு பணிகளில் தலையிட உரிமை இல்லை மத்திய அரசின் ஆணையமே எல்லா நடவடிக்கைகளையும் முறைபடுத்தும்...
Prabhu - Chennai,இந்தியா
2010-08-19 08:55:14 IST
நான் கலைஞர் சொல்வதை முழுமையாக ஆதரிக்கிறேன்.. ஜெயா, ராமதாஸ் இருவருக்கும் இதே வேலையா போச்சு .....
இளங்கோ - chennai,இந்தியா
2010-08-19 08:52:32 IST
அய்யா கலைஞரே ஏன் இந்த திட்டத்தை பெங்களூர் ரூட்டில் போடறீங்க .... உங்கள் திட்டத்தால் தமிழ்நாடு மக்களுக்கு என்ன பிரயோஜனம் ... ஆந்திரா மக்களுக்கு தான் பிரயோஜனம்... இந்த இடத்தை தவிர்த்து உங்கள் திட்டத்தை திண்டிவனம் அல்லது விழுப்புரம் பக்கம் போட்டால் அதிக தமிழக மக்கள் பயன் அடைவார்கள் .... திண்டிவனம் பக்கம் அதிக புன்செய் நிலம் உள்ளது....சற்றே யோசித்து முடிவு எடுக்கவும் .....
saran - singapore,இந்தியா
2010-08-19 08:46:52 IST
பெரும்பான்மையான மக்களும் விவசாய நிலங்களும் பாதிக்கப்படாமல் இந்த திட்டம் நிறைவேறவேண்டும்.இந்தமாதிரி அத்யாவசியமான திட்டத்துக்கு அனைவரும் மீண்டும் கூடி கலந்து பேசி ஒரு நல்ல முடிவுக்கு வாங்க "இந்த தேர்தலுக்கு பிறகு". அதுக்குள்ளார ஒன்னும் மத்திய அரசு திட்டத்தை கைவிட்டுவிடாது.அதுவரை மு.க. ஒரு ஆணியையும் புடுங்கவேண்டாம். இருக்கும் இந்த குறைந்த கால அவகாசத்திலும் ஊரை அடித்து உலையில் போட துடிக்கிறாங்கப்பா. அடிச்சு கொட்டிக்கிறது மட்டும் இல்லாம மத்திய அரசின் நிதியில் திட்டத்தை நிறைவேற்றிவிட்டு அப்புறம் எல்லாம் எங்க ஆட்சியில்தான் வந்தது வந்ததுன்னு பீத்திக்கிறதுக்கா? இன்னொரு வழி இருக்கு நம்ம மக்களை வழிக்கு கொண்டுவர, இடம் கொடுக்கும் எல்லோருக்கும் இலவசமா ஒரு ப்ளேன் கொடுப்போம்னு உங்க ஸ்டைலில் அறிவியுங்கள். எல்லோரும் நான் நீன்னு வந்து நிப்பானுவ. பின்னாடி ஆளுக்கொரு திருவிழா கடை பொம்மையை கொடுத்து எல்லாரையும் கிறுக்கனாக்கிப்புடலாம்.இலவச டிவி வழங்கும் திட்டத்தில் டிவி மாதிரி ஒன்ன கொடுத்தமே எவனாவது என்னான்னு நம்மள கேட்டானுவலா? அதே மாதிரி சமாளிச்சுப்புடலாம். எப்ப்புடி நம்ம ஐடியா?...
V.Subbarao - Singapore,இந்தியா
2010-08-19 08:39:13 IST
சென்னைக்கு ஒரு பெரிய புதுவிமானதளம் வேண்டும் என்பது பல்லாண்டுகட்கு முன்னரே தெரிந்த ஒன்று. அக்கட்சியினரும் தமிழக அதிகாரிகளும் சென்று பார்க்காத வெளிநாட்டு விமான தலங்களா ! ஸ்ரீபெரும்புதூர், மற்றும் பல இடங்களில் தொழிற்சாலைகள் வருமுன்னரே இவை யாவும் உணர்தவர்கள் ஆளும் கட்சியினர். அறிவுடை செயலாக இந்த தொழிற்சாலைகளை சென்னையினை கடந்து சில மாவட்டங்களில் தொடங்கி இருந்து, அவ்விடங்களில் விமானநிலையத்தை அமைக்கும் எண்ணம் வந்திருக்கலாம். நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிடும் திறன் கொண்ட நம்மிடையே நமது திராவிடக்கட்சியினரெல்லாம் 'அன்றாடக் காச்சிகளாக ' இருப்பதே நாம் செய்த தவம் !!!...
Vikram - சென்னை,இந்தியா
2010-08-19 08:38:52 IST
அட பாவிகளா !!! இது கண்டிப்பாக தவிர்கமுடியாத ஒரு தேவை . சிலர் இங்கு நிலங்களை கையக படுவதுவை எதிர்பதாக சொல்கின்றார்கள் . ஒரு பெரிய விமான நிலையத்தை எப்படி பின்பு கட்டுவது ? -------------- சென்னை சுற்றிலும் நிறைய விலை நிலங்கள் தான் அவை நகரம் விர்வடயும் பொது கண்டிப்பாக நகரமாக மாரியாகதான் வேண்டும் ..... அதற்கு பதில் நாம் ஒரு விலை நிலத்தை அளித்தால் மட்ட்றொன்று உருவாகவேண்டும் என்று வேண்டுமென்றால் கேட்டால் அது நியாயம் ......அதை விட்டு நகரம் விரிவடையாமல் தடுத்தால் வறுமை தான் மிஞ்சும் .......................மற்றும் சிலர் எது செய்தாலும் அது பணத்தை கொள்ளை அடிபதற்குதான் என்று சொல்கின்றீர்கள் ... அப்படி என்றல் எந்த திடத்தையும் செய்யாமல் விட்டுவிட வேண்டியதுதான்.........
ரா.பார்த்திபன் - கண்ணந்தங்குடிகீழையூர்,இந்தியா
2010-08-19 08:36:57 IST
மாண்புமிகு முதல்வர் அவர்களே, இது ஒரு சிறப்பான திட்டம் மற்றும் பாராட்டுக்குரிய திட்டமும் கூட ஆனால் இது போன்று சிறந்த திட்டங்களை செயல்படுத்தும் முன்னர் ஏன் மக்களை சந்தித்து இதன் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால பயன் குறித்து விளக்க கூட்டங்கள் நடத்தி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த கூடாது? அப்படி நடந்தால் ஜெயா மற்றும் ராமதாஸ் போன்ற உருபடாதவர்கள் என்ன குறை சொன்னால் கூட மக்கள் புரிந்துகொள்வார்கள் அல்லவா? இதனை நீங்கள் செய்யும் அனைத்து நல்ல திட்டங்களுக்கும் செய்யலாம். - ரா.பார்த்திபன், கண்ணந்தங்குடி கீழையூர்....
guru - chennai,இந்தியா
2010-08-19 08:22:58 IST
இழப்பு நாட்டுக்கு அல்ல. உனக்கும் உன் வீட்டாருக்கும் தான் என்பது எல்லாருக்கும் தெரியும். வீணாக பொய் தகவல்களை கொடுத்து மக்களை கெடுக்காதே. எல்லோரும் உன்னை போல் முட்.. அல்ல....
ஜெயகுமார் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-08-19 08:20:34 IST
நாம் எல்லோரும் ஒரு விசையத்தை மருந்துட்டோம்னு நினிக்கிறேன் மீனம்பாக்கம் விமான நிலைய விரிவக்கதிர்க்கு ஏன் மற்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டும் சென்னை விமான நிலையத்திற்கு என்று ஆங்கிலயேர் காலத்திலே தேவையான நிலம் குறித்து வைத்துள்ளார்கள் அதன் படி அந்த ஏரியா வில் உள்ள எல்லா ஆகிரமபுகளும் அகற்ற வேண்டியது தானே ஏன் விட்டு வைப்பது அரசுக்கு உரிமை உள்ள இடத்தில ஆக்கரமைப்பை அகற்ற ஏன் அரசு மெத்தனம் காட்ட வேண்டும் ஆக்கரமைப்பை அகற்றினால போதும், ஏன் விவசாயத்து நில்லத்தை எல்லாம் வீணடிப்பது தற்கொலைக்கு சமம், நல்ல நிர்வாகம் பண்ண தெரிந்த அரசாங்கம் ஆக்கரமைப்பை என்றோ அகற்றி இறுக்கும், அனால் இப்போ இர்ருக்கிற அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக நாட்டையே துண்டடுகிரார்கள்...
Bommi - USA,இந்தியா
2010-08-19 08:09:25 IST
கருணாநிதி மூச்சு விடுவது கூட தமது குடும்பம் நலத்திர்ட்க்கே என வாதிடும் அறிவு ஜீவீகளே உங்களால் இந்த நாட்டுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் கூட ஒரு பிரயோசனும் இல்லை!! எல்லாமே நல்ல சிந்தனையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது!!! முதலில் அந்த சிந்தனையை செம்மைப்படுத்துங்கள்!!!...
சத்யா - சென்னை,இந்தியா
2010-08-19 08:08:46 IST
I strongly condemn the action of the opposite party because here we have to think of the future. I also suggest the government to pay the market value for the land owners and may be a job to each family members. Please by the same way incorporate more plans on electricity production and sustainable development inorder to conserve energy....
2010-08-19 08:01:08 IST
இதுல கருத்து எழுதுற பலபேருக்கு தன்னுடிய வீடு கிராமம் சொந்த பந்தம் எல்லாம் இப்படி மொத்தமா காலி பண்ண சொன்ன அப்பதான் உங்களுக்கு அதனுடைய வலி தெரியும் தன்னுடைய வாழ்ந்த ஊரு மக்கள் எல்லோரையும் பிரியவேண்டி இருக்கும், நீங்கலம் சந்தோசம் வெளிநாடு சுத்த அடுத்தவன் தன்னுடைய நிம்மதிய பூர்வீகத தொலைகனும்னு நினைக்கிற நீங்கலம் பொதுநலவாதி போல கருத்து எழுதிக்கிட்டு இருக்கீங்க உங்களுக்கு தெரிந்தல்லாம் எதோ காசு இருந்த வீடு வான்கலம் ஆனால் சொந்த பந்தம் கிராமம் இதை எவனும் காசு கொடுத்து வாங்க முடியாது , அது அவர்களுடிய வாழ்க்கையோடு ஒன்றியது, அதை நினைபவனுன்குதான் அதுடைய அருமை தெரியும் ஏதோ வாடகை வீட்டுலயும் ஹோடேலயும் தங்கிக்கிட்டு இப்படி நாட்ட முன்னேற்றும் திட்டம்னு சொல்லி ஆளும்கட்சிகி சொம்பு தூக்காம இருக்கலம் இதே திட்டத்த மாணவரி பயுறு பன்னூர் இடத்துல கொண்டுவரலாம் எல்லாம் சென்னைல இருக்கணும்னு அவசியம் இல்ல மதுரை திருச்சி இங்கல்ம் பல பகுதி கரடகவே இருக்கு அதை கைப்பற்றி அங்க அமைகல்ம் இதனால விவாசய நிலமும் தப்பிக்கும் இவர்கள் பண்ணுற செயல்கள் ரியல் எஸ்டேட் வழி பண்ணுகிறார்கள் மொத்ததுல விவசாயத ஒழிசிகட்ட்னும்னு முடிவு பண்ணிடர்கள் போல...
gopalakrishnan - mumbai,இந்தியா
2010-08-19 07:38:12 IST
it is very essential as the airport is already delayed by 20 years.it will multiply the economic development of our state. let the opposition play constructive role,and not to irritate the good work initiated by the present govt.....
Raj - Kualalumpur,மலேஷியா
2010-08-19 07:19:45 IST
Regardless of whatever scandal in DMK ruling , compare with our neighbor states,we can see lot of progress in state development and people life style in TN. If we are so conservative, we may loose direct investment from foreigners (FDI) . I fully agree with Dr.M's statement....
மீ.சங்கர நாராயணன் - மேலக்கரந்தை,இந்தியா
2010-08-19 07:17:42 IST
மதுரை திருச்சி விமான நிலையங்களை விரிவு படுத்தலாமே விவசாய நிலங்களைத்தான் அளிக்க வேண்டுமா விமான நிலையம் என்று விவசாயத்தை தரைமட்டம் ஆக்கிவிடாதீர்கள் இந்திய வின் முதுகெலும்புகள் என்று கிராமங்களைதான் சொன்னார் மாஹாத்மா...
மணி.வி - Chennai,இந்தியா
2010-08-19 07:06:03 IST
எவனாவது திமுக கூட்டணின்னு ஒட்டுக் கேட்டுவந்தால் சென்னையில் போய் நில்லுங்க. இங்க வராதீங்கன்னு வெரட்டவேண்டியதுதான்! அதென்ன எல்லா திட்டங்களிலும் சென்னைக்கே முதலுரிமை?. திமுக சென்னையை தவிர வேறெங்கும் தேர்தலில் நிற்கப் போவதில்லையா? ஆளும் குடும்பம்(கள்) சென்னையில் வாங்கிக் குவித்துள்ள ரியல் எஸ்டேட் விலை ஏற வசதியாக தொழிற்சாலை, மேம்பாலம், நூலகம்நு எல்லாவற்றையும் ஒரே நகரத்தில் ஏற்படுத்துகிறார்கள். இதே தவறைத் தொடர வசதியாக இன்னொரு விமான நிலையம் வேறு. தமிழகத்தின் பல ஊர்களில் பஸ் ஸ்டாண்டே கிடையாது தெரியுமா? ஒட்டுக் கேட்கவந்தால் விரட்டத் தயங்காதீர்கள்!...
Jaya - Singapore,சிங்கப்பூர்
2010-08-19 07:04:41 IST
These people will never understand the importance of infrastructures. This is the first sign of develop ment and vibrant economy. We already stayed behind Hydrabad and Bangalore, if we don't do it now, we tamilians should go to Karnataka or Andhra to work. Whenever there is development, there will be some compromise which we shall always take it. When we talk about about food, yes we may have shortage of something now, but with this kind of developments, our future generations will prosper. Please, this kind of prestigious mega projects should be supported instead of discouraged. Short sighted people only will comment on this. People like Ramadoss/Jaya are all in very confortable with thier family and why should they worry about nation, its purely for the sake of their political stunt. They should be taught lesson in coming elections....
விகடன் - சென்னை,இந்தியா
2010-08-19 06:57:32 IST
அய்யா திதீ அவர்களே,விமான நிலையம் அமைவது பிரச்சினை இல்லை.ஒரு ஊரே திரண்டு எதிர்ப்பு தெரிவிக்கும் அளவிற்கு விவசாய நிலங்களை கையகபடுதுவதற்குதான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.நிலங்களை பறிகொடுக்கும் அப்பாவி விவசாயிகளின் எதிர்காலத்தை சிந்தியுங்கள்.கமிஷன் வேண்டுமென்றால் இன்னொரு அண்டா (சட்டபேரவை) கட்டிகொளுங்கள்.விவசாயிகளை விட்டுவிடுங்கள்....
J Surya - Charlotte,யூ.எஸ்.ஏ
2010-08-19 06:34:38 IST
Mr. Karunanidhi, you may lose few votes.. however all those educated persons who are criticisizing you for giving free schemes will support you if you bring this Greenways airport successfully to Tamilnadu. I am giving my vote now itself. Down to Jayalalitha and Ramdoss....
kumar - singapore,நெதர்லாந்து
2010-08-19 06:33:32 IST
மாம்பழ தோட்டத்தில் மாம்பழம் தின்று கொண்டு ஜாதி அரசியல் செய்து மரம் வெட்டியவர்களுக்கு இது எல்லாம் தெரியாது சொன்னாலும் புரியாது..புரிந்தாலும் தகராறு செய்வார்...இவரை போன்ற ஜென்மங்களால் நாட்டில் ஒரு நல்லதும் நடக்காது..ஜாதி கலவரம் ஏற்படுத்தி தான் ஒரு மிகபெரிய சக்தி உள்ளவர் என்று காட்டி கொள்ள பார்கிறார் இந்த ஜாதி வெறி பிடித்த தலைவர்.....
சுரேந்திரன் malaysia - Ramanathapuram,இந்தியா
2010-08-19 06:17:03 IST
மதுரை சரியான இடம்....
மொக்கசாமி - india,இந்தியா
2010-08-19 06:10:24 IST
தலைவா நமது கழக உறுப்பினர் அந்த ஏரியாவில் ஏதேனும் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்கின்றனரா??? இது நாள் வரை நீங்கள் அறிவிக்கும் திட்டங்கள் எல்லாம் (உதராணமாக கல்லூரி, சிறப்பு பொருளாதார மண்டலம், ஐ,டி. பார்க்) சுற்றி நமது கழகத்தாரின் நிலங்களே உள்ளன....
Jayaram - Alkhobar,சவுதி அரேபியா
2010-08-19 04:48:43 IST
I dont know why Jaya and Ramdoss behaving like this. CM is trying to get some thing good about the future of TN, as he says compare to other met cities we are still very far away from them. Please unnessarily dont create any problems for green field airport. We are still in 1950 only. Let these two leaders go out of India and see the other air ports, then they will know how lower we are....
krishnas - NJ,நியூ சிலாந்து
2010-08-19 04:23:19 IST
ஏன் முதல்வரே, தமிழ் நாடு என்பது சென்னை மட்டும்தானா? சென்னை விமான நிலையத்தை விரிவு படுத்துதலோடு, புதிய கிரீன்பீல்ட் விமானநிலையத்தை, மதுரையை சுற்றியோ அல்லது மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகர்களுக்கு நடுவிலோ அமைக்கலாமே. அங்கிருந்து சென்னையை விமானம் மற்றும் அதிவேக ரயில்வண்டி மூலம் இணைக்கலாமே. நீங்கள் நல்ல ஒரு காமெடியான சென்னை முதல்வர்!...
shankar - Chennai,இந்தியா
2010-08-19 04:17:08 IST
No where in India except in Tamilnadu you will find this kind of barbarious attack by policemen on common people who are agitating to secure their fertile agricultural land from acquisition of state government for Greenfeild airport project. The state government had failed to discuss with the land owners of that area to provide necessary compensation before initiating the project. Now Chief minister of Tamilnadu Mr Karunanithi started criticizing opposition parties by saying that they are politically motivated to drop the idea of constructing new airport....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-08-19 03:29:22 IST
ம்ம்ம்ம்... இவரு என்ன செஞ்சாலும் அவரோட குடும்பத்துக்கு ஒரு பத்து காசாவது லாபம் இல்லேனா பண்ண மாட்டாரே. ஒரு கொசு மருந்து அடிச்சா கூட அதுல ஒரு நாலு காசு நம்ம வீட்டுக்கு வந்திடனும்ன்னு நினைக்கிற ஆளு, இப்போ எதுக்கு ஏர்போர்ட் கட்டணும்ன்னு குதிக்கிறாரு. ஒரு வேலை இவங்க குடும்பத்தில இப்போ ஏரோப்ளேன் கம்பெனில பார்ட்னர் ஆனாங்களே அதுக்கும் இதுக்கும் எதாச்சும் லிங்க் இருக்குமோ? இல்ல எவளோ ஏரோப்ளேன் ஏறி இறங்குதோ அதுக்கு தகுந்தாமாறி இவருக்கு கமிசன் போறமாறி ஏற்பாடா? சோழியன் குடுமி சும்மா ஆடாதே. அதுவும் இவரு குடுமி புடிச்சு ஆட்டுனா கூட ஆடாது. ஆனா இவரு கூட நாம எல்லா எரோப்லேன்லையே பரக்கனும்ன்னு ஆசைபடுறார்ணா அதுல ஏதோ ஒன்னு இருந்தே ஆகணும். என்னவா இருக்கும்? எவ்லவா இருக்கும்? ஏம்ப்பா யாருக்காச்சும் தெரியுமா? இல்ல நிஜமாவே இவரு நம்மளையெல்லாம் பறக்க வெச்சு பாக்கனும்னு ஆசைபடுறாரா? யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன். இவர நம்பி ஏரோப்ளேன்ல ஏறதுக்கும் பயமா இருக்கு. இவரு கொண்டு போய் துபாய்ல விட்டுட்டு உங்களையெல்லாம் இலவசமா சேக்குக்கு வித்துட்டேன்னு சொல்லிட்டு ஓடுனாலும் ஓடிடுவாரு. எதுக்கும் எதிர்கட்சிகளும் கொஞ்சம் சவுண்ட் விடட்டும். அப்போதான் உண்மை என்னனு தெரியும்....
கார்த்திக் - ஹூஸ்டன்,யூ.எஸ்.ஏ
2010-08-19 03:01:23 IST
He makes thing worse... TN government can you put him(Ramadas) in prison for few years till you finish up with Airport project. We desperately needed, look at the other airports in the world also Delhi, Hyderabad they are awesome. Chennai is not compete enough to do that. Please do that quickly !...
சுதாகர் - Chennai,இந்தியா
2010-08-19 02:39:05 IST
தீயசக்தியே! இந்த திட்டத்தை யாரும் யாரும் எதிர்கவில்லை, மாறாக விளை நிலங்களை கையக படுத்தாதீர்கள் எனபது தான் பிரச்சணையே. அதை மாற்றி ஏதோ விமான நிலையமே வராமல் தடுப்பது போன்று பேச்சை மாற்றாதே!....
rajasji - munich,ஜெர்மனி
2010-08-19 02:30:06 IST
விட மாட்டோம் ! விட மாட்டோம் !!! விவசாய நிலங்களை அழிக்க விடமாட்டோம் ! விட மாட்டோம்! விட மாட்டோம் !! விவசாய பெருங்குடி மக்களை தெருவினில் !!! இழக்க மாட்டோம் !!! இழக்க மாட்டோம் தமிழகத்தின் உரிமைகள் எதையும் இழக்க மாட்டோம் !!! உன்னால் காவிரி....முல்லைப் பெரியாறு உரிமைகளை இழந்தோம் !!! இனி நாங்கள் எதையும் இழக்க மாட்டோம் !!! நாங்கள் அமைக்க விருக்கிறோம் ! உரிய இடத்தில் ....விவசாய நிலங்களுக்கு மக்களுக்கு பாதிப்பில்லாமல் !!!வீட்டில் உட்கார்ந்து டிவி யில் செய்தியை பார்த்து தெரிந்து கொள் !!! @ rajasji...
Govind - Saudi,இந்தியா
2010-08-19 01:58:05 IST
ராமதாஸ் ஒரு வடிகட்டின முட்டாள். எதை எடுத்தாலும் கலாட்டா செய்வதை தவிர அவருக்கு ஒன்றுமே தெரியாது. இவர் இப்படி தான் புதிய சென்னை திட்டத்தை எதிர்த்தார்..இப்போது விமான நிலையம் வேண்டாம் என்கிறார்..எதாவது கேட்டால் ஏழைக்கு விமான நில்யதினால் என்ன பயன் என்று கேள்வி எழுப்புகிறார். எலாமே இலவசமாக கொடுப்பது தவறு என்றால் இந்த மாதிரியான நல்ல திட்டங்களை கண் மூடி எதிர்க்கும் பழக்கம் ஏன்? இந்த திட்டத்தினால் மேலும் 2000 முதல் 3000 பேர்க்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும். ஒரு நாட்டுக்கு கட்டுமான வசதி மிக முக்கியமானது. இந்த நாட்டில் எல்லா இடங்களிலும் எதாவது ஒன்று விளையும். ஆனால் விமான நிலையம் அமைய வேண்டும் என்றால் பல விதமான சர்வதேச கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இதை ஏர்போர்ட் இன்ஜினியரிங் படித்த என் போன்றவர்களுக்கு புரியும். இது ஒன்றும் பஸ் ஸ்டாண்ட் இல்லை ..இது ஒரு விமான நிலையம்..ஓடு பாதை அமைக்க வேண்டும்..plane மற்றும் வாகனங்கள் வந்து செல்ல இடம் வேண்டும். ..Approach லேன்டிங் ஏரியாவில் பெரிய கட்டிடங்கள் எதுவும் இருக்க கூடாது..சென்னைக்கு மிக அருகில் இருக்க வேண்டும் என்று பல கஷ்டங்கள் இருக்கின்றன..மாம்பழ தோட்டத்தில் மாம்பழம் தின்று கொண்டு ஜாதி அரசியல் செய்து மரம் வெட்டியவர்களுக்கு இது எல்லாம் தெரியாது சொன்னாலும் புரியாது..புரிந்தாலும் தகராறு செய்வார்...இவரை போன்ற ஜென்மங்களால் நாட்டில் ஒரு நல்லதும் நடக்காது..ஜாதி கலவரம் ஏற்படுத்தி தான் ஒரு மிகபெரிய சக்தி உள்ளவர் என்று காட்டி கொள்ள பார்கிறார் இந்த ஜாதி வெறி பிடித்த தலைவர்...
மகாலட்சுமி - புதுசெர்ரி,இந்தியா
2010-08-19 01:53:15 IST
அய்யா தாத்தா அவர்களே விமான நிலையம் விரிவாக்கம் என்று சொல்லி மணப்பாக்கம் அருகே கட்டி கொண்டிருந்த வீட்டை கட்ட முடியாமல் நிறுத்தி விட்டீர்கள். அதற்கு பதில் ஒரு இடத்தையோ அல்லது மார்கெட் மதிப்புக்குரிய பணத்தையும் செட்டில் ஆக்காமல் இப்போது கிரீன் பீல்டு ஏர்போர்ட் பற்றி பேசுகிறீர்கள். இது என்ன நியாயம் தாத்தா?...
ravi - Chennai,இந்தியா
2010-08-19 01:52:35 IST
ஆடு நனையுதுனு ஓநாய் கவலைப்பட்ட மாதிரி இருக்கே! விமான நிலைய ஒப்பந்தம் எப்படி சொந்தபந்தகளுக்கே பங்கிடப்படும் என்றும், எந்த விசாரணையானாலும் முதுகில் பூணல் இல்லாத குறையை சொல்லி அழும் திறமையை நாடறியும்....
srmselva - stamford,யூ.எஸ்.ஏ
2010-08-19 01:51:35 IST
Mr.Ramados, there is no useful activity from you/your party. At least, do not stop any development activities in TN. Pls keep quiet, that is the biggest favor we expect from you and your great son....
சரவணன் - இண்டியானபொலிஸ்,யூ.எஸ்.ஏ
2010-08-19 01:29:35 IST
ஆமாம், இழப்பு தமிழகத்துக்கு மட்டுமில்லை, தங்கள் குடும்ப வருவாய்க்கும் தான்....
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-08-19 01:23:26 IST
ஐயா தி.தி.தீ (திருக்குவளை திருட்டு தீயசக்தி) மஞ்ச துண்டே, உமது ஒவ்வோர் அசைவும் உனது "குடுமபத்தின்" ஆதாயத்திற்கு என்பது உள்ளங்கை நெல்லியாய் தெரிவது உண்மைதானே? நீர் தெரிவு செய்த அந்த இடத்தை சுற்றி உமது "குடும்ப" உறுப்பினர்கள் "வளைத்து போட்டுள்ள இடத்தின் "மதிப்பு" உயர நீர் செய்யும் இன்னோர் "தில்லு முள்ளு" காரியம் தான் இது. உமக்கு விவசாயம் அழிந்தால் என்ன..மறைந்தால்தான் என்ன பல ஆயிரம் தலைமுறைக்கு "சொத்து" சேர்த்த பின்னரும் "பணத்திற்கு" பேயாய்" அலையும் உமது ஒவ்வோர் அசைவும் அம்மா அவர்களால் அறியப்பட்டு "இனியும்" உம்மால் தமிழகம் சுரண்டப்படுவதை எப்பாடு பட்டேனும் "தடுத்தே" ஆகவேண்டும் என்பதால் தான் இந்த போராட்டமே தவிர நீர் வடிக்கும் நீலிக்கண்ணீர் போல் தமிழகத்தை நினைத்து செய்வதுபோல் இனி நடித்து ஏமாற்றவே முடியாத நிலையில் தள்ளப்படுகின்றீர் என்பதை புரிந்து கொண்டு மரியாதையாய் உமது "குள்ள நரி" குணத்தை மாற்றிகொள்வது உமக்கு நல்லது என்பதை இந்நேரத்தில் சொல்லிகொள்வதை கடமையாய் எண்ணுகின்றேன்.....
velpriyan - chennai,இந்தியா
2010-08-19 01:08:48 IST
பல நல்ல திட்டங்கள் செய்யும் மத்தய அரசும் மாநில அரசும் குறை சொல்லும் admk and pmk ஒழித்துகட்ட வேண்டும்...
ரா.தங்கதுரை - மா.போடையூர்கடலூர்இந்தியா,இந்தியா
2010-08-19 01:01:43 IST
இந்த விசயத்துல முதல்வர் முடிவு சரி. இது அதிசயம் இல்ல. விவசாயம் அஇன்திட்டு இருக்கு. அதுக்கு என்ன முடிவு எடுக்கும், அரசியவாதிக்கு சுவிஸ் வங்கில சொத்து இருக்கு பல தலைமுறைக்கு பிரச்சனையில்ல. ஆனா பாவப்பட்ட மக்கள் என்ன பண்ணமுடியும் . தயவுசெய்து விவசாயத்த கவனிக்க ஏற்ப்பாடு செய்யணும்....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-08-19 00:53:53 IST
அப்பாடா, இந்த ஒரே ஒரு முறையாச்சும் துண்டார் அவர்கள் அர்த்தத்துடன் பேசி இருக்கிறார். அவரு சொல்றது ரொம்ப நியாயமான பேச்சு. இந்த ராமதாஸ் அம்மிக்கல்லு தலையன் பேச்சை கொண்டு போயி குப்பைல போடுங்க. அவன் நாட்டுக்குள்ள எந்த நல்லதுமே நடக்க விடமாட்டான். அவனால ஊருக்குள்ள ஒரு பயலுக்கும் ஒரு கடுகளவு கூட நல்லது நடக்காது. அவன் கால் வெச்ச இடம் பச்சை புல்லு கூட கருகி போவும். ஆமா இவ்வளவு நல்லவன் மாறி பேசி, பழிய தூக்கி தாசு மேல போடுறீங்களே, அப்படி நீங்க மக்களுக்கு நல்லது பண்ணியே ஆகணும்னு மனோகரா ரேஞ்சுக்கு துடியா துடிக்கிறது உண்மையென்றால், அதை அவன் திரும்ப திரும்ப கெடுக்கிறான் என்றால் அவனை ஏன் குண்டர் சட்டதில புடிச்சு உள்ள போடாம கூடி கூடி கொலாவிட்டு இருக்கீங்க. ஜெயலலிதாவும் இந்த விசயத்தில அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை கொடுப்பது தான் சரி. சும்மான்காட்சிக்கும் போராட்டம் பண்ணிட்டு இருந்தா மறுபடி கொடனட்டுக்கே போய் தூங்க வேண்டியதுதான். நீங்க எதிர்கட்சியா இருந்து ஒண்ணுமே பண்ணக்கிடயாது. நல்லா நாலு வருஷம் ஜம்ன்னு தூங்கிட்டு பல்லு கூட விளக்காம அவசர அவசரமா கெளம்பி வந்து ரொம்ப கொடச்சல் கொடுக்க கூடாது. ஏற்கனவே மக்கள் எரிச்சலில் வீட்டுக்கு அனுப்பியது நியாபகம் இருக்கட்டும்....
Louis - USA,இந்தியா
2010-08-19 00:25:09 IST
I strongly agree with Honorable Chief Minister's statement. Mr. Ramados (PMK) and Dr. J. Jayalalitha (AIDMK), better allow my state to go next stage of development. Atleast don't pull the growth towards stone age. And I believe they both are leaders and better behave like one with vision....

கருத்துகள் இல்லை: