வியாழன், 19 ஆகஸ்ட், 2010

ரூ. 2 கோடி பரிசு வழக்கு-ஒத்திவைக்க கோரும் ஜெயலலிதா மனு தள்ளுபடி

சென்னை: ரூ. 2 கோடி பிறந்த நாள் பரிசு வழக்கை ஒத்திவைக்க கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 1992ம் ஆண்டில் முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாளையொட்டி தொண்டர்கள் ரூ.2 கோடி பரிசு வந்தது.
முதல்வராக இருந்த அவர் அதை பணத்தை தனது வங்கி கணக்கில் சேர்த்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
1996ம் ஆண்டில் இது குறித்து சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்து.10 ஆண்டு காலத்துக்குப் பின் 2006ம் ஆண்டி் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார். எனவே, தனது பரிசு பொருள் வழக்கை 2 வாரம் ஒத்திவைக்க வேண்டும் என்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ரவீந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் தங்கள் பதிலை 24ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
பரிசு பொருள் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கடந்த வாரம் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பரிசு பொருள் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் நீதிபதி செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையை 23ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
பதிவு செய்தவர்: மணி
பதிவு செய்தது: 19 Aug 2010 4:27 pm
இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த வழக்கு நடைபெறும்?!?!?!?!?! இப்படியே......... இப்பொழுது என்னக்கு வயது 18 இந்த வழக்கில் தீர்ப்பு வரும் பொழுது என் பேரனுக்கு 18 ஆக இருக்குமோ அல்லது அவனுடைய பேரனின் வயது எத்தனையோ? இந்திய அரசியல் வாதிகளின் வழக்குகள் எப்படிவேண்டுமானாலும் நடைபெறும்?! எத்தனை முறை வேண்டுமானாலும் வாய்தா? வழக்கு ஒத்திவைப்புகோரி மனுதாக்கல்?! நல்லா நடத்துராங்கையா வழக்கை, ஏன்யா? நீதியரசர்களே, வழக்கில் முக்கிய குற்றவாளியாக சொல்லபடுகிற ஜெயலலிதாவே தமிழ்நாட்டு மக்களை வைத்து காமடி கீமடி பன்னுலையே?

கருத்துகள் இல்லை: