வியாழன், 19 ஆகஸ்ட், 2010

தொடர்குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட நாசர் மதானி கர்நாடகாவில் ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறா

பெங்களூரு தொடர்குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட அப்துல்நாசர் மதானி கர்நாடகாவில் ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். இவரிடம் இதுவரை போலீசார் எந்த கேள்விக்கணையும் தொடுக்கவில்லையாம். மதானிக்கு நீரிழிவு ( சுகர் ) நோய் இருப்பதால் அவரது உடல்நிலையை கண்காணிப்பதில் போலீசார் முழு அக்கறையுடன் இருப்பதாக கர்நாடக போலீஸ் வட்டாரத்தின் அடிப்படையில் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

மதானியை டாக்டர்கள் பரிசோதித்தனர்: கேரளாவில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீசார் பெங்களூரு கொண்டு சென்று ரிமாண்ட் செய்யப்பட்டார். 26 ம் தேதி வரை போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது யாரும் அறிய முடியாத இடத்தில் ரகசியமாக வைக்கப்பட்டுளார். மதானியை டாக்டர்கள் பரிசோதித்து உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள போலீசார் ஏற்பாடு செய்தனர். இதில் மதானியின் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு நார்மலாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனை போலீஸ் இணை கமிஷனர் ( குற்றப்பிரிவு ) உறுதி செய்தார்.

குரானும் கையுமாக இருக்கிறார் : மதானி  எந்த நேரமும் குரான் படித்தவாறு இருக்கிறார். இவர் ரமலான் நோன்பு இருந்து வருவதால் இவருக்கு கொடுக்கும் உணவு வகைகளை அதிகாலை பொழுதிலும், பின்னர் மாலை நேரத்திலும் எடுத்து வருகிறார். இவர் சிறிது அளவே உணவு சாப்பிடுவதாக அருகில் துணையாக அமர்த்தப்பட்டிருக்கும் போலீஸ் ஒருவர் கூறினார்.

உணவு வகைகள் என்ன ? : மதானிக்கு போலீசார் வழங்கும் மெனு விவரம் வருமாறு : எலுமிச்சம்பழம் சாறு, உலர் பழ வகைகள் ( பாதாம், திராட்சை, முந்திரி மற்றும் கொட்டை வகைகள்) . ரொட்டித்துண்டு, அரிசி சாதம், வேக வைத்த காய்கறி வகைகள் ஆகும்.

மதானியின் வக்கீல் உஸ்மானுக்கு அவரை சந்திக்க போலீசார் அனுமதி அளித்தனர். ரமலான் நோன்பு மற்றும் மத ரீதியான உரிமைகள் எதுவும் பாதிக்கப்படுகிறதா என்றும் மதானியிடம் விசாரித்து கேட்டுள்ளார். நோன்பு இருப்பதால் இவரிடம் இதுவரை நாங்கள் எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.
கலை - தமிழ்நாடு,இந்தியா
2010-08-19 15:53:25 IST
இதுவரை குஜராத் கலவரம்,மும்பை கலவரம்,பாபர் மஜீத் மூலம் உண்டாக்கிய குற்றவாளிகள் வெளியே!இது தானா ஜனநாயகம்? 9 வருடம் சிறையில் இருந்து நிரபராதி என்று வெளியே வந்த இவருக்கு மீண்டும் சிறைக்கைதி............திட்டம்.......!நல்லுணர்வு கொண்டவரே சிந்தியுங்கள்...!...
பாபு - paris,இந்தியா
2010-08-19 15:52:26 IST
கொலை காரன் காஞ்சி சாமியாருக்கு ராஜ உபசாரம் கொடுத்தால் உங்களுக்கு குளிரும், மற்றவர்களுக்கு கொடுத்தல் குத்துதா...
S .MURALI - Tirupur,இந்தியா
2010-08-19 15:43:15 IST
மதானிக்கு ஆதரவு தருகிறவர்கள் கோவை குண்டுவெடிப்பை பற்றி ஏன் கருத்து சொல்லவில்லை ,மதனியின் பங்கு பற்றி அவர்களுக்கும் தெரியும் ,,...
இன்பத்தமிழன் - chennai,இந்தியா
2010-08-19 15:36:54 IST
யா அல்லா, உன்னை நேசிக்கும் இந்த உயர்ந்த ஆலிமை நீயே உன் பார்வையில் வைத்துக்கொள். இவர் தன்னை சார்ந்து நிற்கும் சிறுபான்மை மக்களுக்காய் உழைப்பவர் ... இவர் இஸ்லாமியராய் இருக்கலாம் ,ஆனால் அனைத்து சிறுபான்மையினத்தவரும் இவருடன் , இவர் ஏற்படுத்தியிருக்கும் கட்ச்சியில் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள். கர்நாடக பா.ஜா.கா. வேண்டுமென்றே உருவாகிருக்கும் கள்ள வழக்கு பொய்த்துப்போகும் உறுதி....
இந்தியன் - India,இந்தியா
2010-08-19 15:29:19 IST
யாரு கோயம்புத்தூர் ல பாம் வச்சாங்க .......
mr தமிழன் - chennai,இந்தியா
2010-08-19 15:24:14 IST
என்ன சார் கொடுமை இது, யாரா இருந்தாலும் சட்டத்தின் முன் எல்லோரும் சமம்தானே , பிறகு எதற்கு , ராஜ உபசாரம் ??? இதுவே சாதாரன இந்திய பிரஜை என்றால்? மத்திய அரசே சட்டங்கள் கடுமையானால் தான், குற்றங்கள் குறையும் என்பது எல்லோரும் உணர்வீர்கள் , ஆனால் நடைமுறை மட்டும் படுத்தப்படவில்லை .....எப்போது அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் நீதி கிடைக்குமோ , அன்று தான் உண்மையான மக்கள் ஆட்சி ..... நன்றி ......
சிக்கந்தர் - papanasam,சவுதி அரேபியா
2010-08-19 15:21:25 IST
மதானி இன்னசென்ட்...
கிருஷ்ணன் - கோவை,இந்தியா
2010-08-19 15:11:35 IST
மதானி ஒரு கொலைகாரன்.. கோவை கலவரம் குண்டு வெடிப்பு சம்பவங்களை நேரில் பார்த்தவன்.. அந்த நினைவு இன்னும் என்னக்குள் இருக்கின்றது.....
தமிழரசன் - namakkal,இந்தியா
2010-08-19 15:09:34 IST
காஞ்சி கொலை கேசில் உள்ள குற்றவாளி சங்கராச்சாரிகள் இப்போது சுதந்திரமாக எல்லா இடங்களுக்கும் போகலாம். சாதாரண மனிதன் கொலை கேசில் குறிப்பிட்ட ஊரில் தங்கி கையெழுத்து போடணும். இது என்ன அவாளுக்கு மட்டும் தனி சட்டம். என்ன கொடுமை? முன்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டு குற்றமற்றவராக நிரூபிக்கப்பட்டு வெளியே வர ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன....
RAJAN - சென்னை,இந்தியா
2010-08-19 15:01:24 IST
Is this important news about the criminal. He was the original criminal in Coimbatore bomb blast during Advani visit. Now also he is the criminal in Bangalore blast. stupid political party and people. when it will change in India.????...
பாபு - மதுரை,இந்தியா
2010-08-19 14:57:47 IST
பாபர் மஸ்ஜிதை முன் நின்று இடித்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அசோக் சிங்கால் உள்ளிட்ட யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானவை என்பது குறிப்பிடத்தக்கது. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் வஞ்சமாக சிக்கவைக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் வாடி சித்திரவதைப்பட்டு உடல்நலம் சிதைந்து சிகிச்சை பெற்று வரும் மதானியை மனிதநேயமற்ற முறையில் மறுபடியும் கைது செய்திருப்பது பா.ஜ.க.வின் வக்கிர குணத்தைக் காட்டுகின்றது....
பாபு - மதுரை,இந்தியா
2010-08-19 14:56:45 IST
குஜராத்தில் ஆயிரக்காணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படவும் லட்சக்கணக்கானோர் சொந்த நாட்டில் அகதிகளாவதற்கும் காரணமான நரேந்திர மோடியை உச்சநீதிமன்றமே நேரடியாக தலையிட்டு கண்டனம் செய்த பிறகும் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் 31 வது குற்றவாளியாக சேர்த்து கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறையினரிடம் அளிக்கப்பட்ட ஒரு வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அதன் உண்மை நிலையை ஆய்வு செய்யாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த கைது நடந்திருக்கிறது...
பாபு - மதுரை,இந்தியா
2010-08-19 14:55:43 IST
மும்பையில் 2000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதற்கு காரணமான (1992-1993) மும்பை கலவரத்தின் சூத்திரதாரி என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அவர்களால் விசாரணைக் கமிஷன் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்ட பால்தாக்கரே இதுவரை கைது செய்யப்படவில்லை. நிலைமை இவ்வாறிருக்க, ஒரு வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முறையாக எந்த விசாரணையும் நடத்தாமல் கேரள மக்களின் பேராதரவு பெற்ற ஒரு அரசியல் தலைவரை கர்நாடக பா.ஜ.க. அரசு கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது...
Nawaz - AlJouf,சவுதி அரேபியா
2010-08-19 14:57:52 IST
மத உணர்வுகளையும் சடங்குகளையும் மதிக்கும் கலாசாரம் இந்திய கலாசாரம். இடையில் ஏற்படுத்தப்பட்ட சில விசமிகளின் அரசியல் விளையாட்டால் இப்போது பிளவுபட்டு கொண்டிருக்கிறோம். ஒவொரு இந்தியனும் வழிபாடுகளால் வித்தியசப்பட்டாலும் நான் ஒரு இந்தியன் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் இந்திய வல்லரசு கனவு விரைவில் நிறைவேறும்....
அன்பு - நெல்லை,இந்தியா
2010-08-19 14:55:37 IST
2007ஆம் ஆண்டு கோவை யிலிருந்து மதானி விடுதலையான பிறகு மதானி எங்கெல்லாம் சென்றார் என்பது கேரள காவல் துறைக்கு தெரியும். இது முழுக்க முழுக்க பொய் கேஸ். ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழலை திசை திருப்ப கர்நாடக அரசின் இந்த கைது நாடகம்...
பைஜி bkk - bangkok,தாய்லாந்து
2010-08-19 14:54:09 IST
மதானி குற்றவாளி என்று நிருபிக்கும் வரை அவருக்கு உள்ள நியாமான உரிமைகளை வழங்க வேண்டும்...
இறை அன்பன் - nellai,இந்தியா
2010-08-19 14:52:48 IST
கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் உள்ள லகாரி எஸ்டேட்டில் மதானி ரகசிய திட்டம் தீட்டியதாக கர்நாடக காவல்துறை குற்றம்சாட்டிய விவகாரத்தில் மதானியின் பங்கு என்ன என்பது குறித்து உண்மை நிலையைக் கண்டறிய கேரள காவல்துறையினரையும் ஒருதரப்பாக சேர்க்க வேண்டும் என மதானியின் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் மத்திய அரசின் சட்டவிரோத செயல்பாட்டு தடைச் சட்டத்தின்படி ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரும் முன்னர் அந்த மனிதருக்கு எதிராக ஆதாரங்கள் உண்டா என தொடர்புடைய அதிகாரி தீவிரமாகப் புலனாய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால் மதானியின் விஷயத்தில் இந்த நெறிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக குமுறுகிறார்கள்...
பாபு - nellai,இந்தியா
2010-08-19 14:50:40 IST
யாரையாவது பிடிப்பது, பின்னர் அவர்மூலம் யாரை சிக்கவைப்பது என ஆலோசிப்பது குறிப்பாக தங்களது வெறுப்புப் பட்டியலில் இருக்கும் ஒருவரை சதியில் சிக்கவைப்பது என திட்டமிடும் தீய சக்திகள் மதானியின் விஷயத்தில் விளையாடி இருக்கக்கூடும். குற்றவியல் சட்டத்தின் பிரிவு 482 ன்படி மவ்லவி அப்துன் நாசர் மதானிக்கு எதிராக எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் குற்றப் பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், நம்ப முடியாத, நடைபெறவே சாத்தியம் இல்லாத ஒரு சதித்திட்டத்தை தீட்டியதாகக் குற்றம்சாட்டி ஒரு பொய்வழக்கை குற்றவியல் பிரிவு பதிவு செய்துள்ளது...
உமர் - Tirunelveli,இந்தியா
2010-08-19 14:45:52 IST
மதானி செய்திருக்க கூடாதென்று அல்லாவிடம் வேண்டுகிறேன். ஒருவேளை அவர் செய்துருந்தால் அல்லாவிடம் தண்டனை உள்ளது. இந்திய சட்டப்ப்டி தண்டிக்க வேண்டும். இப்படிக்கு உண்மை இந்தியன் முஸ்லிம்...
தமிழன் - nellai,இந்தியா
2010-08-19 14:45:34 IST
கர்நாடக குற்றபத்திரிகையில் மதானி கேரளா குடகு , மதன்பூர், போன்ற இடங்களில் தீவிரவாதிகளோடு ஆலோசனையில் பங்கெடுத்தார். மதானி கேரள அரசின் பி பிரிவு பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறார். அவர் எங்கு சென்றாலும் கேரளா அரசு பின் தொடர்ந்து பதிவு செய்கிறது. இதை கேரளா அரசின் ரெக்கார்டில் இந்த இடங்களுக்கு அவர் செல்லவில்லை என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பொய் கேஸ் - இதிலும் அவர் விடுவிக்கபடுவார். நாட்டில் குஜராத் கொலைகாரன் மோடி எல்லாம் வெளியில் நடமாடுகிறான், அப்பாவிகளெல்லாம் உள்ளே இருக்கிறார்கள்...

கருத்துகள் இல்லை: