திங்கள், 16 ஆகஸ்ட், 2010

அ.தி.மு.க.,வில் ஜாதிக்கட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு ஜாதி அமைப்புகளும் ஐக்கியமாகி

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, பிற்படுத்தப்பட்டோர் வயிற்றில் பால் வார்த்துள்ளது. தீர்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு, செப்., 29ல், சென்னை அருகே வானகரத்தில் பாராட்டு விழா நடக்கவுள்ளது.இதற்கு பிள்ளையார் சுழி போட்டது வன்னியர் கூட்டமைப்பு என்றாலும், விழாவை மாநாடு போல் நடத்த, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் முன் வந்துள்ளது. பாராட்டு விழா, தேர்தல் பிரசார மாநாடாக மாறும் நிலை உருவாகியுள்ளது.புதிய தமிழகம், இந்திய குடியரசு கட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு ஆதிதிராவிட அமைப்புகளும் வரிந்து கட்டி களத்தில் குதித்துள்ளன. தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இம்மானுவேல், சேலம் விமான நிலையத்திற்கு அம்பேத்கர் பெயர்களை சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையையும் இவர்கள் முன் வைக்கின்றனர். முஸ்லிம் சமுதாய மக்களின் கோரிக்கைகளை மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் பிரகடனப்படுத்த தயாராகி வருகின்றன.ஏற்கனவே அ.தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டுகள், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் போன்றவை உள்ளன. புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, வன்னியர் கூட்டமைப்பு, பார்வர்டு பிளாக் மற்றும் பல அமைப்புகளும் கூட்டணியில், "லேட்டஸ்டாக' ஐக்கியமாகியுள்ளன.எப்படியும் கூட்டணி கட்சிகளை வைத்து கொண்டு, முதல்வராக அரியணையில் அமர வேண்டுமென்பது ஜெயலலிதாவின் இலக்கு. அதனால், கூட்டணி கட்சிகளிடம் கொள்கை முரண்பாடு, தொகுதி பங்கீட்டு சிக்கல் ஏற்படக் கூடாது என்பதிலும், எந்த ஒரு கட்சியும் கூட்டணியிலிருந்து விலகி விடக் கூடாது என்பதிலும் ஜெ., கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச நியமிக்கப்பட்ட, தேர்தல் பணிக் குழுவினரின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த சில கட்சிகள், அ.தி.மு.க.,வுக்கு எதிராக களம் அமைத்தன. இந்த முறை அதுபோன்ற தவறு நடக்கக் கூடாது என்பதிலும் ஜெ., கவனமாகவே உள்ளார்.கூட்டணி கட்சித் தலைவர்கள், ஜாதி அமைப்புகளின் தலைவர்களிடம் நேரடியாக சந்தித்து பேசுகிறார். அந்த வகையில் சி.என்.ராமமூர்த்தி, தமிழரசன், கிருஷ்ணசாமி, கதிரவன் போன்ற ஜாதி கட்சி, ஜாதி அமைப்பு தலைவர்கள் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ், தே.மு.தி.க., போன்ற பெரிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வரும் பணிகள் ஒருபுறம் நடந்தாலும், சிறிய கட்சிகளுக்கு அ.தி.மு.க., கொடுக்கும் முக்கியத்துவம் அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து நோக்கப்படுகிறது.கடந்த சட்டசபை தேர்தலில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் 20 தொகுதிகளை அ.தி.மு.க., கூட்டணி இழந்தது. சிறிய கட்சிகள் அணியில் இருந்திருந்தால், இது போன்ற தோல்விகள் தவிர்க்கப்பட்டு இருக்கும் என்று ஜெ., நினைக்கிறார். அதன் அடிப்படையில் தான், அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.மேலும், இத்தகைய சிறிய கட்சிகளுக்கு தொகுதிகள் வழங்கப்பட்டாலும், அவர்களை, "இரட்டை இலை' சின்னத்திலேயே போட்டியிட வைத்து, அதன் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும் என்று அ.தி.மு.க., தலைமை கருதுகிறது.எது எப்படியோ, "கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்' என்று தொண்டர்களுக்கு கோவையில் தெம்பளித்து விட்டு, தேர்தல் களத்தில் ஜெ., அதிரடியாக நகர்த்தும் காய்கள் அனைத்துக் கட்சிகளையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருப்பது நிஜம்.

2010-08-16 23:19:16 IST
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன? நாட்டில் தேனும் பாலுமா ஓட போகிறது.எல்லா கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். ஜெயலலிதா எப்படியாவது ஆட்சிக்கு வந்து தன்மேல் உள்ள வழக்குகள் அனைத்தையும் இல்லாமல் ஆக்க பார்க்கிறார்....
குமரி ரபீக் அஹமது - ஹயில்,சவுதி அரேபியா
2010-08-16 23:04:32 IST
முன்பு ஒருமுறை ஐயா கலைஞர் அவர்கள் ஜாதிக்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார்களே , இந்த முறை D M K கூட்டணியில் பா ம க உள்ளிட்ட எந்த ஜாதிக்கட்சிகளையும் சேர்க்க வேண்டாம் தலைவரே. ஜெ யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளட்டும் . எப்படி இருந்தாலும் அவர்களுக்கு தோல்வி நிச்சயம் தானே....
அஷ்ரப் துபாய் - dubai,இந்தியா
2010-08-16 22:07:51 IST
ஜெயா கணக்கு தவறாக கூடும். தனது சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்தால் கூட்டணி உடையும். ஜெயா கணக்கு தவிரக்கூடும். கவனம் தேவை. துபாய் யில் இருந்து அஷ்ரப்...
தா.மாயாண்டி - கோவிந்தபளையம்,இந்தியா
2010-08-16 21:53:24 IST
அம்மா அவர்களே முதலில் ஜாதியை விட்டுத்தள்ளுங்கள். மக்களுக்கு இலவசங்களை என்ன செய்யலாம் என நீங்கள் போடும் மாநாட்டில் அறிக்கை இடுங்கள். ஒட்டு தான வெற்றிகள் குவியம். இளசுகள் முதல் பொருசுகள் இவர்களுக்கு என்ன தேவையே இலவசமாக கொடுங்கள் ....
அவ்வை அரசு - மங்களூர்கர்நாடக,இந்தியா
2010-08-16 20:28:57 IST
மற்றோரை மட்டம் பண்ணி, பட்டப் பெயர் வைக்கும் எங்கள் குல மங்கையே... "தீ"யவை பற்றி முழங்கும் திருசெல்வியே, காட்டு"தீ" போன்று.. உம்மை கட்டுக்குள் வைத்திருக்கும்.. உடன்பிறவா உயிர் கொல்லி - உந்தன் உலகமாய் இருக்கும் மட்டும் - நல்லவை பற்றி உமக்கு பேச எந்தவொரு தகுதியும் இல்லை...அம்மா! அந்த காட்டு தீயை மீண்டும் ... இந்த தமிழ் மண்ணின் வீட்டு தீயாய் எரியவிட்டு ... எங்கள் வாழ்வை சம்பலாக்கிவிடதீர்கள்... தாயே...!!...
vengai - singapore,இந்தியா
2010-08-16 20:06:14 IST
தினமலர் எப்போதும் admk கு சாதகமாகத்தான் எழுதும். பட் நார்த் dist பலமா இருக்கும் வன்னியர் அண்ட் ஆதி திரவிடர் இரு சமூகமும் எண்ணம் வேலியதேன் உள்ளன. சோ இரு கட்சிகளும் எந்த இரண்டு சமுகம் அதரவு இல்லாமல் கண்டிப்பா ஆட்சி அமைக்க முடியாது. மதிப்பிற்குறிய தினமலரே மக்களுக்கும் மாண்புமிகு அம்மாவுக்கும் உண்மையான நிலவரங்களை சொல்லி உதவுங்கள். ஓகே....
N.Siva - Oman.....Ramanathapuram,இந்தியா
2010-08-16 19:35:58 IST
விமான நிலையம் , பேருந்து நிலையம் இவையல்லாம் எல்லா மக்களுக்காக செயல் பட கூடிய ஒன்று. இவையல்லாம் அரசாங்க சொத்து.உங்களுக்கு ஓட்டு வேண்டுமென்றல் மக்களுக்கு நன்மை செய்யுங்கள். கண்டிப்பாக கிடைக்கும். அதை விட்டு விட்டு எந்த ஊரில் எந்த சாதிகாரர்கள் அதிகம் இருகிரர்களோ அவர்களே பார்த்து அவர் பெயர் வைக்கிறேன் இவர் பெயர் வைக்கிறேன் என்று சொல்லி ஓட்டு கேட்காதிர்கள்.மக்களே நம்பி எதுவும் ஓட்டு போடதிர்கள். எல்லாம் போலிதனம்....
ராணி - தேனி,இந்தியா
2010-08-16 19:28:37 IST
விலைவாசியை கட்டுக்குள் வைக்காமல், ரேஷன் கடையில் ஒரு ரூபாய்க்கு அரிசி போடுகிறேன் என்று சொல்கிறார்கள். அதை இவர்கள் மோந்தோ அல்லது தொட்டோவாவது பார்ப்பார்களா? இவர்கள் போடும் அரிசி ஒரு ரூபாய். ஆனால் குழம்புக்கு எண்ணெய் பருப்பு பொடி காய்கறி வாங்க வேண்டுமானால் நூறு ரூபாய். கேட்டால் உலக பொருளாதார மந்தம் காரணம் என்பார்கள். கலர் டிவி என்பது அவ்வளவு கட்டாயம் கொடுக்க வேண்டுமா? அதற்கு பதில் இலவச மேற்கல்வி கொடு. 1991 ல் இந்தம்மா ஆட்சி உண்மையில் மிக கொடுரமான கொள்ளை அடித்த ஆட்சி தான். ஆனால் 1996 லும் 2006 லும் இவர்களது குடும்ப ஆட்சி இலவச இன்சூரன்ஸ் போன்ற சில நன்மைகளை செய்தாலும் பல வகையில் இந்த அறிவு கேட்ட தமிழர்களை டிவி காஸ் நிலம் என ஓசிகளை காட்டியே ஒட்டு மொத்த தமிழகத்தையும் சுரண்டி சன் டிவியாகவும் கலைஞர் டிவியாகவும் மாற்றி சேபாக செட்டில் ஆகி விட்டார்கள். குடும்பமே மந்திரியாகவும் எம்பி யாகவும் இருந்து கொண்டு கேனை தமிழர்களின் பணத்தில் மாநாடு நடத்தி தற்புகழ் பாட வைத்து ரசித்து மகிழும் இது போன்ற தற்குறிகளை நாம் தூக்கி எறிய வேண்டிய வேளை வந்து விட்டது என்பதை மறக்காதீர்கள்....
guru - tiruppathur,இந்தியா
2010-08-16 19:22:15 IST
அம்மாவ அசைக்கக்கூட முடியாது...
க.soundarararajan - அழக்ஹோபர்சவுதிArabia,இந்தியா
2010-08-16 19:15:57 IST
சந்தர்பவாதம்...
கதிரவன் - மும்பை,இந்தியா
2010-08-16 19:00:15 IST
ஜோபெட் தெரிவித்த "பண்டிட் குயின்" என்பது இந்தியாவின் தலைசிறந்த கார்ட்டூனிஸ்ட் RK LAXMAN " THE TIMES OF INDIA" வில் " BANDIT QUEEN" என்று ஜெயலலிதாவின் ஆட்சியின்போது வர்ணித்தது. அதன் அர்த்தத்தை அகராதி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்....
gs - khartoum,சூடான்
2010-08-16 18:46:14 IST
இலங்கை தமிழர்கள் செத்து விழும் போது உண்ணாவிரத நாடகம் போட்டவர் எங்க மஞ்ச துண்டு. தன குடும்பத்தாருக்கு பதவி வாங்க உடனே டில்லிக்கு பறந்தவர் எங்க மச்சான் துண்டு. எங்க தமிழ் மக்களை சாராயத்தில் வீழ்த்தி அவனிடம் வாங்கிய காசையே அவனுக்கு இலவசம், ஓட்டுக்கு பணம் என்று அவனை பிச்சை காரனாக ஆக்கியது எங்க மு.க. மு.க. வினால் தமிழன் வாழ்வு நிமிராது அது நிச்சயம்....
bharathi - pollachi,இந்தியா
2010-08-16 17:49:20 IST
தாத்தாவை அசைக்க முடியது பாட்டியால....
ஜெயக்குமார் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-08-16 17:25:02 IST
ஜாதிய ஒழிக்கணும்னு சொல்லீட்டு இந்த தீய சக்திகள் , ஜாதி வெறிய தூண்டி விட்டுகிட்டு இருக்குதுங்க ,ஆனா ஒண்ணுங்க ,இந்த ஜாதிகள நம்பி, ஜெயலலிதா மீண்டும் தோக்க போவது உறுதி ,ப ம க இல்லீனா எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாதுன்னு ,ராமதாசு சவடால் விட்டாரு , இன்னக்கி அந்தாளோட நிலமைய பார்த்தீங்களா ,எப்படா திண்ணையில இடம் கிடைக்கும் ,ஓரமா ஒட்டிகிலாம் னு, அப்பனும் புள்ளையும் தேவுடு காத்திகிட்டு இருக்காங்க , இந்த ஜாதி கட்சிய வெச்சு அரசியல் பண்ணறவனுக்கெல்லாம் தனியா நின்னா டெபொசிட் கூட கிடைக்காது ,எல்லா ஜாதி தலைவனும் சொல்லற ஒரே வார்த்த" நம்ம இனத்தோட பலம் என்னனு தெரியுமா?? " அதெப்படிடா எவன பார்த்தாலும் நாங்க தான் 60 % ,70 % அப்படின்னு சரமாரியா பொய் சொல்லறீங்க .இந்த ஜாதி தலைவனு கெல்லாம் ,கழகங்கள விட தப்பான ஆளுங்க . எப்படியோங்க ,அடுத்த தேர்தல்லா ,இந்த அரசியல் வியாபாரிகள் எல்லாம் அடிச்சுக்கிட்டு எந்த கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்க கூடாதுங்க .governor ஆட்சி கொஞ்ச நாளுக்கு நெடககட்டும் ( என்ன பண்ணினாலும் தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி இனி தமிழனுக்கு கிடைக்க போவதில்லை ,கழகங்களை ஒழிக்க தேவையான அறிவும் தமிழனக்கு இல்ல .இலவசம் ,டாஸ்மாக், இது தவிர வேற யோசிக்க தமிழனுக்கு நேரம் இல்லீங்க , அதனால தாங்க governer ஆட்சியாவது வந்து, இந்த அரசியல் வியாபாரிகளுக்கு கொஞ்ச நாள் ஒய்வு கொடுக்கலாம்னு ஒரு ஆசை)...
maramandai - nz,நிக்கர்குவா
2010-08-16 17:09:05 IST
தேர்தல் நெருங்க நெருங்க அனைத்து கட்சிகளுமே பயப்பட்டா மாதிரி தெரியுது.... கட்சிகளின் தனிப்பட்ட 'கொள்கை' என்ன ஆச்சு என்றே தெரியவில்லை...... என்னதான் நடக்குதுன்னு பொறுமையா பார்த்துட்டே இருக்கவேண்டியதுதான்............
BALAKRISHNAN - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-16 16:26:40 IST
தமிழ் மக்கள் மீண்டும் கசப்பு மருந்து சாப்பிட வேண்டுமா? தமிழ் மக்களே சிந்தியுங்கள். ஜெயா யார்? நம் தமிழர்களை ஆள என்ன தகுதி இருக்கு. குடும்ப அரசியல் என்று சொல்லாதே. எல்லோரும் தமிழர்கள் தான்....
முத்துவேல் நாடார் - thirunelveli,இந்தியா
2010-08-16 16:25:21 IST
ஜாதிகள் இல்லையடி பாப்பா புஸ்தகத்தில் மட்டும்தான், இங்க வந்து பாரும் தமிழகத்தில் முதல்ல முன்னேற்ற சங்கமாக அரம்பிக்கும அப்பறம் எதாவது முன்னேற்ற கழகத்தில் போயி பல்லக்கு தூக்கும் இவன்களுக்கு என்ன கிடைக்கும் இதிலே? இல்லே இவங்களை நம்பி இருக்கிற ஜாதி சனம் என்ன ஆகும்? பெயரிலே ஜாதி இல்லே. தெரு பெயரிலும் எடுத்தாச்சு. நாயர் தெரு இப்போ வெறும் தெருதான். தேர்தல் வந்தால்தான் இவனுங்க நாபகம் வரும். அப்பறம் நீ யாரோ நா யாரோ. அட போங்கடா போக்கத பயலுங்களா?!...
2010-08-16 16:19:37 IST
கடந்த 2009 ஏப்ரல் மாதத்தில் தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியிலிருந்து விலகினோம். தனித்து 4 நாடாளுமன்ற தொகுதிகளில் களமிறங்கினோம். அதனை அடுத்து நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் தென்காசி நகராட்சி மற்றும் லால் பேட்டை பேரூராட்சிகளில் திமுக, அதிமுக கூட்டணிகளை எதிர்த்து தனித்து நின்று வெற்றி பெற்று பிரதிநிதிகளை அனுப்பிவைத்தோம்.நல்ல மாற்றங்கள் மலரும் என நம்பிக்கை வைப்போம். தோளில் கை போட்டு, கழுத்தை நெறிப்பவர்களை விட, நேரில் மோதும் நபர்கள் நம்பகமானவர்கள் என்ற கருத்து நினைவூட்டத்தக்கது. அவர்களிடம் ஓரளவாவது உறுதியும், நேர்மையும் இருக்கும்....
பேச்சி முத்து - tiruvrur,இந்தியா
2010-08-16 15:39:57 IST
கருணாநிதி திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை கடவுளாலும் காப்பாத்த முடியாது....
உமர் - Nellai,இந்தியா
2010-08-16 15:29:42 IST
தமிழ்நாட்டில் சொத்து சேர்த்தவர் கருணாநதி (இது தமிழ்நாட்டுக்கு சொந்தம்) ஆனால் ஜெயலலிதா தமிழ்நாட்டில் சொத்து சேர்த்து ஆந்திராவில் வைத்திருப்பவர். இது தமிழ்நாட்டுக்கு சேராது. ஆகவே யார் வேண்டும் என்பதை தமிழ் நாட்டு மக்கள் முடிவு செய்ங்கள்....
நஜுமுதீன் - alkhobar,சவுதி அரேபியா
2010-08-16 15:11:27 IST
சாதி கட்சிகளின் கூட்டணியால் 2001 இல் தி மு க பட்டபாடு தமிழகம் அறிந்தது தான். அதே நிலைமைதான் அ தி மு கவுக்கு இந்த முறை, பாவம் மனித நேய மக்கள் கட்சி போன முறை தி மு க சின்னத்தில் நிற்க மாட்டோம் என்று சொல்லி தனியாக நின்று சில ஆயிரம் ஓட்டுகளை பெற்று கொஞ்சம் இருந்த மதிப்பையும் போக்கி கொண்டார்கள். இபோழுது இந்த அம்மையார் இடம் சேர்ந்து கொண்டு மீதம் இருக்கும் மரியாதையும் போக்கி கொள்வதோடு அல்லாமல் இஸ்லாமியர்களுக்கும் இழுக்கை ஏற்படுத்த போகிறார் இந்த ஜவஹிருலாஹ்...
mr தமிழன் - chennai,இந்தியா
2010-08-16 15:07:57 IST
நல்ல மாற்றம் , நல்ல நேரத்தில் வந்துள்ளது , வாழ்த்துக்கள் .............
சந்திர போஸ் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-16 14:43:02 IST
அ.தி.மு.க. அல்ல்லக்கைகளே உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையடா? உருப்படியா எந்த வேலையும் செய்யாம இப்படி ஒவ்வொரு மாவட்டமா கூட்டம் கூட்டினா மக்களோட பொருளாதாரம் எப்படிடா வளரும்? மக்களை எந்த வேலையும் செய்ய விடாதீங்க நீங்களும் செய்யாதீங்க ஒரு பொதுக்கூட்டத்தையும் விடாதீங்க, மக்கள் எல்லாரும் வேலைய விட்டுட்டு உங்க அம்மா நடத்துற பொதுக்கூட்டத்துல கலந்துக்கிட்டா போதும் நாடும் வீடும் வெளங்கிடும். வாழ்க அம்மா! வளர்க அ.தி.மு.க.!...
சக்சஸ் - அபுதபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-16 14:33:12 IST
ஜெயலலிதா தமிழச்சி இல்ல தமிழ்நாட்டை தமிழனே ஆண்டுக்கிறோம். நீங்க போய் கர்நாடகவுல டிராமா போட்டு போழசிகிங்கோ. கருணாநிதி அவர்களே உங்கள் ஆட்சி கொஞ்சம் பரவா இல்ல. மீண்டும் வந்த உங்ககுடும்பதுக்கு சொத்து சேர்த்தது போடும் இப்பவாச்சும் நாட்டுக்கு செய்யுங்க...
tamilkader - dammam,சவுதி அரேபியா
2010-08-16 14:32:36 IST
ஜாதி கட்சி என்ற மண் குதிரையை நம்பித்தான் அய்யாவும் 2001 ல் களம் இறங்கினார் . முடிவு என்ன ஆச்சு? அதே முடிவுதான் செல்வி பாட்டிக்கும் ஏற்படும்...
மாரிஸ்.கே - சென்னை,இந்தியா
2010-08-16 14:31:06 IST
எக்கா ஏற்கனவே முக ஜாதி கட்சிகள கூட சேத்துகிட்டு அனுபவச்சது உங்க நினைவுக்க வரலயாக்கா. அவரு உங்ககிட்டதனக்கா தோத்து போனார். இதுக்கு அப்புறமும் புத்தி இல்லாம ஜாதி காரங்களா சேத்தா உங்களுக்கு நீங்களா குழி தொண்டிகிடுவீங்கலேக்கா...
zamir - chennai,இந்தியா
2010-08-16 14:28:41 IST
Why Jaya is so much after CM post. Why dont she be in opposition for another 5 years? How she would be and what she would do if she is in opposition for another 5 years? I want to see the reality. Possibly she will never attend assemble the rest of 5 years...
rajesh - india,இந்தியா
2010-08-16 14:22:58 IST
தமிழ் நாட்டுல இருக்கிற ஜாதி சங்கங்கள பாத்திங்கன்னா ஏகப்பட்டது , இப்போ புதுசா ஒரு சங்கம் தமிழ் நாட்டுல ரொம்ப தீவிரவாத தனமா முளைச்சுருக்கு. அதுதான் யாதவ மஹா சபைன்னு அவங்களுக்கு 55 சீட் வேனுமாமாங்க , என்ன ஒரு ஆசை பாருங்க. ஆடு மேய்க்கிற கோஷ்டி எல்லாம் 55 சீட் குடுத்தா நாங்க எங்க போறது அண்ணாச்சியோ....
ம.தாஜ்தீன் - trichy,இந்தியா
2010-08-16 14:17:14 IST
தமிழ் நாடு நல்ல இருக்கனும்னா ஜாதி கட்சிகலை DMK யும் ADMK யும் ஜாதி கட்சிகளை மதிக்காம இருக்கனும். ஜாதி கட்சிகள் அணி சேரலாம். அவர்களுக்குள் இருக்கும் பகைமை போகாது. தலைவர்களுக்கு பணம் கிடைக்கும். வோட் கிடைக்காது. ஜெயலித போடும் கணக்கு ஜாதி வெறியை தூண்டும்...
ibrahim - யான்புசவுதிஅரேபியா,இந்தியா
2010-08-16 14:08:18 IST
எதற்க்கெடுத்தாலும் இலவசம், வீடு இலவசம், பம்ப்செட் இலவசம், டி வி இலவசம், ஓட்டுக்கு காசு இலவசம்னு கருணாநிதி அரசு நாட்டை குட்டிசுவராக்கியது போதும். ஜெயா தற்சமயம் திருந்தியது போல் தெரிகிறது. அதனால் அவர் ஆட்சிக்கு வருவதில் தப்பில்லை. வேற வழி ரெண்டு திருடர்களில் யார் கொஞ்சம் பெட்டர்னு பாத்து ஓட்டு போடணும்னு தமிழ்நாட்டு ஜனங்க தலையில எழுதி இருக்கு....
ரஹீம் கஸாலி - புதுக்கோட்டை,இந்தியா
2010-08-16 13:54:10 IST
ஜாதி கட்சிகள் அவிழ்த்து விட்ட நெல்லிக்காய் மூட்டை போல் சிதறிப்போவார்கள்- இது நான் சொல்லலை, கடந்த தேர்தலில் இந்த கட்சிகள் தி. மு.க-வுடன் கூட்டணி சேர்ந்ததும் ஜெயா சொன்னதுதான்....
பூவை.ராஜ.ராஜசேகரன் - பூவாளூர்லால்குடிதிருச்சி,இந்தியா
2010-08-16 13:51:40 IST
அம்மா ஈகோ பார்க்காமல் கீழே இறங்கி வந்ததால்தான் கோவை திருச்சியில் லட்சகணக்காண தொண்டர்களை பார்க்க முடிந்தது. அது போல் கூட்டணி சமயத்திலும் இதுபோல் செயல்பட்டால் அம்மா அடுத்த முதல்வர் ஆவது உறுதி. ஜாதிக்கட்சி மட்டும் போதாது. வைகோவை விட்டுவிட கூடாது. அவர் நமது கட்சிக்கு தேவை. இப்போதே அம்மாவுக்கு வாழ்துக்கள் சொல்லிவிடுகிறேன் பூவை. ராஜ ராஜசேகரன் பூவாளூர் , ( லால்குடி) திருச்சி...
வசந்த் - சிங்கபோரே,இந்தியா
2010-08-16 13:48:44 IST
யோவ் தாசு லாடு லபக்கு தாசு ரொம்ப பேசாதே. தமிழினத்துக்கு தலைவன்னு திருக்குவளையில போயி சொல்லு. இங்க சொல்லாதே. இது மாதிரி சொன்ன அந்த மஞ்சத்துண்டு தலைவனிட முடியுமா. தமிழ்நாட்டில பிழைக்க வழியில்லாத காரணத்தினால் தான் தமிழன் வெளி நாட்டில வேலை செய்யிறான். கொஞ்சமாவது புத்திய பயன் படுத்து. இல்ல நீயும் சேந்து மேளம் அடிக்காதே. திருட்டு ரயில் ஏறி வந்தவரெல்லாம் தலைவரா. அதுக்கு தகுதி வேணும்....
விஜய் - சென்னை,இந்தியா
2010-08-16 13:46:50 IST
இந்த ஜாதி கட்சிகளை எல்லாம் நீங்கள் கூட்டணியில் சேர்த்தால் உங்களுடைய செல்வாக்கு குறைந்து அந்த தீயசக்தியின் செல்வாக்கு பெருகிவிடும்.எனவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்து அந்த ஜாதிகட்சியினரை விரட்டி விடுங்கள்.அது போல தமிழனுக்கு பெரிய துரோகம் செய்த சோனியாவின் காங்கிர‌ஸோடும் கூட்டணி வேண்டாம்....
samy - kandhagar,ஆப்கானிஸ்தான்
2010-08-16 13:09:44 IST
தமிழன் பேரை சொல்லி நாட்டை கெடுத்து வீட்டை வாழவைக்கும் கருணாநிதியே! என் இன தமிழன் இனிமேலாவது நன்மை பெறட்டும். வழிவிடு...
devi - Madurai,இந்தியா
2010-08-16 13:03:07 IST
மனிதர்களாக இருந்தால் மனதில் கை வைத்து சொல்லட்டும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இவ்வாறு மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்படுகிறதா? இன்று தமிழகம் நம்பர் ஒன்று மாநிலமாக திகழ திமுக அரசே காரணம். அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு இருண்டு மிகவும்பின்தங்கிய மாநிலமாக பீகாரை விட கேவலமாக இருந்ததை இந்தியா டுடே இதழின் கருத்து கணிப்பு தெரிவித்ததே! மகளிர் எல்லாம் திமுக ஆட்சி தொடர உதயசூரியனுக்குத்தான் வோட்டு போடுவோம்....
சி.ராமசாமி - tup,இந்தியா
2010-08-16 13:01:38 IST
தேர்தல் ஜுரம் இப்பவே வந்துரிச்சு....கோவை குலுங்கியது...கோவையை விட திருச்சி திமிறியது....இடையில் கூட்டணி 'கை' கூடி வந்தால் ஆட்சியில் பங்கு...நிம்மதியா தூங்கரவங்களுக்கும் இனி தூக்கம் வராது......
பாஸ்கர் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-08-16 12:59:30 IST
அய்யா தினமலர் ஆசிரியரே , ஜால்ரா கொஞ்சம் சாஸ்தியா இருக்கே !!!! என்ன காரணம் ???????? நீங்க எழுதினா அப்படியே நடந்திருமா!!!!!!!!!!!!!...
chidambaram - கோலாLumpur,மலேஷியா
2010-08-16 12:57:25 IST
The Congress led Central Government decides to take a Population census based on Caste/Jathi . All parties support this. But in practice they all talk of caste politics as something of a untouchable subject.What double standard is this.So stop condemning caste as you and i know that Caste system is here to stay and cannot be eradicated. When you are poor you blame the caste heirachy,but when you have made it rich you will be the first person to take pride in your caste. This is what I have observed....
செந்தில் - மதுரை,இந்தியா
2010-08-16 12:56:54 IST
வாயிதா ராணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்!!!, நினைத்து கூட பார்க்க முடியாது என்ன நடக்கும் என்று. இவரை போல ஒரு கேவலமா ஒரு முதல்வரை இந்த உலகத்திலேயே பார்க்க முடியாது. அது மட்டும் உண்மை....
ravi - chennai,இந்தியா
2010-08-16 12:51:13 IST
எப்படியும் ஆட்சியை ஆ தி மு க விடம் கொடுத்துவிட்டு பிறகு நாலரை ஆண்டு காலம அம்மாவுக்கு எதிராக போராட்டம் நடத்த போகிறார்கள் இந்த கூட்டணி கட்சியினர்...
ali - அபுதாபி,இந்தியா
2010-08-16 12:14:32 IST
அய்யா மீண்டும் மீண்டும், ஒறே கட்சி ஆட்சிக்குவந்தால், ஆணவமும் அநியாயமும் அதிகரித்துவிடும் ,தமிழ்மக்களே சிந்தித்து செயல்படுங்கள், சென்னைக்கு ஒரு முதல்வர் ,மதுரைக்கு ஒரு முதல்வர் ,என்று வராமலிருக்க தமிழகத்தை காக்கவேண்டும் ,மேலும் தமிழ் ஒன்று இந்திய பிரதமராக வேண்டும் ,...
Ram - Bangalore,இந்தியா
2010-08-16 12:11:22 IST
இந்த இரண்டு கட்சிகளுமே தங்களை வலுப்படுதுவதிலே குறியாக இருக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் விரட்ட பட வேண்டும். இவர்களுக்கு எந்த கொள்கைகளும் இல்லை. மூன்றாவது அணி, நல்ல கொள்கைகள் உள்ள கட்சி ஆட்சிக்கு வர வேண்டும்....
மனிதேவர் - tirunelveli,இந்தியா
2010-08-16 12:10:54 IST
தம்பி ரவி , நீ தமிழ்நாட்டில் இருந்திருந்தால் உனக்கு கலைஞர் ஆட்சி பற்றி தெரிந்திருக்கும் , விலைவாசி எங்கே போய் நிற்கிறது , நீ வெளிநாட்டில் இருந்து கொண்டு ஜெயலலிதாவை குறை சொல்லிக்கொண்டு இருக்கிறாய் , மக்கள் வரி பணத்தை எல்லாம் அவன் அப்பன் வீட்டு பணம் போல் பல கோடி செலவில் மாநாடு நடத்தினர் ,இது உனக்கு தெரியுமா ? அவன் கட்சியில் ஆள்க்களே இல்லாத மாதிரி அவன் குடும்பம் முழுவதும் பதவி சுகம் அடைகிறார்கள் , இதெல்லாம் உனக்கு தெரியாதா?...
கதிர் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-08-16 12:09:16 IST
Somehow tamilnadu requires minority DMK Government to be replaced ... . . ....
கலிஸ் - ஜெநோவாஹ்,இந்தியா
2010-08-16 12:07:23 IST
AIADMK will won in more seats, and Jaya will get chance to sworn in as CM for a minority govt., as like Karunanithi now....
rajusundaram - bahrain,இந்தியா
2010-08-16 12:05:21 IST
jayalalitha ஆரசு poovar makkaluku udaviya aarasu...
நஜீப் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-16 11:59:13 IST
எத்தனை ஜாதி ஒன்று சேர்த்தும் மு க வை ஒன்னும் செய்யமுடியாது.அவர் செய்த 108 ஆம்புலன்ஸ் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி மற்றும் காப்பிட்டு திட்டம் இது போதும்.மீண்டும் அவரை முதல்வர் ஆக மக்கள் ஓட்டு போடுவார்கள்....
Johnbabusha - Dubai,இந்தியா
2010-08-16 11:46:02 IST
To day no comedy news about Mr.Ramdass....
கமல் - chennai,இந்தியா
2010-08-16 11:45:33 IST
நண்பர் ஜோபெட் நீங்கள் கலைஞர் அவர்களுக்கு ஒரு நல்ல தூக்கு தூக்கி.கலைஞர் ஒரு அரசியல் சாணக்கியர் அல்ல அரசியல் சகுனி.நீங்கள் அவரின் ஆஸ்தான அல்லக்கை.நீங்கள் இங்க எழுதுவது நரி ஊளைவிடுவது போல் உள்ளது....
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-08-16 11:29:08 IST
நண்பர் ஜோபெட் அகராதியில் நடுநிலையாளர்கள் என்றால் திமுகவுக்கு சொம்படிப்பது தான் நடுநிலை, யாராவது அதிமுகவுக்கு ஆதரவாக பேசினால் அது சொம்படிபது, திமுகவுக்கு சொம்படிதால் அது நடுநிலை. ஜோபெட் கருத்துக்களை நான் ஆர்வமாக படிப்பேன் ஏன் என்றால் அவைகள் ஒரு சிறுபிள்ளை தனமாக நகைச்சுவையாக இருக்கும், அவைகளை ராமதாஸ், டி. ராஜேந்தர் லிஸ்டில் சேர்க்கவேண்டும். யாருப்பா அந்த சேட்டு, ஏற்கனவே ஜோபெட், செந்தில் சொம்படிது காதுல ரத்தம் வருது, இப்போ இவன் வேற, ஒரு நாளுல எத்தனை பேர் தான் சொம்படிப்பீர்கள்? தயவு செய்து உங்களுக்கு சொம்படிக்கும் ஆசை இருந்தால் கோபாலபுரத்தில் போய் அடியுங்க. திருக்குவளை தீய சக்தி திருச்சி மாநாட்டை பார்த்து பயந்து போய் இலவசங்காய் வாரி இறைக்குது, அது தப்பு நு தெரிந்தும் சப்பை கட்டு கட்டுதுங்க, இதுங்க எல்லாம் படித்த சொம்படிசான் குஞ்சின்களா, இல்ல படிக்காத சொம்படிசான் குஞ்சின்களா?...
ரவி - doha,கத்தார்
2010-08-16 11:24:33 IST
2001 தேர்தலில் முதல் ஆளாக கிருஷ்ணசாமி கூட்டணியில் சேர்ந்து பத்து தொகுதியும் பெற்றார். அதன் பின்பு எல்லா ஜாதி கட்சிகளும் சேர்ந்ததால் திமுக அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியைவிட நல்லாட்சி செய்தும் தோல்வி அடைந்தது வரலாறு. எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லாரையும் கூட்டு சேர்த்துப்பாருங்கள். அப்புறம் தெரியும் "வாய்தா ராணி" நிரந்தரமாக "சிறை ராணியாவது" நிச்சயம். அங்கேயும் ஒரு சலுகை உண்டு. வெள்ளை சேலைக்கு பதிலாக பச்சை சேலை கட்டிக்கொள்ளலாம்....
Saleem - Dubai,இந்தியா
2010-08-16 11:21:27 IST

கருத்துகள் இல்லை: