Vicky Vigneswaran யார் இந்தப் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் மிஷேல் ஆனந்தராஜா?
மிஷேல் ஆனந்தராஜாவின் உண்மையான பூர்வீகம் வெளியே தெரியாமல் மறைத்து வைக்கப்படுகிறதா என்ற கேள்வி பல இடங்களில் இருக்கிறது. 'அவரது பெயரை வைத்துக்கொண்டு அவரை ஓர் இந்தியர் என்று சொல்லமுடியும்' என்ற ஊகங்களும் இணையத் தளங்களில் உள்ளன. அவையெல்லாம் உண்மை அல்ல.
அவரைப் பற்றிச் சொல்வதற்கு அவரை விடவும் பொருத்தமானவர் யார்?
அவரே சொல்லும் நேரடியான சுயதரவு இது.
சிறிது நேரம் எடுத்துக்கொண்டு என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நான் இங்கிலாந்தில் பிறந்தேன், ஆனாலும் நான் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவள்.
நான் கடந்த 25 ஆண்டுகளாக பெரிய பொது மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவராக இருந்ததன் மூலம் அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள மக்களுக்குச் சேவை செய்து வருகிறேன். இந்தக் காலகட்டத்தின் அரைவாசிக்கு மேற்பட்ட காலத்தில் அருகில் உள்ள மிகப்பெரியதும் பரபரப்பானதுமான மருத்துவமனைகளில் ஒன்றான ஆல்ஃபிரட் மருத்துவமனையிலிருந்து ஹிக்கின்ஸ் சமூகத்திற்குச் சேவை செய்திருக்கிறேன். நான் ஓர் ஆராய்ச்சியாளரும் ஆவேன். இந்தப் பெருந்தொற்று நோய்காலத்தின் போது சுகாதாரப் பணியாளர்களுக்குச் சிறந்த உடல்நலம் மற்றும் பாதுகாப்புத் தரங்களுக்கு பணி நியமங்கள் இருக்கவேண்டும் என்று வாதிடும் ஒரு செயற்பாட்டாளராக இருக்கிறேன்.
மேலும் நான் இரண்டு குழந்தைகளின் தாய் என்ற அடிப்படையில் ஒரு பெற்றோராகவும் இருக்கிறேன். பல புலம்பெயர்ந்தோரைப் போலவே எனது கதையும் தலைமுறைகளுக்கு ஊடாக மேல்நோக்கி நகரும் அபிலாஷை கொண்ட ஒன்றாகும். ஒரு சமநிலையான வீட்டுச் சூழல் மற்றும் மகிழ்ச்சியுடன் அரவணைத்துக்கொள்ளும் ஒரு நாடு என்பவற்றுக்கு ஊடாகவே இந்த நிலைமையை நாம் எட்டினோம்.
இந்த ஆதரவையும் அரவணைப்பையும் திருப்பி இந்த நாட்டுக்குத் தருவதற்காக எனக்கு கிடைத்த வாய்ப்பு இது.
==
மிஷேல் ஆனந்தராஜாவின் லேபர் கட்சி வெல்ல முடியாத தொகுதி என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு தொகுதி Higgins. இந்த நாட்டின் முன்னைய மூத்த அமைச்சரான Peter Costello பத்தொன்பது ஆண்டுகளாக வென்ற தொகுதி அது. முதல் தடவையாக அங்கே Labor கட்சி வென்றிருக்கிறது!
சிட்னி பல்கலைக்கழகத்தில் (1997) மருத்துவராகப் பட்டம் பெற்ற மிஷேல் ஆனந்தராஜா மெல்பேண் பல்கலைக்கழகத்தில் (2004) தமது முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக