ஞாயிறு, 22 மே, 2022

அமரர் ராஜீவ் காந்தி ஒரு சாதாரண இந்திய பிரதமர் அல்ல ..

ராதா மனோகர்  : அமரர் ராஜீவ் காந்தி ஒரு சாதாரண இந்திய பிரதமர் அல்ல ..
இன்று இந்தியாவில் எல்லோரும் அனுபவிக்கும் தகவல் தொடர்பு புரட்சிக்கு முதலில் கதவை திறந்தவர் ராஜீவ் காந்தி
வண்டில் மாட்டு வேகத்தில் இருந்த தொலைபேசி தொடர்பை நவீன படுத்தவேண்டும் என்று அமெரிக்காவில் இருந்த சாம் பிட்ரோடாவை அழைத்து அது பற்றி ஒரு புதிய கொள்கையை வகுத்து வேகமாக அதை முடிக்கி விட்டவர் ராஜீவ் காந்தி
 Sam Pitroda  is an Indian telecom engineer, inventor and entrepreneur. He is popularly known as the Father of India's Computer and IT Revolution as he helped Prime Minister Rajiv Gandhi in bringing computerization as an advisor to the PM.[citation needed] He was also an advisor to the PM during Dr. Manmohan Singh's tenure (the print )
அதை நடைமுறைப்படுத்தி அந்த கனவை நனவாக்கியவர் ஆ ராசா.  
அமெரிக்க அதிபராக ரீகன் இருந்த சமயத்தில் இந்தியாவுக்கு சூப்பர் கொம்பியூட்டர் தேவை என்று ரீகன் நிர்வாகத்தோடு கடுமையாக முயன்றார்


அது அதிக செலவு மற்றும் கிடைப்பதில் உள்ள சிக்கல் போன்றவற்றை அலசி இந்தியாவிலேயே சூப்பர் கம்பியூட்டர் (பரம்)
 (When the US refused to sell the Cray supercomputer to India in the mid-1980s, because it believed India would use these dual technologies to promote its nuclear weapons and missile programmes, India set up the Centre for Development of Advanced Computing in March 1988, which was mandated to develop an indigenous supercomputer.  PARAM – India’s First Supercomputer  theprint.in)  
உருவாக்கி பெரும் சாதனையை நிகழ்த்தினார்  
அதன் காரணமாகவே இந்திய அணு ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வெற்றி பெற்றது
 .இந்திய கணினி புரட்சி வரலாற்றில்  ராஜிவ் காந்தி பெயரை தவிர்த்து விட்டு எதையும் எழுதிவிட முடியாது.
இந்தியாவின் திறந்த பொருளாதார கொள்கையை பெரிதும் அறிமுக படுத்தியவர் ராஜீவ் காந்திதான்.
அதன் மூலம்   உலக பொருளாதார மைய நீரோட்டத்தோடு இந்தியாவை இணைப்பதில் அவர்  வெற்றி கண்டார் .
 அவர் இட்ட அத்திவாரத்தில்தான் நரசிம்ம ராவும் வாஜ்பாயும் மன்மோகன் சிங்கும் இந்தியாவை  ஒரு வளர்ந்து வரும்  வல்லரசாக முன்னேற்றினார்கள்.
இந்த பின்னணியில் நின்று கொண்டுதான் அமரர் ராஜீவ் காந்தியின் ஆளுமை உலக அரங்கில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கணிக்க முடியும் .
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது
ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடையவர்களை விடுதலை செய்தால்; அதை கொண்டாடி தங்களின் வெற்றியாக கட்டமைக்க தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் புலி ஆதரவாளர்கள் தயாராகவே உள்ளார்கள் என்பதுதான்.
அவர்களுக்கு இது ஒரு பிரசார ஆயுதமாக எதிர்காலத்தில் பயன்படும் என்ற எண்ணம் நடுவண் அரசுக்கு இருக்குமா? இருக்காதா?    
பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கவதென்பது வெறுமனே இந்திய அரசு மட்டும் சம்பந்தப்பட்ட விடயம் அல்லவே ?
மேற்கு நாடுகளின் அபிப்பிராயங்களை இந்திய அரசு உதாசீனம் பண்ணி விட முடியுமா?
அமரர் ராஜீவ் காந்தியின் கொலை என்பது வெறுமனே புலிகள் மட்டும்தான் செய்ததாக கருதினாலும் கூட,
 அப்படி நடக்கும் என்று சுப்பிரமணியம் சாமி போன்றவர்களும் நரசிம்ம ராவ் போன்றவர்களும் கூட எதிர்பார்த்திருக்கலாம்,
 பின்பு நடந்த சம்பவங்கள் பல அதைத்தான் கூறுகின்றன .
 ராஜீவ் காந்தியை விட நரசிம்மராவ் ஆர் எஸ் எஸ் க்கு உகந்தவராக இருந்தாரே?
இந்த விடயத்தில் கூட ஆர் எஸ் எஸ் கு எது விருப்பமோ எது தேவையோ அதைத்தான் பிரபாகரன் செய்திருக்கிறார் .
இப்போதும் அதே வழியில்தான்  தமிழகத்தில் இருக்கும் புலி ஆதரவு அரசியல் கட்சிகள்  இயக்கங்கள் சென்று  கொண்டிருக்கின்றன.   
புலி ஆதரவாளர்களின்  இன்றைய ராகுல் , சோனியா பிரியங்கா போன்றவர்கள்  மீதான வெறுப்பு பிரசாரம் கூட ஆர் எஸ் எஸ் இன் விருப்பங்களை பிரதிபலிப்பவைதான்   .
ஆர் எஸ் எஸின் சித்தாந்தங்களோடு இவர்களுக்கு இருக்கும் காதல் ஒன்றும் அதிசயமானது அல்ல .
இந்த ஏழுபேரும் விடுதலை  செய்யப்பட்டால் புலி பிரசாரத்தை முடிக்கி விட பலர் தயாராகவே இருப்பார்கள்
குறைந்த பட்சம் நெடுமாறன் மணியரசன்  சீமான் வைகோ திருமா. மற்றும் ஏராளமான பெரியார் தொண்டர்கள் எல்லோரும் இதில் அடக்கம்   
இந்த ஏழுபேரும் இதில் இருந்து விடுபடுவதற்கு  வழி இருக்கிறது.
 அதற்கு   :
இவர்கள் தங்களின் நிருபிக்கப்பட்ட குற்றங்களுக்கு முதலில் மன்னிப்பு கேட்கவேண்டும்.
 புலிகள் இயக்கத்தின் கடந்த கால தவறுகள் தங்களின் அறியாத வயதில் விபரம் புரியாமல் ஈடுபட்டோம் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் .
 இனி என்ன காரணம் கொண்டும் எந்த புலி ஆதரவாளர்களோடும் எந்த தொடர்பும் வைத்து கொள்ள மாட்டோம் என்று உறுதி அளிக்கவேண்டும்.
இதுவரை தமிழகத்தில் இலங்கை தமிழர் பிரச்சனைகள் என்றால் அதை புலிகளின் கோணத்தில் மட்டுமே பார்த்து பழகிவிட்ட தமிழக தலைவர்கள் தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதை பகிரங்கமாக அறிவித்து மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
இந்த ஏழுபேரும் தமிழக புலி ஆதரவு அரசியவாதிகளை விட்டு விலகவேண்டும்.
மேற்கண்ட விடயங்களை உள்வாங்கி  நன்றாக சிந்தித்து செயலாற்ற முனைந்தால் இந்த ஏழுபேரின் விடுதலையும் சாத்தியமே.

கருத்துகள் இல்லை: