வீரகேசரி : திறந்த கணக்குகள் மூலம் இறக்குமதி செய்வதை தடை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சுமார் 500 கொள்கலன்கள் விடுவிக்க முடியாதுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன கூறுகையில்,
திறந்த கணக்குகள் மூலம் இறக்குமதி செய்வதை தடை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 500 கொள்கலன்கள் தேங்கி இருக்கிறது.
மேலும் வெங்காயம், உருளைக்கிழங்கு, பூண்டு, பருப்பு, உலர் உணவுப் பொருட்கள் போன்ற இலகுவில் பழுதடையும் அத்தியாவசிய பொருட்கள் இதில் காணப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 500 கொள்கலன் களையும் விடுவிக்குமாறு அதிகாரிகளிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கொள்கலன்களுக்கு மேலதிகமாக, டொலர் பிரச்சனை காரணமாக சுமார் 300 முதல் 400 கொள்கலன்களில் உணவு கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கி கிடப்பதாகவும், அந்த கொள்கலன்களில் இலகுவில் பழுதடையும் உணவுப் பொருட்கள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக