வெள்ளி, 27 மே, 2022

வெயிட் அண்ட் சீ': கே. எஸ். அழகிரியிடம் சோனியா

டிஜிட்டல் திண்ணை: 'வெயிட் அண்ட் சீ':  கே. எஸ். அழகிரியிடம் சோனியா

மின்னம்பலம் : சென்னையில் நேற்று மே 26ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் ஏறுவதற்கு சுமார் ஒன்றரை மணிநேரம் முன்பு... டெல்லியில் மாலை 4.30 மணிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின் முக்கியத்துவம் என்ன?" என்று அந்த புகைப்படத்தை அனுப்பி இடம் சுட்டி பொருள் கேட்டது.
ஒரு ஸ்மைலியை முன்னோட்டமாக அனுப்பிவிட்டு இன்ஸ்டாகிராமின் கேள்விக்கு
பதில் டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ்அப்.
"தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த காலகட்டம் மிக முக்கியமானது.


தமிழகத்திலிருந்து திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு ராஜ்யசபா சீட் யாருக்கு என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பு இந்த சந்திப்பு நடந்தது.

இன்னொரு முக்கியத்துவம் கடந்த மே 18ஆம் தேதி ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததை தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் அதிர்வுகள் ஏற்பட்ட நிலையில் இந்த சந்திப்பு நடந்து இருக்கிறது.

டெல்லி வட்டாரத்தில் விசாரித்தபோது... ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அண்மையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு நடந்தது. அதில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் தேர்தல் சீட் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இந்த வகையில் தற்போது கார்த்தி சிதம்பரம் மக்களவை எம்பியாக இருக்கும் நிலையில் அவரது தந்தையான ப.சிதம்பரம் ராஜ்யசபா எம்பியாக ஆக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே அளவுகோலை சோனியா காந்தி குடும்பத்துக்கும் பொருந்துமா என்றும் காங்கிரசுக்குள் குரல்கள் கேட்கின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் சோனியா காந்தியை சந்தித்தனர். வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள 'டாஸ்க் ஃபோர்ஸ் 2024' அமைத்திருக்கும் சோனியா அதில் சிதம்பரத்தை முதன்மைப் படுத்தி இருக்கிறார். இந்தப் பின்னணியிலும் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ குறி வைத்துள்ள அரசியல் சூழலிலும் அந்த சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்புக்கு அடுத்த நாளான நேற்று மே 26தான் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி டெல்லியில் சோனியாவை சந்தித்துள்ளார். அழகிரி 2019 மக்களவை தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடவில்லை. 2019 மக்களவைத் தேர்தலில் 9 பேர் போட்டியிட்டு 8 காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் 25 காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டு 18 பேர் வெற்றி பெற்றனர். இந்த அடிப்படையில் அழகிரி தனக்கு ராஜ்யசபா பதவியை எதிர்பார்க்கிறார். ஆனால் உதய்பூர் பிரகடனத்திற்கு பிறகும் சிதம்பரம் ராஜ்யசபா எம்பியாக ஆக்கப்பட்டால் கட்சியின் முடிவை கட்சித் தலைமையே மீறுகிறது

என்ற விமர்சனம் எழும்.

இன்னும் சொல்லப்போனால் சிதம்பரத்தை ராஜ்யசபா எம்பி ஆக்க வேண்டாம் என்பதற்காகவே இப்படி ஒரு விதி கொண்டுவரப்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பேச்சு இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் சிதம்பரத்தை தவிர வேறு யார் ராஜ்யசபா எம்பி என்ற கேள்வி வந்தால் அதில் அழகிரி முன்னணியில் இருக்கிறார். அவரது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி காலம் நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் ராஜ்யசபா எம்பி ரேஸில் அழகிரியும் இருக்கிறார்.

இந்த பின்னணியில் சோனியா அழகிரி சந்திப்பு நடந்துள்ளது. ராஜ்யசபா எம்பி பற்றி கட்சி தலைமை முடிவெடுக்கட்டும் என்று சோனியாவிடம் கூறிய அழகிரி... அதேநேரம் பேரறிவாளன் விவகாரம் பற்றி சோனியாவிடம் விளக்கியிருக்கிறார்.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதும் தமிழக முதல்வரும் தமிழகத்தில் கூட்டணி தலைவருமான ஸ்டாலின் தன்னை சந்திக்க வந்த பேரறிவாளனை கட்டி அணைத்தது பற்றியும், அதற்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்திருப்பது பற்றியும் சோனியாவிடம் தெரிவித்துள்ளார் அழகிரி.

மேலும் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான மே 21 ஆம் தேதி உதகமண்டலத்தில் இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீரென சென்னையில் இருக்கும் கட்சியின் பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், சட்ட அமைச்சர் ரகுபதி, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், தலைமைச் செயலாளர் மற்றும் வழக்கறிஞர்களோடு வீடியோ கான்பரன்சிங் முறையில் திடீரென ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

அதில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல ராஜீவ் கொலை வழக்கில் இருக்கும் மீதி ஆறு பேரையும் விடுதலை செய்வதற்கான சட்ட சாத்தியங்கள் பற்றி விவாதித்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் முறையிடலாமா அல்லது மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கலாமா, அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கலாமா என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கும்போது அதுவும் குறிப்பாக ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தன்று இந்த ஆலோசனையை தமிழக முதல்வர் ஸ்டாலின் நடத்தியிருப்பது தமிழகக் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரிய வேதனையை ஏற்படுத்தி இருப்பதாக சோனியாவிடம் தெரிவித்துள்ளார் அழகிரி.

அதுமட்டுமல்ல மே 26-ஆம் தேதி சென்னைக்கு பிரதமர் மோடி வருகையின்போது திமுக தனது நிர்வாகிகள் மூலம் பிரதமருக்கு வரவேற்பளிக்க திட்டமிட்டது பற்றியும் சோனியாவிடம் தெரிவித்துள்ளார் அழகிரி.

ராஜ்யசபா, பேரறிவாளன் விவகாரத்தில் திமுகவின் அணுகுமுறை, பிரதமர் மோடியின் சென்னை விசிட்டில் திமுக அணுகுமுறை உள்ளிட்ட விஷயங்கள் பற்றி சோனியாவிடம் விறுவிறுவென விவரித்திருக்கிறார் அழகிரி.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட சோனியா காந்தி தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியிடம், 'வெயிட் அண்ட் சீ' என்று கூறியிருக்கிறார்.

நேற்று சோனியாவுடன் சந்திப்பு முடிந்த பிறகு உடனடியாக சென்னை திரும்பாத அழகிரி இன்றும் டெல்லியில் தான் இருக்கிறார்" என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

கருத்துகள் இல்லை: