நக்கீரன் : 40 பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானமானது ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தான்சானியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பயணிகள் சிறிய பயணிகள் விமானம் மோசமான வானிலை காரணமாக விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் சுமார் 328 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானத்தின் எஞ்சின் பழுதடைந்து எதிர்பாராத விதமாக ஏரிக்குள் பாய்ந்தது.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திங்கள், 7 நவம்பர், 2022
தான்சானியாவில் பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து 19 பேர் உயிரிழப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக