மின்னம்பலம் - Prakash : சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவியின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டுக்கு சொந்தமான சொத்துக்கள் உள்பட ரூ.14.23 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக நிலம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் மற்றும் லேண்ட் மார்க் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த உதயகுமார் ஆகியோருக்கு சொந்தமான மொத்தம் ரூ.14.23 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மனைவி பர்வீன், துர்கா சங்கர், உதயகுமார் ஆகிய 3 பேருக்கு சொந்தமான சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை, கடந்த ஜூலை மாதம் ஜாபர் சேட் மற்றும் அமைச்சர் ஐ.பெரியசாமியிடமும் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.ஜெ.பிரகாஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக